விடியும் நேரம்
கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி
(இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறுகதை)
‘தாமு, விரசா பார்சலை எல்லாம் லாரியில் ஏத்து, மழை தூறிக்கிட்டு இருக்கு, வேகமா வர்றத்துக்குள்ளார பார்சலை ஏத்திட்டு தார்பாயை போட்டிடு, விடியிறதுக்குள்ளார விழுப்புரம் போகனும்,’
சரி அண்ணே...
‘ஒரு வாரமா செம மழை பேஞ்சதால அங்க தண்ணி தேங்கிட்டு வெள்ளம் மாதிரி லாரி போக முடியாம தத்தளிச்சிக்கிட்டு இருந்தது. இந்த ஜனங்க வேற புரளியை கிளப்பிவிட்டு, ஏரி உடைஞ்சிடுச்சி, ஊர் மூழ்கப்போவுது, அப்படி இப்படின்னு சொல்லி கலங்கடிச்சி க்கிட்டு இருக்காங்க. ஒரு வாரமா மழை பேஞ்சதால லோடு ஏத்துற வேலை இல்லை. லாரிகளும் ஓடல இன்னைக்குத்தான் கொஞ்சம் பரவாயில்லை. விழுப்புரம் இசக்கி அண்ணாச்சி வீட்டு கல்யாணத்துக்கு போற சீர் சாமான் பார்சல் விடியரதுக்குள்ளார போயிடனும். மழை வராம இருக்கனும், பெரிய இடம், சரக்கு போலனா பொல்லாப்பா ஆயிடும்’ என்று லாரி டிரைவர் புலம்பிக் கொண்டே கடிகாரத்தை பார்த்தார்.
‘அண்ணன் பார்சலை எல்லாம் ஏத்தியாச்சி. தார்பாயும் போட்டாச்சி, மணி பத்துதான் ஆச்சி. ஆறுமுகம் அண்ணன் கடையில புரோட்டாவும் டீயும் சாப்பிட்டு கிளம்பினா இரண்டாம் சாமத்துக்கே போயிடலாம்.’
‘சரி, தாமு நான் கிளம்புறேன் போற வழியில நீயும் ஏங்கூட சாப்பிட்டு இறங்கி வீட்டுக்கு போ. நாளையிலேயிருந்து குமரன் பர்னிச்சர் கடைக்கு வேலைக்குப் போயிடு, மாதம் பத்தாயிரம் கிடைக்கும், ரொம்ப வருத்துக்கு அப்புறம் உன்னை பார்த்தேன். நம்ப ஊர் பையன் கஷ்டப்படுறத பார்க்க சங்கடமா இருந்திச்சு. நல்லவேலை கிடைக்காம லோடு ஏத்திக்கிட்டு நிக்கிறது படிச்ச புள்ளைக்கு அழகில்ல. முதலாளி நல்லவரு, இந்த கடைக்குத்தான் பத்து வருமா லாரி ஓட்டிக்கிட்டு இருக்கேன். விழுப்புரம் போயிட்டு வந்தப்பிறகு முதலாளிக்கிட்ட சொல்லி கொஞ்சம் முன்பணம் வாங்கித்தரேன். நீ வாங்கின கடனை அடைச்சிட்டு, இனிமே கந்து வட்டிக்கு பணம் வாங்கிற வேலையை விட்டுடிடு, அது நம்ம வாழ்க்கையையே அழிச்சிடும். சரி லாரியில ஏறு வழியில இறக்கிவிடுறேன்.’
டிரைவர் சொன்னத கேட்டப்ப எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருந்தது. நேற்று கந்து வட்டி வேலுஅண்ணன் திட்டின வார்த்தைகளை நினைச்சி பார்த்தேன். இப்படி கீழ்த்தரமா பேசுறவங்க முன்னால டிரைவர் அண்ணன் மாதிரி கணிவா ஆதரவா பேசுறவங்களும் இருக்கிறதுனாலத்தான் இந்த உலகம் அழியாம இருக்கு போல, மனசுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே டிரைவர் அண்ணன்,
‘தாமு, இறங்கு வேளச்சேரியிலதானே உன் வீடு இருக்கு, பக்கம்தான் இறங்கி போ. தண்ணி நிக்கிது பார்த்துப்போ,’ டிரைவர் அண்ணன் சொன்னவுடன் இறங்கி தண்ணீரில் நடக்க ஆரம்பித்தேன்.
