Pages - Menu

Tuesday, 26 July 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

தாய்மையின் தியாகம்

- புலவர். இ. அந்தோணி, 
சிறியமலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு) ஆசிரியர், 
குலமாணிக்கம்


பெண் குடும்பத்தின் விளக்காகிறாள். விளக்கு இருளை விலக்கி பொருளைக் காண்பிக்கிறது. பெண் ஓர் அணுசக்தியைப் போன்றவள். இரண்டு கிலோ அணுபொருள் ஒரு கப்பலை பல வருடங்களுக்கு இயக்கும் வல்லமைக் கொண்டது. அதேபோல பெண்ணில் ஆழ்ந்த சக்தி புதைந்துள்ளது. அந்த சக்தியை இயங்க அனுமதித்தால்தான் குடும்பங்கள் செழிக்கும். கிராமங்களிலும், ஏன் பணி செய்கிற பெண்களும் தங்களைவிட தன் குடும்பம்தான் அவர்களின் எண்ணங்களில் முழுமையாக ஓடிக்கொண்டிருக்கும். அவள் குடும்பத்திற்காக பம்பரமாக சுற்றுகிறாள். எனவேதான், மற்றவர்கள் எழுமுன், பெண் எழுந்து தான் வாழும் வீட்டினை தூய்மைப்படுத்துகிறாள். குடும்பத்தவர்க்கு தேவைப்படும் உடல் சக்தியான உணவை கவனமாக தயார் செய்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கணவர் பணிக்குச் செல்கிறார் என்றால் அவர்களைப்  பற்றிய எண்ணமே அவளின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். எனவேதான் பாரதிதாசனார் பெண்களின் குடும்ப ஈடுபாடு கொண்ட ஆர்வத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில்
சிறிய பையன் துள்ளிக் குதித்து 
         மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ என்று
உள்ளத்தில் நினைத்தாள். ஆனால் 
        மூத்தவன் உண்டென்றெண்ணி தள்ளினாள்
அச்சம் தன்னை தாழ்வாரம் சேர்ந்தாள் நங்கை
        ஒட்டடைக் கோலும் கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள் 
    கட்டிய சிலந்திக்கூடு கரையானின் கோட்டையயல்லாம்                தட்டியே பெருக்கி தூய்மை தனியரசாளச் செய்து
 சட்டைகள்தைய்ப்பதற்கு தையலைத் தொட்டாள் 

தையல் பெண்களின் ஈடுபாட்டு சக்தியைப் புரிந்துக் கொண்டு அவர்களுடன் நல்லுறவுக் கொண்டு, அவர்களின் முழு வல்லமையையும் வெளிக்கொணர்வதுதான் கணவரின் திறன்.

இல்வாழ்க்கை என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (குறள் 41).
ஒரு பெண் மனைவியாகவும் தாயாகவும் விளங்குகிறாள். இவ்விரண்டு பணிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றவளாக விளங்குகிறாள்.
தாய்க்குப் பிறகு நற்றாரமெனச் சொன்ன 
அவ்வாய்க்கு பெருமை வழங்குகின்றார் - வாய்க்கும் 
கனிமரத்தைப் பேணும் கடமை போல் கொண்ட
மனைநலம் பேணல் மதி - ஜெகவீர பாண்டியனார்.

கனிமரத்தை பேணுதல் போல் மனைவியை போற்றுதல் வேண்டும் என்கிறார் கவிஞர்.

பெண்கள் செய்யும் பெரும் பணிகளை உணராது சிறுமையாக நினைப்பதுதான் இல்லறத்தை வாளாலருக்கும் கொடுமையாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post