Pages - Menu

Wednesday, 11 November 2015

பரிசுக்கான விவிலிய விடுகதைகள் - விடுதலைப் பயணம்

1. அப்பப்பா! இது கசக்குதப்பா! எனது பெயரே இதுதானப்பா! மரத்துண்டை என்மீது போட்டாங்கப்பா! நான் மாறி போனேனப்பா! நான் யார்னு சொல்லப்பா! எபிரேயத்தில் என் பெயர் என்னப்பா? என்னை பயன்படுத்தியவர் யாரப்பா? கொஞ்சம் சொல்லுங்கப்பா!
2. டக்கு, டக்னு நடைபோட்டது ஒரு கூட்டம்.  பொக்கு, பொக்குன்னு பறந்து வந்தது இந்தக் கூட்டம்  சவக்குழிக்கா? பாலைவனமுனு சொன்னது அந்தக் கூட்டம். ஒரு கூட்டம் எது? இந்த கூட்டம் எது? அந்தக் கூட்டம் கொஞ்சம் சொல்லுங்களேன்.
3. இவர் இரண்டெழுத்துடையவர், ஆற்றில் இருந்து வாரி வந்தவர், பார்வோன் முன்நிலையில் நின்றார். வானில் அதனை தூவினார். உடனே கொடிய நேரம் வந்தது. மந்திரவாதிகளையும் விட்டு வைக்கவில்லை. தூவியர் யார்? தூவப்பட்டது எது? கொள்ளை நோய் எது?
4. கடவுளின் தயவு பெற்று, தாராளமாய் கொடுக்க மனம் பெற்றவர்கள் இவர்கள். கடவுளின் மக்களுக்குக் கொடுத்தப் பொருளை இரண்டு தானமாக கொடுத்தார்கள். கொடுத்த பொருள் எது? பெற்ற மக்கள் யார்?
5. ச்சோனு பெய்யும் மழையுமல்ல கொட்டோனு கொட்டும் மழையுமல்ல அட அடன்னு பெய்யும் அட மழையுமல்ல  முத்து முத்து தோரணமாம் முத்து மழையும் அல்ல பார்வோனுக்கு கற்பிக்க வேண்டி, கைக்கோலை உயர்த்தினார் ‡ அவர் யார்? வானிலிருந்து பெய்த மழை என்ன மழை?
6. பகலெல்லாம் ஒரு தூண்  இரவெல்லாம் ஒரு தூண்  மக்களை விட்டு அகலவேயில்லை அது என்ன?
7. முழக்கமிடுவது இதன் இயல்பு  வெட்டுவது இதன் இயல்பு மலைமேல் கவிழ்வது அதன் இயல்பு இவை என்ன? நடுங்கியவர்கள் யார்?
8. கால் இல்லாமல் ஓடுவேன் ‡ என்னை  கையால் பிடிக்க இயலாது பஞ்சு போன்று தோன்றுவேன்  பயணத்திற்கு துணை போவேன் ‡ நான்  எழுப்பவில்லை எனில் பயணம் சற்றே தடைபடும். அது என்ன?
9. மலைமேல விளையாடி சிரித்தேன். மண்ணில் மாந்தரின் கண்களை மூடச் செய்வேன் மாந்தரோ மயங்கி, பயந்து கவிழ்ந்தனர்.  நான் யார்?
10. அவர்கள் வைத்திருந்தது மந்திரக்கோல் அவர்கள் வைத்திருந்தது சாதாரணக்கோல் இரண்டுமே உருண்டன, நெளிந்தன, போட்டியிட்டன. ஆனால், சாதாரணக்கோல் மந்திரக்கோலை விழுங்கிவிட்டது; வெற்றி பெற்றது எது? வெற்றி பெற்றவர், மூன்றெழுத்துடையவர்  அவர் யார்?
11. என்றும் அணையாத ஒளி, தினமும் வருகிறது. ஆனால், அது எரியாது போகிறது. மாறாக இவற்றிற்கோ என்றும் அணையா விளக்கு, எரிந்து கொண்டிருக்க வேண்டும். தூயகம் இரவு பகல், தலைமுறை தோறும் கவனிக்க வேண்டும். அது என்ன?
12. அடுக்கு மோதிரமாம் அதற்கு ஆனந்த சைவீசாம். எந்நேரம் பார்த்தாலுமே அது காதிலே பீப்பீ ஊதிடுமே பார்த்து வந்து போட்டுப் புடுங்கும் இக்காலத்தில் இப்படி! அக்காலத்தில் மூன்றெழுத்து உடையவர்; கோலை தட்ட புழுதி எல்லாம் அதுவாக, மாறியது. எல்லா இடமும் போட்டுப் புடுங்கியது. அது எது? தட்டியது யார்?
13. நிறமற்ற என்னை அவர்கள் ஓங்கி அடித்தனர் நானோ யயிலிலிd - ஆக மாறி விட்டேன். ம்rஷ்ஐவஷ்ஐஆ ழழிமிer கிடைக்கவில்லை.
இவர்கள் ஊற்றுதோண்டினாலும் யயிலிலிd தண்ணீர்தான் வந்தது. இவ்விதம் எத்தனை நாட்கள் அவதிபட்டனர். நான் யார்? என் பெயரென்ன?
14. ‘ரா’ என்பது அவள் பெயரின் கடைசி எழுத்து. ‘ரோ’ என்பது அவர் பெயரின் கடைசி எழுத்து இவர்கள் இருவருமே மோசேவுக்கு உரிமை உறவு உள்ளவர்கள். இவர்கள் யார்?
15. பழிக்காதே, சபிக்காதே, தாமதிக்காதே! யார்? யாரை? எதை?
16. செடி எரியாமலே விளக்கானேன். நான் தான் முதல் விஞ்ஞானி என்னை பார்த்து ரசித்த சீமான் யார்? இப்போது விளக்கை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
17. அது ஒரு மெஜஸ்டிக், Miracle ஸ்டிக், wonder stick அவர் கையில் Always stick. அவர் அதை எடுத்தார். குரங்காடவில்லை. Snake ஆடியது. யாருடைய stick? யார் முன்னால்?
18. செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை. இருபத்தி நான்கு கேரட் தங்கம். அசல் தான். உருவாக்கப்பட்டு, ஒரு வார்ப்பு இன்று வைக்கப்பட்டது. இதை அமைத்தவர் யார்? வடிவமைக்க கொடுத்த தங்க நகைகள் எது? நன்றி கெட்ட இஸ்ரயேல் மக்கள் கூறிய வார்த்தை யாது?
19. இதன் முதல் போட்டு Coffee இஸ்ரயேல் மக்களுக்கு குடிக்கச் செய்தவர் யார்? எப்படி?
20. இரண்டு பல்லக்கு உள்ளே! இரண்டு கற்பனைகள் இரண்டு கற்பலகைகளில் பத்து முத்துக்கள், பத்து முத்துக்களும் உன்னதரால் பதிக்கப்பட்டவை. அவை என்ன? யாரால்?

1 comment:

Ads Inside Post