நானும் செல்வியும் ஊரை பகைச்சிகிட்டு சாதிமறுப்பு திருமணம் செஞ்சிக்கிட்டு சென்னைக்கு ஓடிவந்து கஷ்டப்படுற கதைய கேட்ட டிரைவர் எனக்கு ஒரு வேலைக்கு வழி செஞ்சிட்டாரு. நான் இனி கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த வியத்தை உடனே செல்விகிட்ட சொல்லுனும். ஓட்டமும் நடையும்மா வீட்டைத் தேடி ஓடினேன் என்று சொல்ல முடியாது தண்ணீரில் நீஞ்சி கரைச்சேர்ந்தேன்னு சொல்லலாம்.
இது என்ன? ஏன் வீட்டுக்கிட்ட ஒரே கும்பல்?, என்ன ஆச்சி செல்விக்கு? நான் ஓட முற்பட எதிர்வீட்டு காளியக்கா என்னை நோக்கி ஓடி வந்தாங்க.
‘தாமு, சீக்கிரம் வாப்பா, நம்ப செல்வி மருந்து குடிச்சிட்டாப்பா, உன் வீட்டுக்கு வந்து செல்விக்கிட்ட பேசலாம்ன்னு வந்தப்ப. அவ மயங்கி கிடந்தாப்பா. எலி மருந்த குடிச்சியிருக்கா, ரொம்ப பயம் ஒண்ணும் இல்ல. வாந்தி எடுக்க வெச்சிட்டோம், இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போலாம். விரசா வா’ என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினார் காளியக்கா.
இது என்ன விபரீதம்? நல்லநேரம் கூடி வர்ரப்ப, இது என்ன சோதனை? செல்வி ஏன் இப்படி செஞ்சா? ஆயிரம் கேள்விகளுடன் செல்வியை நெருங்கினான் தாமு.
லேசான மயக்கத்தோடு செல்வி முனுமுனுப்பது அவனது காதில் விழுந்தது. ‘பணம் இல்லன்னா வாழ்க்கை இல்லை. கடன் வாங்கக் கூடாது, அதவிட கந்து வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. கடனை திருப்பி கொடுக்க முடியாதவங்க, கடன் வாங்கக்கூடாது. மானம்தான் பெரிசு, மாமா என்னை மன்னிச்சிடுங்க....’
‘என்ன செல்வி என்ன என்னம்மோ சொல்ற? நான்தான் வேலு அண்ணன்கிட்ட அடுத்த வாரம் வட்டியும் முதலுமா கொடுத்திடுறேன்னு சொன்னேனே. அதுக்குள்ள என்ன நடந்துச்சின்னு தெரியலியே? காளியக்கா காலையில வேலு அண்ணன் வந்தாரா?’
‘தெரியிலப்பா... பக்கத்து வீட்டு தனத்தை கேட்டாத் தெரியும் அவதான் வேலைக்கு போவாம வீட்டுல இருந்தா, தனம் காலையில வேலு அண்ணன் செல்வி வீட்டுக்கு வந்தாங்களா?’
‘ஆமாம்க்கா... வேலு அண்ணன் தாமு போனதுக்கு அப்புறம் மழையோட வந்துச்சி. எனக்கு ரொம்ப முடையா இருக்கு பணத்தை நாளைக்கு குடுத்திடுங்க, வாங்கும்போது சந்தோமா வாங்குறீங்க, குடுக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களுக்கு. பத்து வட்டின்னாலும் பரவாயில்ல குடுங்கண்ணேன்னு கெஞ்சி வாங்குறீங்க. அப்புறம் கந்துவட்டி வாங்குறேன். முதலுக்கு மேல வட்டி குடுத்துட்தோம்ன்னு போலீஸ்ல சொல்லி எங்கள ஜெயில்ல போட வைப்பீங்க. இந்த அல்லதொல்லையே வேண்டாம். காலம் கெட்டு கிடக்குது. வாங்கின பணத்தை திரும்பகுடுக்க முடியிலன்னா, ஏன் கடன் வாங்குறீங்க?. நாங்க என்ன முட்டாளா?, இளிச்ச வாயன்னு முகத்துல எழுதி ஒட்டிருக்கா?, அப்டீன்னு கத்துனாருக்கா.’
