காந்திஜியையும் தொட்ட இறை இரக்கம்
இந்தியா என்றால் காந்தி. காந்தி என்றால் இந்தியா. இந்தியாவும், காந்தியும் நாணயத்தின் இருபக்கங்கள். ஆகஸ்ட் 15 அன்று நாம் கொண்டாடும் பாரதத் திருநாட்டின் விடுதலை நாள் விழாவில் மகாத்மா காந்தியிடம் நாம் காணும் இறை இரக்கச் செயல்பாட்டினை சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இனிய காரியமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இரயில் பயணம்:
நிகழாண்டு ஜீலை 07 முதல் 11 வரை பாரதப் பிரதமர் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, டன்சானியா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜீலை 09 அன்று பீட்டர்மாரிட்ஸ் ‡ பார்க்கிலிருந்து ஜோகன்ஸ்பர்க் வரை வரலாற்றுச் சிறப்பு மிக்க இரயில் பயணம் மேற்கொண்டார். அது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1893ஆம் ஆண்டு முதல் வகுப்பில் பயணிக்கக் கூடிய கட்டணச் சீட்டுப் பெற்றிருந்தாலும் இனவெறியின் காரணமாக ஓடும் இரயிலிலிருந்து வெள்ளையர்களால் கீழே தள்ளி விடப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தது.
இந்த மனிதாபிமானமற்ற நிறவெறிச் செயல்பாடுதான் உலக வரலாற்றையே புரட்டிப் போடும் புதிய வாழ்க்கைத் தத்துவம் மலரக் காரணமாக அமைந்தது. இவரைப் பின்பற்றி 30 ஆண்டு இறைக் கொடுமைகள் அனுபவித்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க காரணமாக அமைந்தது. பிறரைத் துன்புறுத்தாது, மனவலிமையோடு எதேச்சதிகாரமாகச் செயல்பட்ட பிரிட்டிஷாரின் ஆட்சியினைத் தூக்கி எறிந்த வாழ்க்கைத் தத்துவம். அதுவே அகிம்சை என்னும் வாழ்க்கை நெறி.
கிறிஸ்துவைப் பற்றிய காந்திஜியின் புரிதல்:
காந்தியும், கிறிஸ்தவமும் (றூழிஐdஜுஷ் ழிஐd ளீஜுrஷ்விமிஷ்ழிஐஷ்மிதீ) என்னும் புத்தகம் இராபர்ட் (யூலிணுerமி சியியிவிணுerஆ) எல்ஸ்பர்க் என்பவரால் பதிப்பிக்கப் பெற்றது. இந்த நூலில் கீழ்க்காணும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1. காந்தி பைபிள் முழுவதையும் படித்தறிந்தவர்.
2. பழைய ஏற்பாட்டு நூல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் எண்ணிக்கை நூலினை அவர் விரும்பவே இல்லை.
3. புதிய ஏற்பாட்டின் நூல்களை நன்கு புரிந்து கொண்டார்.
4. மத்தேயு நற்செய்தி பிரிவு 5இல் காணப்படும் மலைப்பொழிவு அவரின் மனம் கவர்ந்த பகுதியாகும். இவண் காணப்படும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கும் நிலை மாறி வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் காட்டு (மத் 5 : 38 - 42) என்னும் அறிவுறுத்தல் காந்தியின் மனதில் மாற்றுச் சிந்தனையினை விதைத்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போன்ற வாழ்வின் தத்துவங்களுக்கு இப்போதனையே அடித்தளமாய் அமைந்தது.
5. இதனை ஆழ்ந்து தியானித்த வேளையில் தான் ஏன் கிறிஸ்தவத்தினை தழுவக் கூடாது? என்ற கேள்வி தம்முள் உதயமானதாக தமது நண்பர் மில்லி போலக் என்பவரிடம் ஒருமுறை கூறியுள்ளார்.
