இயற்கை மூலிகை மருத்துவம்
பிணிகளை வெல்லும் கனிகள்
- ம. இராஜரெத்தினம்,
இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை
எலுமிச்சம் பழம் :
தாகம் நக நோய் தாழாச்சிலி பாத நோய்
வேகங்களுண் மாதம் வீறு பித்தம் ‡ மாகண்ணோய்
கன்ன நோய் வாந்தியும் போம் கட்டுவாதத் தொழிலின்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து - சித்தர் பாடல்
எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து ஆறுமணிக்கு ஒருமுறை சாப்பிட்டு வர இரண்டு நாளில் பேதி நின்றுவிடும். தாகம், நகச்சுற்று, யானைக்கால், பித்தம், கண்நோய்கள், காதுவலி, வாந்தி முதலிய நோய்களுக்கு சிறந்தது.
பித்த மயக்க ருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடும் காண் - மெத்த
உலர்ந்த வெறு வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை பெண்... - சித்தர் பாடல்
பகல் உணவிற்கு பின் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வர ஜீரணம் தூண்டப்படும். அக்கினி, மாந்தம், கபகட்டு, பித்தநோய் நீங்கும்.
இலந்தை பழத்தால் பித்தம், பித்த திரிதோம், வாந்தி ஆகியவை போம். இதை பசி நேரத்தில் உட்கொண்டால், வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். இலந்தைப் பழத்தை உணவு உட்கொண்ட பிறகுதான் சாப்பிட வேண்டும்.
திராட்சை (கொடி முந்திரிப்பழம்) :
மெய்ப்புடைய பித்தம் இரத்தம் பித்தம் செப்பு
மடி மந்த மேகமும், போம். சின்னக்
கொடி முந்திரிக் கனிக்குக் கூறு - சித்தர் பாடல்
உலர்ந்த திராட்சைப் பழத்தை தேனில் ஊற வைத்து தினசரி பாலுடன் ஒரு ஸ்புன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
சிறிய கொடி முந்திரிப் பழத்திற்குச் சுரம், தாகம், பித்த நோய்கள் தவிர விம், உன் மத்திரம், மூத்திர நோய் ஆகியவை நீங்கும். உடல் குளிர்ச்சியடைந்து கண்களுக்கு பார்வையை உண்டாக்கும். விந்துவை அதிகப்படுத்தும்.
சீத கசப்புஞ் செறியிரத்தக் கடுப்பும்
மோதுமதி சாரமும் போகம் உண்மையே - மேது கட
னீரைப் பருகி முகினேரகை மின்கொடியே
காரைப் பழத்திற்கு காண். - சித்தர் பாடல்
குத்துச் செடியாக இருக்கும். இதில் முள் அதிகமாக இருக்கும். இதன் பழம் இனிப்பாக இருக்கும். எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கக் கூடியது. பசியைத் தூண்டும். செரிமானத்தைச் கொடுக்கும். இருமலுக்கும், நெஞ்சு வலிக்கும் நல்லது.
காரைப் பழம், சீத இரத்தக் கடுப்பும், இடை விடாத பேதியையும் குணப்படுத்தும். இதன் இலையை மைபோல் அரைத்து ஒரு புன்னைக்காய் அளவில் மோரில் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட எட்டு நாட்களில் சர்க்கரை நோய் குணமாகும்.
கோவைப் பழம் :
கண்ணுக்கு குளிர்ச்சி பெறும் காசமோடு வாயு மாறும்
புண்ணும் சிரங்கும் புரண்டோடும் ‡ நண்ணுடலாம்
மீதிலார் வெப்பம் அகலும் வீழா நீர்கட்டு ஏகும்
கோதிலா கோவைக்கே
கோவைப்பழம் தினமும் இரண்டு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. சிறுநீரகத்தை துப்புரவு செய்வதில் சிறப்புடையது.
மாதுளம் பழம் :
கடுகடுக்கும் முகம் மாதுளம் பழத்தைக் கண்டால் புன்னகை பூக்கும்.
வெடித்து வீழ் பாகத்தை வாங்கி மெல்லிய சீலைக் கட்டிக்
கடுக்கெனப் பிழிந்து கொண்டு கண்டு சர்க்கரையும் கூட்டி
குடித்திட வெப்ப மாறும் குளிர்ந்திடும் அங்கமெல்லாம்
வடித்த நன்மொழியினளே மாதுளம் பழத்தின் சாறே - தேரையர்.
உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும். ய ரோகிகள், சர்க்கரை நோயாளிகள், ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் மந்தமுடையவர்கள், அதிக உஷ்ணத்தால் குடல் பலகீனமாகி பேதியில் கொண்டு வந்துவிடும். நோயாளிகள் உடல் உஷ்ணம், பித்தம் அதிகரித்து, வாந்தி, விக்கல், வாய்நீர் சுரப்பு, வெப்பம், கண் எரிச்சல் முதலிய தொந்தரவு உடையவர்களும், காதடைப்பு, சுரம், மயக்கம், குமட்டல், நெஞ்சு எரிவு, கபால வெப்பம் உடையவர்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டால் சரீர வனப்பும், அழகும் உண்டாகும். இதை சொர்க்கத்தின் பழம் என்பார்கள்.
No comments:
Post a Comment