வெற்றி உங்கள் கையில்
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
விந்தையைப் பிறப்பிக்கும் வித்தியாசம்
Fatherஎது செஞ்சாலும் Different ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக முடியும். இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள், என் குடும்ப நண்பரின் வீட்டில் இருக்கும் நபர்கள். அவர்கள் இவ்வார்த்தைகளை சொல்வதோடு நின்று விடாமல் செய்தும் காட்டினார்கள். ஆம்! அவர்கள் வீட்டில் நடைபெற்ற திருமண ஒப்பந்தம் மற்றும் திருமண விழாவில் Different ஆக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு வெற்றியும் பெற்றார்கள். அக்குடும்பத்தில் உள்ள மகனின் திருமண ஒப்பந்த விழாவிற்கும், திருமணத்திற்கும் நான் சென்றிருந்தேன். அதில் எப்படி அவர்கள் Different ஆக செய்தார்கள் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
திருமண ஒப்பந்த விழாவில் தட்டுகளைமற்றும் சடங்கினை Different ஆக செய்திருந்தார்கள். ஒரு தட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி அது ஒளியாம் இறைவனை குறிப்பதாக சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டு தட்டுகளில் திருமணம் செய்ய இருக்கும் இருவரின் ஆடைகளை வைத்துக் கொடுத்தார்கள். மூன்று தட்டுகளில் முக்கனிகள், நான்கு தட்டுகளில் அச்சம், மடம், பயிர்ப்பு, ஞானத்தை குறிக்கும் வகையில் இனிப்பு மற்றும் காரவகைகளைக் கொடுத்தார்கள். ஐந்து தட்டுகளில் பஞ்ச பூதங்களை குறிப்பதாக சொல்லியும், ஆறு தட்டுகளில் அறுசுவைகளை குறிப்பதாக சொல்லியும், ஏழு தட்டுகளில் வானவில்லின் வண்ணங்களைக் குறிப்பதாகச் சொல்லியும், எட்டு தட்டுகளில் திசைகளை மேற்கோள் காட்டியும், ஒன்பது தட்டுகளில் நவதானியங்களை அறிவுறுத்தியும் பெண் வீட்டாரிடம் கொடுத்தார்கள். மொத்தம் 61 தட்டுகளை கொடுத்தார்கள். அவர்கள் அனைத்து பொருட்களையும் அர்த்தத்தோடு கொடுத்தார்கள். அதாவது வரப்போகும் மருமகள் எல்லா வகையான விவரங்களையும், நற்பண்புகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று பிறந்த வீட்டிற்கு பெருமையையும், புகுந்த வீட்டிற்கு நற்பெயரையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அனைத்து தட்டுகளையும் அளித்தார்கள். அனைவரும் அவர்கள் செய்ததை மனமுவந்து பாராட்டினார்கள். திருமண விழாவிலும் ஆலயத்தில் ம்ஷ்க்ஷூக்ஷூereஐமி ஆக செய்தார்கள்.
அருட்பணியாளர்கள் பவனியாக பீடத்திற்கு வந்த பிறகு மணமகன் அவருடைய தோழர்களோடு ஆலயத்திற்கு வந்தார். பிறகு மணமகளின் தந்தை மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு, பீடத்திற்கு முன் வந்து மணமகனிடம் ஒப்படைக்கிறார். திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை விட்டு வெளியே சென்று அனைவரும் மணமக்களுக்கு மலர்தூவி வாழ்த்து கூற பலூன்கள் பறக்கவிடப்பட்டு கரம் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர்கள் அளித்த திருமண விருந்திலும், திருமணத்தில் கலந்துக் கொண்டு சென்றவர் களுக்கு கொடுத்த அன்பளிப்பிலும் Different ஆக நிறைய செய்தார்கள். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுள் பலர் நல் வார்த்தைகளை சொல்லி பாராட்டிச் சென்றார்கள். எப்படி அக்குடும்பத்திற்கு இப்படிப்பட்ட பாராட்டு கிடைத்தது? அவர்கள் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். Different ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக முடியும். ஆம், அக்குடும்பத்தினர் Different ஆக செய்தார்கள். பாராட்டு மட்டுமல்ல வெற்றியும் கைக் கூடியது
.
நமது நாட்டில் 1019.5 மில்லியன் Mobile Connection உள்ளதாக TRAI மே மாதம் 2017ல் அறிவித்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் செல்போன் பல்வேறு நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், அமெரிக்க நாட்டின் தயாரிப்பான Apple நிறுவனத் தயாரிப்பில் வரும் Phoneகளுக்கு உள்ள சிறப்பே தனிதான். எப்படி இப்படிப்பட்ட வெற்றியை அந்த நிறுவனம் பெற முடிந்தது என்றால் அந்நிறுவனத்தின் Slogan “THINK DIFFERENT” என்பதுதான். இந்த Sloganஐ
Apple நிறுவனம் 1997லிருந்து 2002 வரை தனது பொருட்களை விற்பனை செய்வதற்கு விளம்பர Sloganஆக பயன்படுத்தியது. Slogan மட்டுமல்ல தயாரிப்புகளும் Different ஆகவும் தரமானதாகவும் இருப்பதால் உலகம் முழுவதும் தனது வெற்றிப் பயணத்தை இன்றும் தொடர்கிறது. எந்தப் பணியைச் செய்தாலும் அதில் Different ஆக செய்பவர்கள் வெற்றியை அதிகமாக பெறுகிறார்கள். Different ஆக பணிபுரியும் ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், நாட்டுதலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீக வாதிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், சமூக சேவர்கள், திரைப்பட நடிகர்கள், மாணவர்கள் மற்றும் பல துறையை சார்ந்த பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை அறுவடை செய்தவர்கள் தானே. சென்ற ஆண்டில் ஏற்கனவே Different ஆக செய்து வெற்றிக் கனிகளை சுவைத்தார்கள் மீண்டும் தொடர்ந்து சுவைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் Different ஆக செய்து வெற்றிப்பயணத்தை துவங்க வாழ்த்துகிறேன்.
அன்றாட வாழ்வின் சாதாரான வியங்களையும், அசாதாரன முறையில் செய்யும் போது உலகத்தின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும். - George Washington Carver
No comments:
Post a Comment