‘அப்படியா... நீ ஏன் ஏங்கிட்ட சொல்லல’
‘நீதான் வேலைக்கு போயிட்டு, இப்பத்தான வந்த அக்கா. அது மட்டும் இல்லக்கா மானம் ரோசம் இருந்த , நாளைக்குள்ளார எம் பணத்தை கீழே வைங்கன்னு சொன்னாரு, உடனே செல்வி அழுதுகிட்டே உள்ளுக்குப்போய் கதவை சாத்திடுச்சி.’
‘சரி... இதை எல்லாம் நீ வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தியா?’
‘வேற என்ன பேச முடியும்?, நானும் கடன் வாங்கியிருக்கேன் நேத்துதான் வட்டியைக் கொடுத்தேன். என்னையும் ஏடாகோடமா பேசியிருந்தா, என் வீட்டுக்காரன் அறுவாள தூக்குவான். தேவையா இது?.’
‘எல்லாரும் சுயநலமாகத்தான் இருக்கீங்க, இப்பபார் செல்வி, மருந்த குடிச்சிட்டா. ஏதாச்சி ஒண்ணுன்னா நம்ம எல்லாரையும்தான் போலீஸ் கேள்வி கேட்கும்.’
‘ஆமாம்..... இந்த போலீஸ்காரங்களே திருடனை விட்டிடுவாங்க ஏமாளியை புடிச்சி உதைப் பாங்க.’
‘போதும் உங்க பேச்சு, உடனே செல்வியை தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரி போற வழியப்பாருங்க.’
‘காளியக்கா, தனம் அக்கா செல்வியை ஒரு கை புடிங்க, முருகன் அண்ணாச்சி தட்டு வண்டியில ஏத்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம். நீங்க ரெண்டு பேரும் கூட வாங்கக்கா, எனக்கு பதருது.’
‘சரி தம்பி தட்டு வண்டியலயே நாங்களும் வர்ரோம். இந்த முழங்கால் தண்ணியில ஆட்டோ வராது. ஓட்டவும் முடியாது, நீ முன்னாடி உக்காந்துக்கிட்டு வா.’
‘சரிக்கா, சீக்கிரம் முருகன் அண்ணே விரசா ஓட்டுங்க.’ தம்பி விரசா ஓட்ட முடியாது. தண்ணியில தடமாறிடும் நிதானம்மத்தான் போக முடியும்.
‘அக்கா, செல்விய பார்த்துக்குங்க ஸ்டெச்சர எடுத்துக்கிட்டு வந்திடுறேன்’ தாமு, ஆஸ்பத்திரி உள்ளேப் போய் ஸ்டெச்சரை தேட, வார்ட்பாயும், ஆயா அம்மாக்களும் ஸ்டெச்சர்ல டெங்கு காய்ச்சல் பேண்டுக்களை தூக்கிக் கொண்டு பரபரப்புடன் பறந்து கொண்டிருந்தனர். தாமுக்கு ஸ்டெச்சரும் கிடைக்கவில்லை. வீல் சேரும் கிடைக்கல. என்ன செய்யிறது தாமதிக்கக்கூடாதுன்னு செல்வியை தன்னுடைய தோள்ளேயே தூக்கிக்கிட்டு கேஸ்வாலி யட்டிக்குள் ஓடினான்.
தாமு செல்வியை தூக்கிக் கொண்டு ஓடுவதை பார்த்த எல்லோரும் இது என்ன கொடுமை. பெரிய ஆஸ்பத்திரின்னாலே இப்படித்தான் கவனிப்பு கிடையாது. காசு குடுத்தாதான் ஸ்டெக்சர் கிடைக்கும், கவனிப்பு கிடைக்கும். இவுங்கள சொல்லி குத்தம் இல்ல. கீழே இருந்து மேல்மட்டம் வரைக்கும் லஞ்சம்தான் பேசுது. நம்ம மந்திரிங்களையும், எம்.ஏல்.ஏக்களையும் பத்தி சொல்லத் தேவையில்லை. கோடியிலத்தான் மிதக்குராங்க. நம்மள காம்பிச்சு ஏழ்மையை சாதகமாக்கிக்கிட்டு எப்படி சம்பாதிக்கலாம்ன்னு திட்டம் போடுறதுல கில்லாடியா இருக்காங்க.
