Pages - Menu

Friday, 1 July 2016

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்...

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்


ஏழாவது படித்தவர் ... 510 வாகனங்களுக்கு முதலாளி . என்ன ஷாக் ஆயிட்டிங்களா?
படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. பள்ளி கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழில் அதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுசுப் பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். இந்த பேருந்துகளை இயக்கும் லு.P.ஹி டிராவல்ஸ் அதிபர் லு.P. நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசுப் பேருந்துகளுக்கு சொந்தக்காரர். அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடு முழுவதும் சுமைகளை ஏற்றி, இறக்கி வலம் வந்துகொண்டு இருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்தி வரும் லு.P. நடராஜன், பெரிய பிஸினஸ் படிப்பு படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும் தான். ஆனால் அடைந்த வெற்றிகள் ஏராளம். தனது வெற்றிக் கதையை சொல்கிறார் நடராஜன் ...

“நான் பிறந்து வளர்ந்தது, சேலம் பெரிய புத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர். நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளைச் செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 

1968 ஆம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதற்கு “வெங்கடேஷ்வரா பஸ் சர்வீஸ்” என்று பெயர் வைத்து கோவை முதல் பெங்களூர் வரை டிரிப் அடித்தேன். அந்த பஸ்ஸின் ஓட்டுநரும் நானே, நடத்துனரும் நானே.

அதன்பிறகு மதுரையிலிருந்து பெங்களூர் ரூட்டில் பேருந்தை இயக்கி அந்த பஸ்கம்பெனியை மூன்று வருடங்களாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில் தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ண கவுண்டர் பெயரின் முதல் எழுத்தான K யையும், எனது தகப்பனார் பொன்மலை கவுண்டர் பெயரில் இருந்து P என்ற எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து N என்ற ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து 1972இல்  K.P.N. என்கிற பெயரை வைத்து டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

1974ஆம் வருடத்தில் டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது. 1976இல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின. பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரைச் சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம்  உள்ளிட்ட வி­யங்களில் எங்கள் கம்பெனி டாப் கியரில் போகத்தொடங்கியது. படிப்படியாக கம்பெனி வளர்ந்து ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்த போதும், அதில் ஒரு வண்டியில் டிரைவராகவும் நான் இருந்தேன். அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக குளுகுளு வசதி செய்யப்பட்ட பஸ்களை அறிமுகம் செய்தேன்.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான், 17 வயதில் கிளீனர், 18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் லு.P.ஹி டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி 
வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தளவுக்கு போக்குவரத்தை நடத்தி வரும் நான் பள்ளி படிப்பைவிட வாழ்க்கையில் தெரிந்துக் கொண்ட அனுபவக்கல்வி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது” என சொல்லி முடித்தார்.

கல்வி அறிவால் மட்டுமே ஒருவர் வெற்றி காண முடியும் என்பதல்ல. மாறாக  உண்மை, உழைப்பு, ஈடுபாடு ஆகிய மதிப்பீடுகள் மூலம் ஒருவர் வெற்றி அடையலாம். ஆகவே நான் வேலை கிடைக்கவில்லையே என்று எண்ணி சோர்ந்து விடாமல், உழைப்பால் உயர்வோம். உண்மையாக வாழ்வோம், உயர்வு பெறுவோம். வெற்றிக்கனியை தட்டிப்பறிப்போம்.

“பத்தாவது முறையாக எழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது ஒன்பது முறை விழுந்தவன் அல்லவா

No comments:

Post a Comment

Ads Inside Post