Pages - Menu

Monday, 2 May 2016

அமெரிக்கக் கடிதம், திட்டமிடுதல்

அமெரிக்கக் கடிதம்
  திட்டமிடுதல்
-
 சவரி, கேரி, அமெரிக்கா

எடுத்தோம், கவிழ்த்தோம் என்றும் அரக்கப்பரக்கச் செய்தல் என்றும் நமது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. செய்வன திருந்த செய் என்பது ஒளவையாரின் முதுமொழி. அரசு செய்கின்ற பணிகள் அனைத்தும் அரைவேக்காடாகவே இருக்கின்றன என்று சொல்லலாம். அரசு அமைக்கும் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள் அனைத்தும் ஓட்டை உடசலாகலே உள்ளன. வரும்காலத்தைப் பற்றி நாம் கவலைபடவதில்லை. திட்டமிடுவதில்லை. இதனால் நமது பொருள்களும், பணமும் பாழாகின்றன. இதற்கு நேர் எதிர் நிலையில் அமெரிக்கர், ஐரோப்பியர் செயல்படுவதைப் பார்க்கமுடிகிறது. இதனைத்தான் இங்கு இக்கட்டுரை ஆசிரியர் பகிர்ந்துக் கொள்கிறார். இயேசுவே, அரசன் ஒருவன் தன் எதிரியை சந்திக்க, எப்படி சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுகிறான் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார் (லூக் 14 : 31). நமது தனிப்பட்ட பொருளாதார ஆளுமையில் சரியாக திட்டமிடாததால், பல இழப்புகளுக்கு ஆளாகிறோம். 

இந்த வாரம் உங்களுடன் திட்டமிடுதல் ((Planning) பற்றி பேச விரும்புகிறேன். அமெரிக்கர்கள் எந்த செயலை தொடங்குவதற்கு முன், அக்கு வேரு, ஆணி வேராக ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பதற்கு புள்ளி விவரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு சாலையில் ஒர் இடத்தில் விபத்து நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த விபத்தைப் பற்றி ஆராய கீழ்வரும் கேள்விகளை முன் வைக்கிறார்கள்.
கடந்த பத்து வருடங்களில்,

1. எத்தனை விபத்துகள் இந்த இடத்தில் நடந்துள்ளன?
2. எந்த நேரங்களில் (அதி காலை, மதியம், இரவு, நடுச்சாமம்) நடந்துள்ளன?
3. வாகனத்தை ஓட்டியவர்களின் வயது என்ன?
4. ஓட்டியவர்கள் பெரும்பாலனோர் ஆண்களா? பெண்களா?
5. விபத்து நடந்த போது மழை பெய்ததா? வெயில் அடித்ததா?
6. விபத்து நடந்தபோது வாகனம் எவ்வளவு வேகத்தில் வந்துள்ளது?
7. வாகனத்தை ஓட்டியவர்கள் குடித்திருந்தார்களா? அல்லது மற்ற கவன குறைவு காரணமா?
8. வாகனப் பழுது காரணமா?

இந்த கேள்விகளின் பதில்கள் அந்த இடத்தில் விபத்துகளை பிற்காலத்தில் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய உதவும். உதாரணமாக பெரும்பாலான விபத்துக்கள் மழை காலத்தில் நடந்திருந்தால் அங்கு மழை தண்ணீர் வடிய ஏற்பாடு செய்யலாம். அல்லது காலை நேரத்தில் அலுவலகம் ஆரம்பிக்கும் நேரத்தில் நடந்தால், அங்கு  traffic light வைக்க ஏற்பாடு செய்யலாம். வாகனம் வேகமாக வந்து விபத்து நடந்தால் அ வியாதி என்ன என்று தெரிந்தால் தானே சரியான மருந்து கொடுக்க முடியும். கடந்த காலத்தில் நடந்த புள்ளி விவரங்கள், பிரச்சனை என்ன என்று துல்லியமாக கணிக்க உதவுகின்றன. இந்த புள்ளி விவரங்களை சேகரித்து கணணியில் பதிவு செய்ய நிறைய பணத்தை செலவிடுகிறார்கள். எந்த ஒரு முடிவையும் புள்ளி விவரங்கள்(data) இன்றி எடுப்பது இல்லை.

நாமும் எதையும் ஆய்ந்து அறிந்து நல்ல முடிவுகளை எடுப்போம். திட்டமிடுதலைப் பற்றி அந்தோணிமுஸ் என்பவர் கூறுகிறார்,

திட்டமிடுதலை தவிர்த்தால் தோல்வியை தவிர்க்க முடியாது.

No comments:

Post a Comment

Ads Inside Post