Pages - Menu

Tuesday, 31 May 2016

அன்பின் மகிழ்வு AMORIS LAETITIA. The Joy & Love

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014 அக்டோபர் 5 முதல் 19 வரையிலும், 2015 அக்டோபர் 4 முதல் 25 வரையிலும் வத்திக்கான் நகரின் குடும்பங்களுக்கான மாமன்றப் பேரவையினைக் கூட்டினார். இப்பேரவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருச்சபையின் போதனையினை தொகுத்து மார்ச் 19, 2016 அன்று புதுலிrஷ்வி ஸிழிeமிஷ்மிஷ்ழி என்ற தலைப்பில் திருத்தூது மடலாக வெளியிட்டார்.
இது 325 பத்திகளையும், 9 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இதில் காணும் கல்வியியல் கூறுகளை நாம் தேர்ந்து தெளிவோம்.

1. இறைவார்த்தை ஒளியில் :

இந்தத் திருமடலின் முதல் அதிகாரம் இறைவார்த்தையின் வெளிச்சத்தில் நமது வாழ்வினைச் செம்மைப்படுத்திக் கொண்டோம் என்ற அழைப்போடு தொடங்குகிறது. யூதத் திருமணச் சடங்குகளிலும், கிறிஸ்தவத் திருமண வழிபாடுகளிலும் மக்கள் பயன்படுத்துவது திருப்பாடல் 128. ‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும், நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் நன்மைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக’ (திருப்பாடல் 128). இல்லற வாழ்வில் அடியயடுத்து வைக்கும் தம்பதியினர் வேண்டி விரும்பி எதிர்ப்பார்க்கும் நற்பேறுகள் இவை தானே!

விவிலிய நூல்களில், பல காதல் கதைகள், பிறப்புக்கள், குடும்ப வரலாறுகள் மற்றும் குடும்ப உறவுகள், சிக்கல்கள் போன்ற எதார்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன (எண் : 8). குடும்பம் என்பது புரிந்து கொள்ளப்படாத புதிர் அல்ல; மாறாக நடைமுறை எதார்த்தமே. தொடக்கம் முதலே, குடும்ப உறவுகள் பாவத்தோடு முரண்பாடு கொண்டதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது (எண் : 19). எனவே இறைவார்த்தை புரிந்து கொள்ளப்பட முடியாத புதிர்களைக் கொண்டதல்ல. மாறாக இல்லறத்தின் இனிமை மற்றும் தோழமை உணர்வு கொண்டு வாழும் போது ஏற்படும் உரசல்களைச் சுட்டிக்காட்டி, இவ்வுலக  பயணத்தின் இலக்கினைத் தெளிவாக்கும் கலங்கரை விளக்காக இறைவார்த்தை திகழ்கிறது (எண் : 22).

2. குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும் :

விவிலியப் பிண்ணணியில் இன்றைய குடும்ப நிலைகளை அலசி ஆய்கின்ற போது கீழ்க்காணும் சிக்கல்கள் வெளிப்படுகின்றன (எண் : 56).

அ. பாலின சமத்துவமின்மை.

ஆ. கடவுளின் படைப்புத் திறனில் பங்கேற்பதற்கெதிரான சிசுக்கொலை.

இ. மகளிர் மற்றும் சிறார் மீதான வன்முறை.

ஈ. சட்டங்களை சுயநலத்துக்கான ஆதாயமாக்கிக் குடும்பகளைச் சீரழித்தல்.

உ. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரை இழிவாகக் கருதுதல்.

ஊ. சமூகத்தில் காணும் வல்லுறவு.

குடும்பங்களின் அன்றாட உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மறுத்து ஏற்றுக் கொள்ளாத நிலையில், திருச்சபை இனிய இல்லற வாழ்வினுக்கு வழிகாட்ட இயலாத (எண் : 31). தாண்மை உணர்வு, தன்னல மறுப்புக்கும், தியாக வாழ்வுக்கும் எதிரானது (எண் : 33). இந்நிலையில் தூய ஆவியாரின் ஏவுதலுக்கும் செவி சாய்க்க முடியாது.

