கடமையும் மடமையும்
கடமையில் விழித்தெழு !
ஆண்டவனையும்
ஆழ்ந்து அறிவது
அவரவர் கடமை.
இறைவன் தந்த
இதயத்தை கொண்டு
இறுமாப்பை அழிப்பது
இன்னொரு கடமை.
அறியாமல் வாழும்
அவனியர் பலரை
அறிவாளி ஆக்குவது
ஆன்றோர் கடமை.
அறிவை வளர்த்த
ஆசானை நாளும்
மறவாமல் வாழ்வது
மாணவர் கடமை.
நீதியை காக்க
வீதிக்கும் கூட
போராட வருவது
பாரினர் கடமை.
சாதியயனும் பேதியை
செவிதனில் புகுத்தினோரை
அவனியில் அழிப்பது
அனைவரின் கடமை.
நோகாமல் பெறுவது
நெடுங்காலம் நிற்காது
என்பதை எண்ணுவது
பெறுவோரின் கடமை.
கொடுத்த வாக்கை
குழப்பாமல் காப்பது
தலைவணங்கி கேட்போரின்
தலையாய கடமை.
தன் மக்கள் வாழ
தன்னலமே இல்லாமல்
தர்மத்தை காப்பது
தலைவரின் கடமை
சேற்றினில் பிறந்து
சோபாவில் தவழ்ந்தாலும்
வந்த பாதையை
வருடி பார்ப்பது
உயர்ந்தவரின் கடமை.
மடமையை புதைத்திடு...
இச்சையின் உச்சத்தால்
கருவினில் உருண்டதை
குப்பையில் துப்புவது
பெற்றவளின் மடமை.
உரிமையைக் காக்க
வெறியோடு வருவோனை
உறிகொண்டு அடிப்பது
வலியவரின் மடமை.
அந்தஸ்தை காக்க
அவனியை கவர்வது
அதிகாரம் கொண்ட
ஆட்சியர் மடமை.
தன் குறையை
தரணிக்கு மறைக்க
மற்றவர் குறையை
முன்வைப்பது தீயவர் மடமை.
அதிக அளவில்
ஆதரவு கொடுத்தால்
பொய்யும் பாரினில்
புதுமையாவது இன்றைய மடமை.
No comments:
Post a Comment