குழந்தைக்காக ... (சிறுகதை)
அது வசதி படைத்த குடும்பம். கணவர் கணிணி அலுவலகத்தில் பணிசெய்கிறார். மாதம் மூன்று லகரம் சம்பளம், மனைவி இரயில்வேயில் வேலை. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். பெரிய மாளிகைப் போன்ற வீடு. எந்த குறையும் இல்லை.
ஆனால் ...
குழந்தையில்லா பெரிய குறை. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைக்காக, மருத்துவர், திருத்தலங்கள் இப்படி
சந்தித்து விட்டு, குழந்தை ஒன்றை தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்தனர். இப்போது குழந்தைகளை தத்தெடுப்பதும் பெரிய சாதனையாகிவிட்டது. வீட்டிற்கு ஒன்றிரண்டு குழந்தைகள் என கடடுப்பாடாகி விட்டது. பல இடங்களில், பல நிறுவனங்களில், பல குடும்பங்களில் தத்தெடுக்க குழந்தையைத் தேடினார்கள். பயனில்லை, பலநாள்கள் மன உழைச்சலுக்கு ஆளானார்கள். பலநாள்கள் செபித்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
ஒரு குடும்பத்தில் எட்டு பெண் பிள்ளைகள். தகப்பன் இறந்து விட்டான். அதில் ஒரு பிள்ளையை தத்தெடுக்கக் கேட்டார்கள். ‘பிச்சையயடுத்தாவது என்பிள்ளைகளை காப்பாற்றுவேன். பிள்ளைகளை தத்தெடுக்கக் கொடுக்க மாட்டேன்’ என்று மறுத்ததுவிட்டாள் தாய். ‘உங்கள் குடும்பமே என் வீட்டிற்கு வாருங்கள். எங்களோடு வாழுங்கள்’ என்றார்கள் தத்தெடுக்க விரும்பியவர்கள். ‘நீங்கள் வேண்டுமென்றால் எங்களோடு தங்கி வாழுங்கள், எட்டு பிள்ளைகளோடு சேர்ந்து வாழலாம்’ என்றாள்
அந்தத்தாய். கணவனும், மனைவியும் மாறி மாறி அந்த ஏழை குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். வாழ்ந்தும் பார்த்தனர். வாழ்க்கை எவ்வளவு இனியது என்று புரிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment