பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு
17-09-2017
சீஞா 27:30, 28:7; உரோ 14: 7-9; மத் 18: 21-35
அண்மையில் மாடுகள் பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிட்டுவதை நேராகப் பார்த்தேன். ஒருவர் கட்டி சோர் சாப்பிட்டு விட்டு கட்டி சோர் கட்டி வந்த பிளாஸ்டிக் பேப்பரை வெளியே போட்டார். அப்போது அங்கு வந்த பசுமாடு, பிளாஸ்டிக் பேப்பரிலுள்ள சாப்பாட்டையும், பிளாஸ்டிக் பேப்பரையும் சேர்த்து சாப்பிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி. பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிடும் விலங்குகள் விரைவில் இறந்து விடும் என்பதுத் தின்னம். சிறுபிள்ளைகள் சிலர் மண்ணை அள்ளி தின்று விடுகின்றனர்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
என்கிறார் வள்ளுவர்.
இறைவன் இனிமையானவர். மன்னிப்பவர். ஆனால் அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர். அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர். அவர் அவர்களின் தீயப்பண்புகளின் விளைவினை சந்திக்க வேண்டும். அந்தக் கருத்தினைத்தான் இன்றைய நற்செய்தி பகுதி எடுத்துக் கூறுகிறது.
ஓர் அரசன், அவரின் பணியாளருக்கு 10 ஆயிரம் தாலந்து கடன் கொடுத்திருக்கிறான். ஒரு வெள்ளி தாலந்து என்பது 10 ஆயிரம் டாலருக்கு சமம்.(சுமார் 7.5 லட்ச ரூபாய்). பத்தாயிரம் தாலந்து என்பது, ஒரு பெரும் தொகை என்பதைத் தான் குறிப்பிடும். அந்த பணியாளரிடம் அரசன் கடனைத் திருப்பி தர கேட்கிறான். பணியாளருக்கு உள்ளதையயல்லாம் விற்று கடனை அடைக்க ஆணையிடுகிறான் அரசன். ஆனால் பணியாளர், தன்னால் இயலாத நிலையைத் தெரிவிக்கிறான். அரசன் அவன் மேல் பரிவு கொண்டு, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கிறான். ஆனால் பெருந்தொகையிலிருந்து விடுபட்ட அந்த பணியாளர், தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளரிடம் கடிந்து கடனைக் கேட்கிறார். ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. (தற்போதைய மதிப்பிற்கு ரூ500/‡ என்று சொல்லலாம்) பல கோடி கடனை தள்ளுபடி வாங்கிக் கொண்டு, சில ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறான் அந்த பணியாள். தன் தலைவரின் பரிவு பண்பினை உள்வாங்க மறந்து விட்டான். அதனால் அரசனின் சினத்திற்கு ஆளாகி, வாழ்வையே இழந்து விடுகிறான்.
இந்த உவமையின் பொருள் கடைசியாக தரப்பட்டுள்ளது. ‘உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் மன்னிக்கமாட்டார்’. இயேசு கற்று கொடுத்த செபத்தில் எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை, நாங்கள் மன்னிப்பது போல என்று சொல்கிறோம். ஆனால் கிரேக்க மூலத்தில், எங்கள் கடன்காரர்களை நாங்கள் மன்னிப்பதுபோல் என்றுதான் உள்ளது.
முதல் வாசகத்தில் சீராக்கின் முதுமொழி, ‘பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்கு பழியே பெறுவர்’ என்று கூறுகிறது. மீண்டும், ‘உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற வாக்கியத்தையும் கேட்கிறோம்.
இத்தகைய பரந்த மனநிலை எப்படி சாத்தியமாகும்? இன்றைய இரண்டாம் வாசகத்தில் காணப்படும் பவுல் அடிகளாரின் மனநிலையை நாமும் பெற்றால் இந்தப் பண்பு நம்மில் குடியேறும். ‘வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்’. (உரோ 14 : 8)
பரிவு, நம்மை விட உயரச் செய்கிறது. -மேசன் கூலி.
பரிவு, பாவ காயங்களை குணப்படுத்தும்
பழிவாங்குதல் காயங்களை ஆழப்படுத்தும். - யஹன்றி வார்ட் பீச்சர்.
பரிவு ஒரு கலையைப் போன்றது. அதனை தினமும் பயிற்சி செய்தால்தான் அது வளரும். - காரன் ஆம்ஸ்ட்ராங்.
No comments:
Post a Comment