பூண்டி மாதா புகழ் வளர்த்த புனித லூர்தார்
- முத்தமிழ் மாமணி பேராசிரியர் ச. சாமிமுத்து
1. பூண்டிக்கு நடைப்பயணம் போனபோது ....
பூண்டி நான் போகையிலே இருபுறமும்
பூத்தலர்ந்து வண்ணமலர்ச் செடிகொடிகள்
தாண்டிநான் நடக்கையிலே கண்டஅலை
தாவியயனை மலர்க்கரத்தால் தடுத்தனவே!
வேண்டநான் மரியன்னை கோவிலுக்கு
விருப்புடனே விரைவுதனை உணர்ந்ததனால்
மூண்டெழ அன்புறவு உளப்பரப்பில்
முகமலராய் புன்னகையும் பூத்தனவே
2. நெற்பயிர்கள் அன்னைபுகழ் பாடக்கேட்டேன்!
(சந்தம் வேறு)
பச்சைநிற நெற்பயிர்கள் வயல்கள் தோறும்
பாசமுறக் காற்றசைவில் மோதிக் கொண்டு,
கசிந்துவரும் வயல்வீட்டு உறவின் வாழ்வில்
களைகளையும் தம்முறவாய்த் தாவித் தொட்டு,
நிசியிலுமே உறங்காமல் தழுவிப் பார்த்து
நெஞ்சினிக்கும் பாடலுடன் அசைந்தே ஆடிப்
பொசிந்துவரும் பரவசத்தால் உடலே ஆட்டிப்
போற்றிமரி பாதமலர் தலைகள் சூடும்!
3. கோவில் நான் சென்றபோது குரு லூர்து புனிதர் பார்த்தேன்!
நானுமிந்த காட்சியயலாம் வியந்தே நோக்கி,
நடைமறந்து கடந்துதொலை தூரம் தாண்டி
வானுலகத் தோடுஇவண் ஞாலம் எல்லாம்
வாழ்த்திமரி புகழ்பாடி போற்றக் கண்டு,
தேனுதீர்க்கும் பொழில்கள்சூழ் பூண்டி மாதா
திகழ்கோவில் சென்றதன் முன்நானும் நிற்க,
மானுடத்தின் மகிமைக்கோர் சான்றாய்த் தோன்றும்
மாமனிதர் குருலூர்து புனிதர் பார்த்தேன்!
4. மரிபுகழ் வளர்த்த மனிதநேயர் புனித லூர்தார்!
புன்முறுவல் பூக்குமுகம் பூண்டித் தந்தை,
பூவுலகே போற்றுபுகழ் பூண்டி மாதா
அன்பருளைப் பெறுதற்கே வருவோர்க் கெல்லாம்
ஆதரவு தந்துஅருள் கனிந்தே நோக்கி,
பொன்னணிகள் பல்பொருள்கள் அள்ளித் தந்தே
பூரித்த நெஞ்சுறவுப் பாரி யைப்போல்
நன்மைபொழி அன்னைமரி அற்பு தங்கள்
நவின்றுமரி புகழ்வளர்த்தார் புனித லூர்தார்
No comments:
Post a Comment