14 ஆம் ஞாயிறு, 03 - 07 - 2016
எசா 66 : 10 - 14, கலா 6 : 14 - 18 லூக் 10 : 1 - 12, 17 - 20
தடயமான தழும்பு
‘இந்திய கிறிஸ்தவர்களின் தந்தை’ எனப் போற்றப்படும் புனித தோமையாரின் திருவிழாவை இன்று திருச்சபைக் கொண்டாடி மகிழ்கிறது. இவர் இயேசுகிறிஸ்து மீது அளவற்ற பற்று கொண்டிருந்தார். விசுவாசத்தில் வளர்ந்த இவர், முரடர்களான யூதர்களைப் பார்த்து அஞ்சவில்லை. யூதர்கள் இயேசுவுக்கு பல தொல்லைகளைக் கொடுத்து வந்தவர்கள். மற்ற சீடர்கள் இவர்களுக்கு அஞ்சினார்கள். ஆனால் தோமா, ‘இயேசுவோடு நாமும் யூதேயாவுக்கு போவோம், அவரோடு இறப்போம்’ என்றார். இது தோமாவின் வீரம் கலந்த உற்சாகப் பணியை காட்டுகிறது. இன்றைய சமூக பின்னனியில் நாம் சந்திக்கும் சவால்கள் பல கோணங்களில் கிறிஸ்தவர்களுக்கு வருகின்றது. இதில் நமது இறைப்பண்பு என்னவாக உள்ளது என்று சிந்திக்க வேண்டும். புனித தோமாவின் வாழ்வே மிகப் பெரிய சவாலாக நம் ஒவ்வொருவருக்கும் அமைய ¼ வண்டும். சவால் நிறைந்த புனித தோமாவின் வாழ்வில், கிறிஸ்துவிற்கு உண்மையுள்ள சாட்சியாக அவர் தொடர்ந்து வாழ, ஒரு மிகப் பெரிய தடயம் ஒன்று அவருக்கு கிடைத்தது. அதுதான் இயேசுவின் விலா தழும்புகள். இவை அவரது விசுவாச வாழ்வுக்கு விருட்சமாக கிடைத்த தடயம்.
சங்க இலக்கியத்தில் தாய் தனது மகனை போருக்கு அனுப்பும்போது, அவன் புறமுதுகு காண்பித்து போரில் பின்வாங்க கூடாது என்றும், நெஞ்சில் புண்களை அல்லது காயங்களைப் பெற்று, வீரனாக திரும்ப வேண்டும் என்றும் சொல்வாள். அந்த வீரத்தழும்பு போற்றுதற்குரியது என்பார்கள். அன்று மாடுகளையும், ஆடுகளையும் வளர்த்தவர்கள், அவைகளுக்கு சூடு போட்டு, தழும்புகளை ஏற்படுத்தி தங்களுடைய மாடுகள் அல்லது ஆடுகள் என இனம் கண்டார்கள்.
‘உயிர்த்த ஆண்டவரைக் கண்டோம்’ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, தோமா இக்கருத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ‘இயேசுவின் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்’ (யோவான் 20 : 25) என்று கூறுகிறார். இயேசு மீண்டும் தோன்றிய போது, ‘நீரே என் ஆண்டவர், நீரே என்கடவுள்’ என விசுவாச அறிக்கையிடுகிறார். இது இயேசுவின் தழும்பைப் பார்த்து புனித தோமாவின் உள்ளத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். இந்த விசுவாசத் தழும்பின் தடயம்தான் புனித தோமாவின் ஐயத்தையும், சந்தேகத்தையும் சரி செய்தது.
இன்றைய சமூக சூழலில் மகாத்மா காந்தியடிகள் சொன்னதைப் போன்று, கொள்ளையில்லாத அரசியல், மனசாட்சியில்லாத இன்பம், உழைப்பில்லாத செல்வம், பண்பில்லாத அறிவு, அறநெறியில்லாத தொழில் வளர்ச்சி, மனிதாபிமானமில்லாத அறிவியல் ‡ போன்ற அனைத்துமே நமது நம்பிக்கை தடயங்களை சேதமாக்கும் தழும்புகள். மனிதனோடு உள்ள நம்பிக்கையும், இறைவனோடு கூடிய நம்பிக்கையும்தான் நமது சாட்சிய வாழ்வுக்கு தழும்பாக, தடயமாக மாற வழிவகுக்கும்.
நம்பிக்கை உள்ளவனுக்கு தடைகற்களும் படிகற்களே
இறைவன்மீது கொண்டுள்ள நமது நம்பிக்கையே தழும்பாகி தடயமாகட்டும்
No comments:
Post a Comment