6. மாற்கு 10 : 17 - 22 செல்வந்த வாலிபரோடு இயேசு நடத்திய உரையாடல். இதில் இயேசுவின் ஆளுமையும், உலகியல், பொருளியல் மற்றும் உளவியல் தெளிவும் நன்கு புலப்படுகிறது. செல்வத்தின் மீதுள்ள அதிகப் பற்றுதல் காரணமாக நிறைவாழ்வினைக் குறைவாக்கும் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கின்றார் இந்த வாலிபர்.
7. ஏழ்மைக் கோலம், அவமானத்தின் சிலுவை மரணம், சாத்வீகப் போக்கு, விளிம்பு நிலை மக்கள் மீது கொண்டிருந்த கரிசனம் போன்றவை இயேசுவின் சிறப்புப் பண்புகள். மேலும் பகைவரிடம் அன்பு, சபிக்கிறவருக்கு ஆசி, வெறுப்பவருக்கு நன்மை, தூற்றுவோர் மற்றும் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுதல் ஆகிய படிப்பினைகள் காந்தியை இயேசுவுக்கு அருகில் வாழச் செய்தன.
8. தனது இந்து சமயத் தோழர்களுக்கு ஓர் அறிவுரையாக காந்தி என்ன கூறினார் தெரியுமா? நீங்கள் பக்தியோடு இயேசுவின் போதனைகளைத் தெரிந்து கொள்ளவில்லையயன்றால் நீங்கள் நிறைவைக் காண முடியாது என்பதுதான்.
9. உலகின் பல தலைவர்களுள் எனது இதயத்தினை அதிகம் ஆக்கிரமித்துள்ளவர் இயேசு ஒருவரே. இவரின் போதனைகளே என்னுள் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
10. உண்மைக்காக உயிர்நீத்த இயேசுவே அகிம்சையின் வழிகாட்டி. இவர் மனிதகுலம் கண்டிட்ட மாபெரும் போதகர். சத்தியாக்கிரகிகளின் தலைவரும், முன்னோடியும் இயேசு ஒருவரே.
இரக்கம் என்பது இறைவனின் திருப்பெயர்:
தட்டு நிறைய தங்கமும், வைரமும் தந்தால்கூட நான் எடுக்க நினைப்பதை எடுப்பேன் என்றாராம் ஹிட்லர். வரலாறு என்பது வெற்றி பெற்றோரின் சாசனம். அங்கே புகழ், வெற்றி ஆகிய இவைகளால் வெற்றி பெற்ற மக்களுக்கு மணி மகுடம் சூட்டப்படுகிறது. ஆனால் விவிலியம் காட்டும் வரலாறு மாறுபட்டது.
நாம் துன்பத்தையும், அநீதியையும் கண்டு கூக்குரலிட்டு போர் புரிய மல்லுக்கு நிற்போம். ஆனால் ஏழைகளையும், எளியவரையும் நேசிக்கும் இறைவனோ ஆயுதம் ஏந்திப் போராடும் போர்க்கடவுளாகவே செயல்படுகின்றார் என்று ஆபிரகாம் எச்.எஸ்ஸல் என்னும் யூத விவிலிய ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
மன்னிப்பே வரலாற்று இறைவனின் வள்ளல் குணம் என்பது சிம்சோன், தாவீது, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஆகியோரின் வரலாறு மூலம் அறிந்து கொள்கிறோம்.
எளியோரும், வறியோரும், கடைநிலையில் இருப்போரும் வரலாற்றின் அங்கம், அவர்கள் மறக்கப்படக்கூடாது. நீதியில்லா இரக்கம் வலுவற்றது. என்பது கர்தினால் வால்டேர்காஸ்பர் என்பரின் கூற்று. இறைநீதி என்பது இறை இரக்கத்தின் மறுபக்கம். நீதிக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு கூக்குரலிலும் இறை இரக்கம் இழையோடுகின்றது.