அம்மா டாக்டரம்மா, எம் பொண்டாட்டி எலி மருந்த சாப்பிட்டுட்டா அவளை காப்பாத்துங்க அம்மா. தாமு கதற, சாகாவாசமா டாக்டரம்மா வந்து செக் பண்ணிட்டு நர்சம்மாவை கூப்பிட்டு இவுங்க வயித்துல இருக்கற வித்தை வெளியில எடுத்துட்டு டிரிப்ஸ் ஏத்துங்க. பிரச்சினை ஏதும் இருந்தா, ஐசிவுக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவுங்க டெங்கு காய்ச்சல் பேண்டுக்களை பார்க்க வந்த துஷ்ஐஷ்விமிer ஸஷ்விஷ்மி க்கு கிளம்பிட்டாங்க.
நர்சம்மா டாக்டர் சொன்னதை எல்லாம் செஞ்சிட்டு தாமுவை கூப்பிட்டு மேஜையில இருக்கிற பிளாஸ்க்கை எடுத்துட்டுப் போய் நாலு காப்பி, நாலு வடை வாங்கிட்டு வரச்சொன்னப்ப செல்விக்கா காப்பியும், வடையும், என்ற எண்ணத்தோடு டீக்கடைக்கு ஓடினாள்.
லஞ்சம் காப்பியிலும் வடையிலும் ஆரம்பிப்பது தாமுவுக்கு தெரியாது. ஆனால், ஆஸ்பத்திரிலுள்ள பேண்டுகளின் சொந்தங் களுக்கு நன்றாகவே தெரியும்.
லஞ்சம் இதோட நின்னா சரி, மேல காசு கேட்டா அவன் எங்கப்போவான்.
செல்வியோட தற்கொலை முயற்சியை கேள்விப்பட்டு கந்துவட்டி வேலு அண்ணன் பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து விட்டார்.
‘தாமு, கேள்விப்பட்டேன். என்னை இதுல சிக்க வெக்காத. போலீஸ்ல காரணம் கேட்டா குடும்ப சண்டைன்னு சொல்லிவிடு.
ஐயோ! போலீஸ் வருதே, நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நான் கேண்டீன்ல உட்கார்ந்து இருக்கிறேன். போலீஸ் போனோன்ன வந்து பார்க்கிறேன்.’
எப்போதும் போல போலீஸ்காரர்கள் தடாலடி விசாரிப்பில் இறங்கினர். ‘இங்க யார்யா தாமு? செல்வியோட வீட்டுக்காரன்?‘நான்தான்சார், ’‘என்ன பிரச்சனை? தண்ணி போட்டு கலாட்டா பண்ணி பொண்டாட்டிய அடிச்சியா?.. இல்ல வரதட்சணை கொடுமையா?’
‘இல்ல சார், செல்விக்கு அடிக்கடி வயித்துவலி வரும். வயித்துல கட்டி வரும். அதான் தாங்காம தப்பு செஞ்சிடுச்சி. நான் நைட் வீட்டுக்கு வந்தப்பதான் தெரியும் சார்.’
‘சரி... சரி... நர்சம்மா செல்வி முழிச்சிட்டாங்களா? இல்லை சார்.... மயக்கமா இருக்கு, கொஞ்ச நேரத்துல முழிச்சிடும். சரி வாய்யா, நீ எந்த ஊரு? அந்தப்பொண்ணு எந்த ஊரு? விவரம் முழுசா சொல்லு.’
தாமு விவரம் முழுவதும் சொல்ல போலீஸ் ஏட்டு, எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு, ‘ஓடி வந்த கேசா? எதுக்குய்யா இப்படி பண்றீங்க? ஒரு வேகத்துல வந்திடுறீங்க. காசில்லாம கஷ்டப்படும்போது இந்த மாதிரி முடிவெடுக்குறீங்க. பெத்தவங்க பேச்சகேட்டிருந்தா இந்த கதி இல்லீல்ல.. சரி நர்சம்மா அந்த பொண்ணு முழிச்சிடுச்சா, ஏன் விம் சாப்பிட்டிருக்கு? ’
‘வயிர சுத்தம் பண்ணதுல ஒண்ணும் இல்ல, பித்தமாத்தான் வருது.’
என்னப்பா உன்ன பயமுறுத்த பொய் சொல்லியிருக்குப்போல. விம் இல்லேன்னா நான் என்ன கேஸ் எழுதுறது. முழிச்சோன பொண்டாட்டிய கூப்பிப்பிட்டுப் போ.’
‘அப்புறம் ஏட்டய்யா, இந்த பொண்ணு மாசமா இருக்கிற அறிகுறிதான் டெஸ்ட்ல இருக்கு, வாந்தி எடுத்து மயக்கமானதும் பயந்திட்டாங்க போல இருக்கு. நல்ல சேதிதாப்பா உனக்கு, சரி எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன்.’
