இயற்கை மூலிகை மருத்துவம்
-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.
அனுபவ வைத்திய முறைகள்
1. வயிற்றைக் கவனித்து வாயைக் கட்டினால் வைத்தியன் தேவையில்லை. புளிப்பு சுவை அதிகமா? அமிலதன்மை, வலி, புண், வாயு உணர்ச்சி மிகும்.
அஜீரணம் ‡ ஜீரகம் 10, மல்லி 10, இந்துப்பு 5 (பொடி) + இஞ்சி 50 + லெமன் சாறு.
2. அஜீர்ணபேதி - ஓமம் + மிளகு + சர்க்கரை மூன்றும் கலந்து காலை, மாலை ஒரு டீஸ்புன்.
குடற்புழு ஒழிய ‡ ஓமம் + பணங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிடு.
வயிற்றுவலி போக ‡ ஓமம் + இந்துப்பு வெந்நீரில் கலந்து பருகவும்.
3. சத்து பற்றாக்குறையால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. நீங்கள் தொடர்ந்து விரும்பி உண்ணும் உணவுகளே பின்னர் நோய் தரும். மூன்று வேளை உண்பதைவிட அடிக்கடி சிறிது சிறிதாக உண்பதே நல்லது.
4. ஆயுளை நீடிக்கச் செய்யும் உணவுகளைத் தேடி, தெரிந்து உண்ணுங்கள். ஊட்டச்சத்து உணவுகளே உடலிலுள்ள உயிரணுக்களை வளர்க்கின்றது. ஜீனியைக் குறை, கால்சியம் உணவுகளைக் கூட்டி எலும்புகளை பராமரிக்கவும்.
5. யோகா, உடற்பயிற்சி மூலம் உட்புற, வெளிப்புற கழிவுகளை வெளியேற்றுக. கழிவுகளைத் தரும் உணவுகள் உடலுக்கு சக்தி தராமல் சோர்வையே தரும். பித்த மயக்கத்தின் பிதற்றலே பேய், பிசாசு என்கின்றது மருத்துவ ஆய்வு.
6. அன்னம், நா, பல், உதடு, குறி, கண்கள், மூளை, கைவிரல்கள், பாதம் ஆகிய பாகங்களில் உணர்வு மிகுதி உண்டு.
சிறுநீர் போகும் போது வலியா? இரவில் பார்லி கஞ்சி உபயோகியுங்கள். வெய்யிலில் அலையும்போது குளிர்ச்சிக்கு வெள்ளரி சாப்பிடுங்கள்.
7. வயிற்று வலியா? - கசகசாவை அரைத்து பசும்பாலில் கலக்கி பருகவும்.
தேமல் போக - ஜாதிக்காயுடன் நாயுறுவி இலையை அரைத்துத் தடவுங்கள்.
வழுக்கையா? - கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தடவுங்கள்.
8. ஆஸ்துமாகாரர்கள் தினமும் பூண்டு உபயோகிப்பது மிகவும் நல்லது. அயோடின் அதிகமுள்ள மூலிகை ‡ மஞ்சள் கரிசாலை, பொண்ணாங்கண்ணி
அதிக பிராணசக்தி கிடைக்க தினமும் சிறிது நேரமாவது சிரிக்கவும்.
9. தோல் நோயா? - இலுப்பை / இலுவ இலையை அரைத்துப் பற்று போடுங்கள்.
வயிற்றில் வாயுவா - இலட்சக்கட்டுக் கீரையை உணவில் சேர்க்கவும்.
தேள்கடி? - மாங்காய் காம்பு பால் தடவு / சுக்கை இழைத்து பற்றுப்போடு.
10. உடல் குண்டு குறைய ‡ வாரம் இருமுறை கொல்லு ரசம் உபயோகியுங்கள்.
நெஞ்செறிவு ‡ வெறும் வயிற்றில் லெமன் ஜீஸ் சாப்பிடுங்கள்.
நாய்கடி - மணித்தக்காளி சாறு தடவி, சக்கையை காயத்தில் வைத்து கட்டு.
11. சளி, கபத்திற்கு சுண்டைக்காயை சாப்பாட்டில் பயன்படுத்துவது நல்லது. வயதானவர்கள் உடல் வலுப்பெற கொல்லுக்கஞ்சி சாப்பிட வேண்டும். படுக்கையில் சிறுநீர் போகின்றதா? எள், முள்ளங்கி உபயோகியுங்கள்
No comments:
Post a Comment