I. 1 அர 17 : 10 - 16; II. எபி 9 : 24 - 28
நற்செய்தி : மாற் 12 : 38 - 44
பெயர் விளங்க கொடுப்பவர்கள் உண்டு. அடுத்த கைக்கு தெரியாமல் கொடுப்பவர்களும்
உண்டு. அள்ளி கொடுப்பவர்களும் உண்டு, கிள்ளி கொடுப்பவர்களும் உண்டு.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் 231)
வாழ்வில் பகிர்ந்து வாழ்வதே வாழ்வின் நிறைவு என்கிறார் வள்ளுவர். பெருமதிப்புடன் பெரியராய் வலம்வந்த மறைநூல் அறிஞரையும், இரண்டு காசுகளே தன்சொத்தாக பெற்றிருந்து, வெளியே தெரியாது ஒதுக்கப்பட்டவராய் வாழ்ந்த ஓர் ஏழை விதவையையும் வேறுபடுத்திக் காட்டுகிறார் இயேசு. செல்வந்தர் கிள்ளி போடுகிறார், ஏழை விதவை அனைத்தையும் அள்ளி போடுகிறார். ஏழை விதவை அனைத்தையும் அள்ளி போட்டுவிட்டு வெறுமையாக நிற்கிறார். இந்த ஏழை விதவை, நல்ல சமாரியரை போன்றவர் எனலாம். தன் சொந்த நலனையும் பாராது வீழ்ந்து கிடந்தவருக்கு உதவி செய்கிறார் நல்ல சமாரியர். அதேபோல கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்று தன் பொருள் அனைத்தையும் அர்ப்பணித்தாள் ஏழை விதவை. இயேசு அப்பெண்ணின் அர்ப்பணத்தை பாராட்டினார். ஒரு கோவிலில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர்களை
வாசித்தார்கள். அதில் ஒரு நன்கொடையாளர் பெயர் வாசிக்காமல் விடுபட்டுவிட்டது. வழிபாடு முடிந்ததும் நன்கொடை கொடுத்தவர், ஊர்த்தலைவரைப் பிடித்து அடித்துவிட்டார். ஏன் என் பெயரை வாசிக்கவில்லை? என்று திட்டி தீர்த்துவிட்டார். காமராஜ் அவர்கள் ஒரு பெரிய பழம் கோவிலுக்கு சென்றார். அப்போது அருகிலிருந்த செயலரிடம், இந்த கோவிலை கட்டியவர் யார் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றார் அலுவலர். அங்கே பாருய்யா, அந்த டீயுப் லைட்லஅவ்வளவு பெரிய பெயரை எழுதியிருக்கிறார் பாருங்கள். இந்த பெரிய கோவிலை கட்டியவன் பெயரே தெரியாமல் போய்விட்டது என்றார்.
முதல் வாசகத்தில், சாரிபாத் ஊரில் இருந்த கைம்பெண் தன்னிடமிருந்த கையளவு மாவையும் எலியாவிற்கு அளித்ததால் மாவு வற்றாத பாத்திரமாக மாறியது. இயேசு, பெரிய குருவாக, தன் இரத்தத்தையே பலியாக அர்ப்பணித்தார். அது திருப்பி செய்யப்படாத பலியாக மாறியது. முழு அர்ப்பணம் உறவை பெருக்கும். தன் நலத்தை சுருக்கும். இந்த தோசையுடன் போதும் என்றானாம் மகன். வந்த தோசை, இரண்டு தோசைக்கான மாவால் செய்யப்பட்டிருந்ததாம். அதுதான் முழு அர்ப்பணம். வீடு, நகை, கார், மற்ற வசதிகளை பெருக்கி பகிர்தலை மறந்ததால் வாழ்வின் பயனை இழந்து விடுகிறோம். உடன்பிறந்தவர்களுக்கு கூட உதவ நம் மனம் வருவதில்லை. பொதுவாக சுரூபம் வாங்கிக் கொடுத்தல், பீடம் கட்டுதல், திருவிழா ஆடம்பரத்திற்கு மக்கள் தாராளமாக கொடுப்பார்கள். ஏழை பிள்ளைகளின் படிப்பு, பொது நன்மைக்கான திட்டங்கள் ஆகியவைகளுக்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால் அதில் நம் பெயர் இருக்காது, எழுதப்படாது என்ற எண்ணம்.
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புர பலவே (புறநானூறு 189)
“அவர்களைக் (எளியவரை) கண்டும் காணாதது போல் இருப்பவர்
பல சாபங்களுக்கு ஆளாவார் (நீ.மொ : 28 : 27)”
பகிர்வோம், இறைவனிடம் வலம் வருவோம்.
- அருட்பணி. S.I. அருள்சாமி
No comments:
Post a Comment