Pages - Menu

Friday 29 September 2017

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள் 

யோவான் நற்செய்தி அதிகாரம் 1 முதல் 11 முடிய 


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
      சடக்கென்று திண்டாட்டம்
    அம்மா சொன்னாங்க
    அண்டாக்களை நிரப்பினாங்க
    அண்ணாந்து ஜெபித்தாரு
    அள்ளிச் செல்லும் என்றாரு?
    அது என்ன? எங்கே?

 2. வானத்து மனிதர் வந்தார்
      தண்ணீரை சில வேளை கலக்குவார்
    முந்திக் கொண்டோர் இறங்குவர்
      நோயகளின்றி நலம் பெறுவர் ‡ அது எங்கே?

 3. ஆறுமாடி கொண்ட வீட்டில
      ஐந்து வீடு இடிஞ்சிப் போச்சு
      இருந்த வீடும் இருட்டாச்சு
      என்றுக் கேட்டதும்
      உண்மை தான் என்று
      ஏற்ற அம்மணி யார்?
      ஆறுமாடி என்ன?

 4. மனித இயல்பினர் இப்படி பிறப்பர்
      ஆவியின் இயல்பினர் அப்படி பிறப்பர். எப்படி?

 5. வேதனை தீரவில்லை
      சொல்லி அழ யாருமில்ல
      படுக்கையை விட்டு எழமுடியல்ல
      பரமன் வந்தாரு
      பரிவுடனே கேட்டாரு
      படுக்கையுடன் நட என்றாரு
      யார்? யாரை?

 6. நான்கு நாள்கள் இருட்டிலே
      ஐந்தாம் நாள் ஒளியிலே
      அவன் யார்?

 7. பார்வையற்றோர் பார்வை பெறுவர்
      கண் தெரிகிறதே என்கிறீர்கள்
      எனவே பாவிகளாய் இருக்கிறீர்கள்
      என்று கூறியவர் யார்? யாரிடம்?   
இவர் யார்? யாரிடம்?

 8. ஐந்து முத்துக்கள் கூடையிலே
      ஐயாயிரம் பேர் தரையிலே
      மீந்த முத்துக்கள் எத்தனை கூடையிலே
    அவை என்ன?

 9. அன்னையும் நோக்கினார்
      அன்பு மகனும் நோக்கினார்
      தாய் சொல்லைத் தட்டாதப்பிள்ளை
      செய்த முதல் அருங்குறி எது? யார்?

 10. ஆறெழுத்து உடையவர்
        அத்திமரத்தின் கீழ் இருந்த இவரை
      மூன்றெழுத்து உள்ளவர் கண்டுக்கொண்டார்
        இவர் யார்?

 11. யாக்கோபு தந்த பரிசு, காசில்லாத பரிசு.
      இது இல்லை சமாரியர்க்கு தரிசு. அந்த பரிசுப்பொருள்  எப்போதும் திறந்திருக்கும் அதன் ஓரமாய்      அமர்ந்தவர் யார்?
எதன் மேல்

 12. அவன் ஒரு பொய்யன்
        பொய்மையின் இருப்பிடம்
        உண்மையைச் சார்ந்து நிற்பதில்லை
        எனவே அவனே உங்களுக்குத் தந்தை
        இவன் யார்? கூறியது யார்? யாரை?

 13. நான் இரண்டெழுத்து உடையவன்
      எனது குரல் ஒரு மாதத்தினுடையது
      என் அவர் என் முன்னே செல்வார்
      நான் பின் தொடர்வேன்
      என்னை வழி நடத்துபவர். மூன்றெழுத்தில்
      வரும் சொல்லுங்கள்.

 14. வலதுக்கை ஒன்று
      அதில் ஐந்து விரல்கள் உண்டு
      அதன் நடுவே ஒரு குழி
      அதுதான் உள்ளங்கை
      இதை  யோவான் 5 ஆம்
      அதிகாரத்தில் கண்டு பிடியுங்கள்.

 15. பரிசேயருள் ஒருவர் இவர்
      ஐந்தெழுத்து பெயருடையவர்
        ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர்
      இயேசுவுக்காகப் பரிந்துப் பேசி
      வாங்கிக் கட்டிக் கொண்டவர்

No comments:

Post a Comment

Ads Inside Post