இறை இரக்கத்தினை வாழ்வாக்கிய மகான்:
‘தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்’ (லூக் 6 : 36) என்ற இயேசுவின் வார்த்தையினை வாழ்வில் செயல்படுத்திய மகான் இவர். தென்னாப்பிரிக்காவில் 1906, 1908, 1913 ஆகிய ஆண்டுகளில் வெள்ளையருக்கெதிராக இவர் புரிந்த போராட்டங்கள் இந்திய விடுதலைப்போருக்கு முன்னோட்டமாக அமைந்தன.
தாய்நாடு திரும்பியதும் 18.03.1919 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சிட்னி ரவ்லட் சட்டத்தினைக் கடுமையாக எதிர்த்தார். கருப்புச் சட்டம் எனப்பட்ட இச்சட்டத்தின் மூலம் போலீஸ், தான் சந்தேகப்படும் எவரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைது செய்யலாம். கைதியின் கருத்து கேட்கப்படாது தண்டனை அளிக்கப்படும். சத்தியாக்கிரகம் மூலம் இந்தியா முழுவதும் இதற்குக் கடும் எதிர்ப்பும், ஒத்துழையாமையும் நடைபெற்றது. இதன் விளைவாக 1919இல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது.
1924இல் தீண்டாமையினை ஒழிக்க காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தினைத் தலைமையேற்று வழிநடத்தினார். 1930, மார்ச் 12இல் தண்டியாத்திரை மூலம் உப்புக்காய்ச்சப்பட்டது. 1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் இந்தியா போர்க்கோலம் பூணாது அகிம்சை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
இறுதியாக 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் இயக்கம் நாடு முழுவதும் பரவி வெள்ளையரை விரட்டியடித்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷாரின் கொடி இறக்கப்பட்டு மூவர்ணக் கொடி வானில் பட்டொளி வீசிப் பறந்தது.
இயேசுவின் உண்மைச் சீடன் & இறை இரக்கத்தின் மகான்:
மகாத்மா காந்தி திருமுழுக்குப் பெறாத ஓர் உண்மைக் கிறிஸ்தவர். சிலுவையணியாத இயேசுவின் சீடர். இறை இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகளாகிய அவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல், அறியாமையில் இருப்போருக்கு அறிவொளியூட்டுதல், பாவிகளை மனம் மாற அறிவுறுத்தல், துன்புறுவோரைத் தேற்றுதல், பிறர் இழைத்த தீமைகளை மன்னித்தல், தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மரித்தோர் வாழ்வோருக்காகச் செபித்தல் போன்ற பண்புகள் இவரின் வாழ்வில் மிளிர்கின்றன.
மேலும் இரக்கத்தின் சமூகக் கடமைகளாகிய பசித்தோருக்கு உணவளித்தல், தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல், ஆடையின்றி இருப்போருக்கு ஆடை அணிவித்தல், அன்னியரை ஏற்றுக்கொள்ளுதல், நோயாளிகளைக் குணப்படுத்துதல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல் மற்றும் இறந்தோரை நல்லடக்கம் செய்தல் போன்ற காரியங்களிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டார்.
இன்றும் ஒலிக்கும் விடுதலைக் குரல்கள்:
69ஆவது விடுதலை விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒலிக்கும் விடுதலைக் குரல்கள் நாம் இன்னும் முழுவிடுதலை பெறவில்லை என்பதையே காட்டுகின்றது. குறுகி வரும் விவசாய நிலமும், கண்ணீர் சிந்தும் விவசாயிகளின் வறுமையும், மொழி, இனப் பாகுபாடுகளும், ஏழைகளின் வளர்ச்சிப் பெருக்கமும், இன்னொரு போர் இந்நாட்டுக்குத் தேவை என்பதை உணர்த்துகின்றன. இறை இரக்கத்தின் அருளினால் காந்தியப் பாதையில் நடந்து முழு உரிமை பெற்ற பாரத நாடு மலரட்டும்.
No comments:
Post a Comment