3. மனசாட்சியை மையமாகக் கொண்ட கல்வி :

ஒவ்வொரு தனி மனிதருக்கும் இறைவனின் குரலாகத் திகழ்வது அவரது மனசாட்சி. நன்மை, தீமையை பகுத்தாய்ந்து நலமானதைத் தேர்ந்து, செயல்பாட்டுச் சிந்தனையினை உருவாக்குவதே உண்மையான கல்வியின் நோக்கமாகத் திகழ முடியும். வாழ்வுக்கு ஒவ்வாத இறையியல் மற்றும் கருத்துத் திணிப்பு மனசாட்சியைக் குழப்பத்திற்குள்ளாக்கி தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. மனசாட்சி மையக் கல்வி இன்றைய காலத்தின் கட்டாயமாகும் (எண்கள் 36 ‡ 38).

4. குடும்பத்தின் அழைப்பு :

இத்திருத்தூது மடலில் எண்கள் 58 ‡ 88 வரையுள்ள கருத்துக்கள் குடும்பத்தின் மாண்புமிக்க அழைப்பினை வெளிப்படுத்துகின்றன. குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை. இந்தக் குடும்பத்திலிருந்துதான் உத்தமக் குடிமக்கள் உருவாக்கப்படுகின்றார்கள். நலமிக்க சமூகத்தின் வேர்களே குடும்பங்கள். எனவே ஒவ்வொரு குடும்பமும் இயேசுவை உற்றுநோக்கி இறைவார்த்தை என்னும் விதைகளை தமது குடும்பத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகள்தான் பிறசமயங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இலக்கியங்களில் காணும் பலன் அளிக்கும் தன்மை கொண்டவை. இவையே பொறுப்புள்ள, அன்பும் ‡ பண்பும் மிகுந்த, பிறரை மதிக்கின்ற, தியாக உணர்வுள்ள குடிமக்களை உருவாக்கும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

5. திருமணத்தில் அன்பு (89 - 164) :

1 கொரி 13 : 4 - 7ல் பவுல் அடியாரின் அன்பின் பண்பு நலன்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. எதிரும், புதிருமான உளவியல் உணர்வுகள் இளந்தம்பதியினரை காம உணர்வினுக்கும், அதன் இன்பத்திற்கு மட்டுமே இட்டுச் செல்கின்றன. உனக்கு நான், எனக்கு நீ. நீயும், நானும் ஒன்று. ஓருடல், ஈருயிர் என்ற சிந்தனை வளர்ந்து, தன்னலம் மறுத்து, தியாகம் மிகுந்து காணப்படும் குடும்பமே சீரிய செம்மைமிக்க அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை  அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை குறைவுபட்ட மனிதர்களிடம் முழுமையாக எதிர்ப்பார்ப்பது ஏற்புடையதல்ல. அதே வேளையில் இறைவனின் கொடைகளை தம்பதியர் உணர்ந்து இல்லற இன்பமிகு உறவினைப் பகிர்ந்து ஒன்றுபட்டு வாழ்ந்திட முனைதல் சாலச் சிறந்தது (எண் : 123).

வாழ்வு முழுவதும் ஒரே விதமான, மன உணர்வோடு வாழ்வது அரிதான ஒன்றுதான். ஆனால் இல்லற இணைப்பு என்பது அழகு குறைந்தாலும், முதுமை அ டைந்தாலும், கவர்ச்சி மங்கினாலும் என்றுமே இளமை எண்ணம் கொண்டு வாழ்தலே சீர்மிகு தம்பதியரின் சிறப்பான பண்பாகும் (எண் : 163). இன்றைய கல்வி மேற்காணும் பண்புகளை பிஞ்சு மனங்களில் விதைக்கக் கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும்.

6. பயன் விளைவிக்கும் அன்பு (எண்கள் : 165 - 198) :

ஐந்தாம் அதிகாரம் அன்பின் கனிகள் மற்றும் குழந்தைப் பேறு பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறது. புதிய வாழ்வினை வரவேற்கும் இளம்தம்பதியர் மக்கட்பேற்றினை அடைந்து, தாய், தந்தை என்னும் நிலையினை அடைகின்றபோது இவர்கள் ஆன்மீக மற்றும் உளவியல் முதிர்ச்சி பெறுகின்றனர்.  குழந்தைப் பேற்றுக்குப்பின் மாமன் ‡ அத்தை , சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, நண்பர்கள் போன்ற புதிய உறவுகள் முளைவிட்டுத் துளிர்க்கின்றன. திருமண அருட்சாதனம் இளையோர், முதியோர், சகோதர, சகோதரிகள் மற்றும் பிறருடனான உறவுகளை உறுதிப்படுத்தும் சமூகப் பணிபினையும் வளர்க்கின்றது.
                                  - தொடரும்.

No comments:

Post a Comment

Ads Inside Post