சுதந்திரத்தாய் பெற்றெடுக்கும் பொறுப்புடைமை
இஸ்ரயேல் நாட்டின் பெருமை மிகு படைத் தளபதியாக விளங்கிய மோஷே கூறுவார், ‘சுதந்திரம்தான் மனித ஆன்மாவின் உயிர்காற்று’ என்பார். ஒருமுறை, குளியல் அறையில் தாழ்ப்பாள் நன்றாகப் பூட்டிக் கொண்து. உள்ளிருந்து வெளியே வரமுடியாத நிலையில், வியர்த்து விருவிருத்து, சுதந்திரம் அற்ற நிலை என்ன என்று சில நிமிடங்களில் உணர்ந்தேன். பிள்ளைகள் எங்கும் ஆடி ஓடி விளையாடவே விரும்புகிறார்கள். நாமும் பல இடங்களை சுற்றிப் பார்க்கும் சுற்றுலாவில் பங்குக் கொள்ள விரும்புகிறோம்
.
சுதந்திரம் என்பதை ஆங்கிலத்தில் ஃபிரிடம் (ய்reedலிது) என்கிறார்கள். இதற்கு லிபர்ட்டி (ஸிஷ்ணுerமிதீ) என்ற வார்த்தையும் உண்டு. லிபர்ட்டி என்ற வார்த்தை லத்தின் வார்த்தை ‘லிபரோ’ (ஸிஷ்ணுerலி) என்பதிலிருந்து வருகிறது.‘லிபரோ’என்றால் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப் பெறுவது. சுதந்திரத்திற்கு இணையான கிரேக்க வார்த்தை ‘எலேயுத்தேரியா’ (சியிeற்மிஜுerஷ்ழி) என்பதாகும். இந்த கிரேக்க வார்த்தையின் பொருள் ‘தான் விரும்பியதை அடைதல்’ என்பதாகும். தான் விரும்பிய இடத்திற்குச் சென்று சேருகின்ற அனுபவமாகும்.
சென்ற 69 ஆண்டுகளில் இந்தியா ஒப்பற்ற வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அறிவியலிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. நம்மை அடிமைகளாக வைத்திருந்த மேல்நாடுகளுடன் போட்டிப்போடும் அளவுக்கு முன்னுக்கு வந்திருக்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம், நமது நாடு பெற்றிருக்கின்ற சுதந்திர சூழ்நிலை. ஆப்பிரிக்க, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் உயர்வான சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஒரு புதுக்கவிதை:
‘சுதந்திரம் ஒரு தாயன்பு. ஏனெனில் இல்லை அதற்கொரு வரம்பு. சுதந்திரம் ஒரு பரம்பொருள் ஏனெனில் இல்லை அதற்கொரு இடுபொருள்’
நாம் பெற்ற சுதந்திரம் முழுமையாக நமக்கு செயலாக்கம் பெறவில்லை. இந்தியரின் சுயநலங்கள் சுதந்திரத்தை தின்றுகொண்டிருக்கின்றன. மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளை அரசியல்வாதிகளும், ஊழல் அரசுப் பணியாளர்களும் விழுங்கி விடுகிறார்கள். ஏழ்மையும்,அறியாமையும்இன்னும்தலை விரித்தாடுகின்றன.
‘எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே -இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சகக்காரருக்கு நாசம் வந்ததே’
என்ற பாரதியார் கண்ட கனவு கானல் நீராகின்ற சூழலைப் பார்க்கின்றோம்..
இன்றைய மத்திய அரசு மத சுதந்திரத்தில் தந்திரமாக தலையிட்டு, அதனை முடக்கப் பார்க்கிறது. கங்கை நீரை, தபால் நிலையங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய சலுகைகைளைத் தருவதற்கு மறுக்கிறது. அரசியல்வாதிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. இவையயல்லாம் சுதந்திரத்திற்கு நாம் போடும் விலங்குகள். மக்கள் பொறுப்புடன் நடக்கும்போதுதான் கிடைத்த சுதந்திரத்தைக் காக்க முடியும். அண்மையில் துருக்கியில் இராணுவ ஆட்சி கொண்டுவர இராணுவ அதிகாரிகள் முயற்சித்தபோது பொதுமக்கள் விழிப்பாயிருந்து அதனை முறியடித்தனர்.
‘மகிழ்ச்சியின் இரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் இரகசியம் வீரம்’ என்கிறார் தூசிதீதன் என்பவர்.
‘எவர் ஒருவர் சுதந்திரத்தில் பொதிந்திருக்கும் பொறுப்பினை உணர்ந்து வாழ்கிறாரோ அவர்தான் உயர்ந்த வீரர்’ என்கிறார் பாபு டைலான் என்பவர்.
அன்னை மரியாள் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்ட விழாவையும், ஆகஸ்ட் 15 இல் கொண்டாடுகிறோம். சுதந்திரத்தின் முழுமைதான் விண்ணகம். கடவுள் தந்த பணியை பொறுப்புடன் செய்து விண்ணகத்தை மண்ணகத்தே கொணர்ந்தார்கள் அன்னை மரியா அவர்கள்.
இவ்விதழில் சுதந்திரத்தைப் பற்றி ஒரு கதையும், ஒரு கவிதையும் இடம் பெறுகின்றன. அன்னையின் அருட்சுடர் பொருளாதார நிலையில் கையைக் கடிக்கும் நிலையில்தான் உள்ளது. உங்களது தொடர்ந்த ஆதரவைத் தரவேண்டுமென்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment