பிக் பாஸ் ( BIG BOSS)
- திருமதி.கேத்ரின் ஆசா, திருச்சி
இன்று தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுக்இன்று தமிழ்நாட்டையேபுரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
பிக் பிரதர் லண்டனில் ஒலி பரப்பான போது நம் நாட்டு பிரபல நடிகை ´ல்பா யட்டி பங்கேற்ற போது இன வெறியுடன் நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை நடிகையை பிரபலமாக்கியது. இந்தியாவில் இந்த ஷோ பிரபலமாக இந்தியில் பிக் பாஸ் ஆனது. இந்தியிலிருந்து இப்போது தமிழில் பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களது வீடு, புல்வெளி, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், டாய்லெட், பாத்ரூம், பெரிய ஹால், பரிட்ஜ், இரண்டு பெட்ரூம் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக இருக்கிறது. மொத்தம் 51 கேமராக்கள். ஆங்கர் போட்டியாளருடன் பேசும் அறை என்று விஸ்தாரமாக இருக்கிறது. வீட்டுக்குள் செல்போன், டிவி, நியூஸ் பேப்பர், வார, மாத பத்திரிக்கை எதுவும் கிடையாது. படிக்கவோ, எழுதவோ பகலில் தூங்கவோ கூடாது. சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.
100 நாட்கள் எப்படித்தான் கடக்கப் போகிறார்கள் என்பது திரில், 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ள இவர்கள் தவறு செய்யும் போது, விதிகளை மீறும்போது எலிமினேட் என்று வெளியேற்றப்படுகிறார்கள். வேலைகளை பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. கலந்து கொள்பவர்கள் எல்லோரும் பிரபலம் என்பதால் ஈகோ தலைதூக்குகிறது. வீட்டு நினைப்பு, மன அழுத்தம் பங்காளர்களை படபடக்க செய்யலாம்.
மற்றவர்களின் தனிப்பட்ட வியத்தில் தலையிடுவது நமக்கு பிடித்த ஒன்று. குறிப்பாக பெண்கள் சீரியல் பார்ப்பதையே மறந்துவிட்டு இந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இந்நிகழ்ச்சியின் தாக்கத்தைப் புரிந்துக் கொள்ளலாம். தொகுப்பாளர் கமலஹாசன் என்பதால் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. பார்வையாளர்கள், பங்காளர்களின் உளவியல், மனநிலை பழக்கவழக்கம் எல்லாவற்றையும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டார்கள்.
பல்வேறு தரப்பு மக்களை நிகழ்ச்சி கவர்ந்தாலும், பெரும்பாலான மக்களால் நிராகரிக்கப்பட்ட வசைவுக்குள்ளான நிகழ்ச்சியாகவும் இது இருக்கிறது. சமுதாய, கலாசார சீர்கேடுகள் என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரே கூரையில் 52 கேமராக்களுடன் வாழ்ந்தாலும் நம் நாட்டு மக்களின் மதிப்பை பெறுவது கஷ்டம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பேச்சு, நடவடிக்கை எல்லாம் எழுதி கொடுத்து நடிக்கச் சொல்வதுபோல் செயற்கையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி, தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் விவசாய பிரச்சனை, எரிவாயு பிரச்சனை, ஆட்சியாளர்களின் நாடகங்கள் போன்ற வாழ்வாதார பிரச்சனைகளை திரைமறைப்பு செய்கிறது என்று சொல்லலாம்.
யாரோ சம்பாதிக்க, யாரோ பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள பிக் பாஸ் மூலம் நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என்பது தான் உண்மை, என்றாலும் ஒரு நிகழ்ச்சி சமூகத்தில் இவ்வளவு பெரிய நேர்மறையான ஆன மாற்றத்தை கொண்டு வந்திருப்பது, இதுவே முதல் முறை என்பதையும் மறுக்க முடியாது.
No comments:
Post a Comment