என்ன ஆத்தா, காலை 9 மணியாச்சு, டிபன் தயார் செய்யலையா? என்ன உம்னு இருக்க?
நாம டயாபடிக் பேன்ட்னு உனக்குத் தெரியாதா?
இன்னைக்கு உங்களுக்கு பட்டினிதான்.
நான் என்ன செஞ்சேன்? அதுக்கு இப்படி ஏன் சாகடிக்கிற?
உங்கமேல கோபமில்ல, நம்ம நாட்டில நடக்கிற அக்கிரமத்த நினைக்கும்போது, சாப்பிடாம சாகலாம் போலிருக்கு.
புரியும்படியா சொல்லடியம்மா, இப்படி உயிர வாங்காத?
என்ன புரியும்படியா சொல்றது? பேப்பரெல்லாம் படிக்கிறதில்லையா?
நமக்குதான் வேலையில்ல. வரிக்கு வரி படிக்கிறேன். என்னானு சொல்லி தொலை.
ஏங்க, உத்திரபிரதேச மாநிலத்தில தாத்ரி என்ற ஊர்ல மாட்டு இறைச்சிய சாப்பிட்டாருனு முகமது இக்லாக என்பவனை அடிச்சி, அவங்க குடும்பத்தையே நாசம்பண்ணியிருக்காங்களே, நாம சுதந்திர நாட்டில வாழறமா? அல்லது ஆடு, மாடுகளா வாழறமானு தெரியலை?
ஆமாடியம்மா, மத்தியில ஆட்சியில இருக்கிற நம்ம பி.ஜே.சி கட்சி ஆளுங்க இப்படி அராஜகம் செய்திருக்காங்க.
இதவிட அநியாயம் தெரியுமா, அந்த கட்சி தலைவர், அது ஒரு திடீரென்று ஏற்பட்ட விபத்துனு, சொல்லியிருக்காரு.
தடியயடுத்தவன் தண்டல்காரங்கறது போய், கத்தியயடுத்தவன் கொத்தியயடுக்கும் நாட்டாமை என்பதை போல ஆகியிருச்சு.
நம் நாட்டு பிரதமர் இதற்கெல்லாம் வாயைத் திறக்காம, உலகம் சுற்றிட்டு இருக்காரு.
அமெரிக்காவுக்கு இப்ப பிரதமர் போனப்ப இந்திய வம்சத்தினர் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.
அதெல்லாம் அவருக்கு எறும்பு கடிக்கிற மாதிரி.
இலங்கையில் தமிழர்களை கொடுமையா அழித்தற்கு ஐக்கிய நாட்டு சபை கொண்டு வந்த தீர்மானம் புஷ்வானமா போயிருச்சே!
ஆமான்டியம்மா கொலை செஞ்சவன, அவன் அண்ணனே நீதிபதியா தீர்ப்பிடுவது மாதிரி ஆகுது.
இலங்கை நீதிபதிகளை இலங்கை படுகொலையா விசாரிப்பாங்களாம்.
எல்லாம் நம்ப பலகீனம். சேலத்தில, நடிகை நயன்தாரா வந்தப்ப அவங்கள பார்க்க இளைஞர் அவ்வளவு கூட்டமா!
விஜய்யின் புலி படத்தைப் பார்க்க அவ்வளவு போட்டியாம். ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டதற்காக, பெரிய போராட்டமா!
ஆமா, இப்படி கண்மூடிதனமா வாழ்ந்தா, நம்மல ஏமாளினு நம் தோள்மேல் உக்காந்து நம்மள ஓட்டுவான்.
ஏங்க, தனி நாடு என்று கேட்கும் அளவுக்கு உரிமைக்கு முதலில் போராடினார்கள்.
இப்போது கடிதம், அறிக்கை, நடிகனின் அடிமைகள் என்று விபரமில்லாம வாழ்ந்தா, தமிழருனா ஏமாந்த பேக்கானு தான் எல்லாம் செய்வாங்க.
நம்ம தமிழ்நாட்டு பஸ்யஸல்லாம் தேர்மாதிரி வலம் வந்த காலம் மாறி, இப்ப ஓட்ட வண்டியா ஓடுது.
நாகர்கோவில் பக்கத்தில ஓடும் பஸ்ஸின் ஓட்டையிலிருந்து ஒரு அம்மா கீழே விழுந்திருக்கு.
மழை பெய்யும்போது பஸ் உள்ளேயே குடைபிடித்து போகும் நிலையிருக்கு.
ஏங்க இலவசங்கள் இப்ப யோர்தான் நதிபோல ஓடிகிட்டு இருக்கு.
அம்மா ஸ்வீட் ஸ்டாலு, கேக் 10ரூ, பப்ஸ் 10ரூ என்று குடந்தை பஸ் ஸ்டான்டுல, பறக்குது.
தேர்தலுக்கு இதெல்லாம் முன்னோட்டம்.
தேர்தலுக்குப்பிறகு அவங்க காலுல நாம விழனும்?
செட்டிபட்டியில, ஒரு பொண்ணு ஒரு பையனோட ஓடி போயிருச்சாம். ஏற்காட்டிற்கு வண்டியில போனப்ப கீழே விழுந்து பெருங்காயம் ஆயிடுச்சாம். அத பங்கு சாமியாருகிட்ட விசாரிக்க வந்தாங்களாம்.
அது பொண்ண இழுத்துக்கிட்ட போன பையனுக்கு எதிர்ப்பா இருந்ததாம். அதனால, அன்னைக்கு இராத்திரியில மற்ற பையன்களை அழைச்சிட்டு வந்து பாதர அடிச்சி இருக்காங்க.
கொள்ளை அடிக்கிறவங்களுக்கு அடிமையாகவும், பணி செய்கிறவங்களை இப்படி அவமானமா அடிக்கிறதும். நம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போச்சு.
பசிக்குதடி, சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு.
இதோ நம்ம மகள் சாப்பாடு கொண்டுவற்ரா.
எல்லாம் முன்னேற்பாடு செய்திருக்கிறேன். உங்கள பசியிலெல்லாம் சாகடிக்க மாட்டேன்.
நமது அலசலை பிறகு தொடர்வோம்.

- வாயாடி வண்ணக்கிளி
No comments:
Post a Comment