Pages - Menu

Saturday 9 September 2017

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு
 03 - 09 - 2017
எரே 20 : 7 - 9; உரோ 12 : 1-2; மத் 16 :  21 - 27
ச.இ.அ.
இளைஞர்களுக்கான ஒரு பட்டிமன்றத்தில், சொற்பொழிவாளர், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியும் விதத்தில் வளருங்கள். பணத்திற்குப் பின்னால் உழைப்பு இருப்பதை அவர்கள் உணரும் விதமாக வளருங்கள் என்று கூறினார். வியர்வை இல்லாமல் வளர்ச்சியில்லை. உழைப்பில்லாமல் பிழைப்பில்லை என்பதுதான் எதார்த்தம்.

முட்கள் நடுவில் விழுந்த விதை முட்களால் முடக்கி விடப்படுகிறது. ஆனால் முட்களையும் தாண்டி நாம் வாழ வேண்டும். தன்னலம் துறக்க வேண்டும். தம் சிலுவையை சுமக்க வேண்டும். அதன் வழியாகத்தான் இயேசுவைப் பின் செல்ல முடியும். இயேசு சந்தித்த அதே அனுபவத்தை சீடர்களும் சந்திக்க வேண்டும். இயேசு மூப்பர்கள் தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் வேண்டும். ஆனால் துன்பத்திலிருந்து வெற்றி கிடைத்தது. ஒருவர் வாழ்வின் பயனைப் பெற எதிர்மறையான வழியைக் கூறுகிறார். இழந்தால் பெறுவீர்கள், ‘உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் என்றால் உலக செல்வங்களை நிறையவே பெற்றிருந்தாலும்’ என்பதுதான் பொருள்.

இயேசுவின் தியாக வழி, பேதுருவுக்கே ஏற்புடையதாக இல்லை. எனவே அதனை விட்டுவிட கேட்கிறார் பேதுரு. இயேசுவின் தியாக வழிதான் இறைவனின் வழி. தன்னல வழி. சாத்தானின் வழி. இறைவனுக்கு எதிரான வழி. ‘கடினமான உழைப்பினால் தான் வளர்ச்சி உண்டாகும் தியாகம் இல்லாத வாழ்க்கையில் வெறும் களைகள்தான் நம் வாழ்க்கையில் வளரும்’ என்கிறார் கோர்டன் ஹின்க்லி.

‘கடினமான உழைப்புத்தான் அறிவினில் ஏற்படும் முதுமைக் கோடுகளை அகற்றும்’ என்கிறார் யஹலினா ரூபின் ஸ்டெலின் என்பவர்.

முதல்வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர். தனது அர்ப்பண வாழ்வு மற்றவர்களின் நகைப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ஆனால் இறைவனுக்கு தனது அர்ப்பணத்தை மறுக்க முடியாது என்று போராடுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், உலக போக்கின்படி ஒழுகாதீர்கள். தியாக வாழ்விற்கு உங்களை அர்ப்பணிக்க தயங்க வேண்டாம். அப்போதுதான், கடவுளின் திருவுளத்தை நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
தியாக ஒளிதான் உலகின் தீய இருளை நீக்கும்.
பொன்னை மாதரை பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
  உன்னை நாடுவேன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவேன் தன்னந் தனியனே
‡ தாயுமானவர் பாடல்.

No comments:

Post a Comment

Ads Inside Post