‘செல்வி நல்லா இருக்கியா? எங்களை பயமுறுத்திட்டீயேம்மா. காளியக்கா, எலி விம் குடிச்சிட்டன்னு சொன்னதால பயந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்துட்டேன். வேலு அண்ணன் திட்டினாருன்னு தனம் அக்கா சொன்னாங்க. அதனாலதான் இப்படி செஞ்சிட்டியோன்னு நினைச்சோம். காளியக்கா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க’
‘காளியக்கா, தனம் அக்கா, உள்ளே வாங்க செல்வி நல்லா இருக்கு,’ தாமு அழைக்க இருவரும் உள்ளே ஓடி வந்தனர். ‘செல்வி நல்லா இருக்கியா? இப்ப ஒண்ணும் ஆபத்து இல்லியே.’
‘ஒண்ணும் இல்லக்கா, நான் ஒண்ணும் விம் சாப்பிடல. அப்ப வாசல்ல எலி மருந்து டப்பா இருந்துதே?’
‘அக்கா அவ நல்லா இருக்கா உங்களுக்கு நல்ல செய்திதான் செல்வி மாசமா இருக்கா, அதுக்குத்தான் இந்த வாந்தியும் மயக்கமும்.’
‘செல்வி ரொம்ப சந்தோம்’ என்று உரக்க கத்த, நர்ஸ் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு தாமுவை மட்டும் உள்ளே இருக்க சொல்லிவிட்டு வேற பேண்டை பார்க்க போய்விட்டார்.
‘செல்வி நம்ம கஷ்டம் எல்லாம் போயிடுச்சி. நம்ம ஊர் லாரி டிரைவர் அண்ணன், என்ன பர்னிச்சர் கடையில பத்தாயிரம் ரூபாய்க்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். டெய்லி பேட்டாவும் கிடைக்குமாம். அட்வான்ஸ்சும் வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கார். நம்ம கடனை அடைச்சிட்டு சந்தோமா வாழலாம். எல்லாம் பிறக்கப்போற குழந்தையோட யோகம். நம்ம கஷ்டத்திற்கு விடியும் நேரம் வந்திடுச்சி.’
இதோ கந்து வட்டி வேலு அண்ணன் பயந்து போய் வர்ரார். ‘அண்ணன் ஒண்ணும் பிரச்சனை இல்லன்னே, போலீசு கேஸ் பதிவு பண்ணல. சந்தோமா போங்கண்ணே.’
‘அப்பா, இப்பத்தான் எனக்கு உயிரே வந்துச்சி. நீ வட்டியே இனிமே தரவேண்டாம். முதல மட்டும் மூணு மாசத்துல குடுக்கப்பாரு.’
‘அண்ணே உங்க கடனை அடைச்சிடுவேன், எனக்கு வேலை கிடைச்சிடுச்சி.’
‘அப்பாடா நான் வர்ரேன், தாமு வர்ரேன், செல்வி தங்கச்சி. நான் பேசுனத மனசுல வெச்சிக்காத.’ தப்பித்த தைரியத்துல பாசத்தோட தங்கச்சின்னு அழைச்சிட்டுப் போனாரு வேலு.
‘இப்ப ஒண்ணு நல்லா புரியுதுங்க, இனிமே கடனே வாங்கக் கூடாது. அதுவும் கந்து வட்டிக்கு வாங்கவே கூடாது. கஷ்ட நேரத்துல யோசிக்காம அதிக வட்டிக்கு கடன் வாங்கிட்டு நாமலும் திண்டாடுறோம். குடுத்தவங்களுக்கு பொல்லப்பா ஆகிடுரோம். அதிக வட்டிக்கு வாங்கக் கூடாது, தப்புன்னு அவுங்க உணர்ந்து வேலு அண்ணன் மாதிரி நடந்துக்கிட்டா, பிரச்சினையே வராது.’
பிரச்சனைகளை சுமூகமா முடிக்க உதவுனது காற்றில் எங்கிருந்தோ பறந்துவந்த எலி வி டப்பாதான் என்று காளியக்காவுக்கு தெரியவும் வேண்டாம், வேலு அண்ணனுக்கும் தெரிய வேண்டாம். தாமுவுக்கும் செல்விக்கும் விடியலை தந்ததும் எது என்று தெரிய வேண்டாம், விடியும் நேரம் அவர்களுக்கு வந்துவிட்டது.
No comments:
Post a Comment