அமைதிக் காண உன்னையே நீ கண்டுக்கொள்.
ஒரு முனிவரிடம் ஒருவர் சென்று ‘அமைதிக் காண என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர்,‘ மூன்று மலைகளைத் தாண்டி மலை உச்சியில் ஒரு கோவில் இருக்கிறது. அக்கோவிலில் ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தைப் படித்தால் அமைதியின் வழித் தெரியும்’ என்றார். அவரும் மூன்று மலைகளத் தாண்டி மலை உச்சியிலிருந்த கோவிலுக்குச் சென்று, அங்கிருந்த புத்தகத்தையும் கண்டுபிடித்தார். புத்தகத்தைத் திறந்து பார்த்தால் எல்லா பக்கங்களும் முகம் பார்க்கும் கண்ணாடி. அதில் அவரின் முகம்தான் தெரிந்தது. கோபத்துடன் முனிவரிடம் திரும்பி வந்தார். ‘என்ன முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ள புத்தகத்தை பார்க்கவா அனுப்பி வைத்தீர்கள்? என்றான். ‘உன்னையே நீ அறிந்துக்கொண்டால் அமைதியைக் காண்பாய் என்பதுதான் உன் பயணத்தின் பொருள்’ என்றார் முனிவர்.
No comments:
Post a Comment