விவிலிய விடுகதைகள்
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
திருத்தூதர் பணினள் இயல் 15 முதல் 28 முடிய
1. பூங்காற்று வந்தது. திடீரென அது
பேய்க் காற்றாய் மாறியது
கலக்கம் வந்தது. நடுக்கம் வந்தது.
பவுல் வந்தக் கப்பலையும் உடைத்துப்போட்டது.
அது என்னக் காற்று ?
2. தீவு ஒன்று வந்தது.
நல்ல மனம் கொண்டது.
நன்கொடைகள் தந்தது
பாச மழைப் பொழிந்தது
பவுலை தெய்வம் என்றது.
அது எந்தத் தீவு?
3. நிலநடுக்கம் வந்தது
சிறைக்கூடம் அதிர்ந்தது
சிறைக் கதவுத் திறந்தது
தற்கொலைக்கு துணிந்தது
அவன் யார்?
4. அடிமைப் பெண்ணவள்
குறிசொல்லி வருமானத்தைக் கொடுப்பவள்
கூவி உண்மையைச் சொன்னாள்
வரால் ஆவி நீங்கப்பட்டவள்
அவர் யார்? அவள் யார்?
5. மூன்றெழுத்து உடையவர்
வியாபாரத்தில் கெட்டி
நம்பிக்கையுள்ள மகராசி
ஊழியர்களை உபசரித்த சேவகி
உள்ளம் திறந்த உத்தமி
இவள் யார்?
6. நம்பிக்கையின் தாய் யூதப் பெண்
நம்பிக்கையின் தந்தை கிரேக்கம்
நம்பிக்கையின் பிள்ளை இவர்
இவர்க்கு விருத்தசேதனம் செய்து
நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றவர்
7. எல்லாம் தெரியும் கடவுளுக்கு
கண் தெரியாத நேரம்
அவர்களை பொருட்படுத்தவில்லை
எவர்களை ? எப்போது ?
8. கண்ணிருந்தும் காணாததால்
காதிருந்தும் கேளாததால்
உள்ளத்தாலும் உணராததால்
நீங்கள் தள்ளியப் பரிசை
அடுத்த இனத்தார்க்கு அளித்துள்ளார்
அது என்ன? கூறியது யார்? பரிசு என்ன? யாருக்கு?
9. சண்டையிது சண்டையிது
விவாதத்தின் சண்டையிது
உண்டென்றது ஒரு கூட்டம்
இல்லை என்றது மறுக் கூட்டம்
மத்தளத்துக்கு இருப்பக்கமும் அடி
மாட்டிக்கொண்டார் இவர்?
இவர் யார்? அவர்கள் யார்?
10.எனது ஊர் அலக்சாந்திரியா
நான் ஒரு யூதன், சொல்வன்மை மிக்கவன்
மறைநூல் புலமை உடையவன்
யோவானின் திருமுழுக்கை மட்டும் அறிந்தவன்
நான் யார்?
11. உங்களைப் பார்க்க வந்தேன்
உங்கள் சமயப்பற்றைக் கண்டேன்.
உங்கள் தொழுகையைக் கண்டேன்
சூப்பரான தலைப்பு ஒன்று கண்டேன்
அது சும்மா கிடந்தது. அது என்ன?
சொன்னது யார்?
12. இறைப் புகழ் பாட
சிறைக் கதவு திறக்க
கைதிகள் ஓடியிருப்பர் என்று நினைக்க
பட்டயத்தை உருவி மாய்த்துக்கொள்ளப் பார்த்தானே இவன் யார்?
13. ஆசை வந்தது முன்னே
பவுல் வணங்கும் இயேசுவின் பெயரை
சொன்னார் பின்னே
ஆவி தாக்கியது பின்னே
அலரி ஆடையின்றி ஓடினர் அண்ணே.
யார் இவர்கள்?
14.பள்ளியில் தூங்கியவன்
படிப்பை இழந்தான்
கடையில் தூங்கியவன்
காசை இழந்தான்
ஜன்னலில் தூங்கியவன்
உயிரை இழந்தான்
இவன் யார்?
15. நான் மூன்றெழுத்து உடையவன்
மூன்றெழுத்து ஊரைச் சார்ந்தவன்
பவுலின் கச்சையைக் கட்டிக் கொண்டு
கணப்பொழுதில் இறைவாக்குரைத்தேன்.
No comments:
Post a Comment