விவிலிய விடுகதைப் போட்டி
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
ஜுன்-2017 விடுகதைகள், மாற்கு 9 முதல் 16 முடிய
அன்றாடம் காய்ச்சியவள்
அயராது உழைப்பவள்
கிடைச்சக் கூலி இரண்டு காசையும்
மொத்தமாய் போட்டு உயர் இடம் பிடித்தாள்
இவள் யார்?
2. மீனப் பிடிச்சவரு
மனிதனைப் பிடிச்சாரு
காதையும் வெட்டினாரு ‡
கர்த்தரக் கைவிட்டாரு ‡ பின்
கதறி அழுதாரு ‡ யார் இவர்?
3. அரிது அரிது அரிது
ஆண்டவரின் வீட்டுக்கு போவது அரிது
சொத்தே, பெரிது, பெரிது,பெரிது
மனமோ அதிலே இருக்குது இருக்குது
இறையாட்சிக்குட்படுவது அரிது, அரிது
இவர்கள் யார்?
4. ஊரில் இருக்குது ஒன்று
இதுவரை அமராதது ஒன்று ‡ அதை
அவிழ்த்து வாருங்கள் இன்று
ஆண்டவருக்குத் தேவை சொல்வீர் நன்றே
அது எதை?
5. போர் போர் முழங்குது
பஞ்சமும் பஞ்சாய் பறக்குது
தாகம் தண்ணீர் ஏங்குது
பசிப் பிணி வறுமை வாட்டுது
நில நடுக்கமும் துளைக்கிறது.
ஆனால் ஆரம்பம் என மிரட்டுது
அது எது? வேதனைகளின் தொடக்கமே.
6. பால் போன்ற நிறம்
சுவைப்பின் இது கரிப்பு
மூன்றெழுத்து உடையது ‡ இது
இல்லா பண்டம் குப்பையிலே ‡ அது என்ன?
7. கணவன் மனைவி உறவு எல்லாம்
இப்போ சகஜமாய் மாறிப் போகுது
நீயா? நானா? போட்டியில்
நீண்ட உறவு முறியுது ‡ அது எதனால்
8. கேட்க முடிந்தது; பார்க்க முடியல
மேலுடை பறந்தது; குதித்தெழுந்து
வந்தவர்க்கு இரு இதழ் மலர் விரிந்தன
நம்பினான்; நலமாயிற்று.
யார் இவண்?
9. க்ஷிeழிஸeஐனும் eழிrமிஜுதும் dழிவிஜு ஆகும்
ஆனால் அது மட்டும் ஐeஸer dழிவிஜு ஆகாது
அது என்ன?
10. பாதை வழி வந்தார்
பாங்குடனேப் பார்த்தார் ‡ அது
பசுமை இலை நிறைந்திருந்தது ‡ ஆனால்
பசிக்கு கனியில்லை ‡ இனி
யாரும் உன் கனியை உண்ணக்கூடாது
என்றார் எதனை?
11. கட்டளைகளில் சிறந்த கட்டளை
தேவன் தந்த கட்டளை
மறைநூல் அறிஞர் வினாவிற்கு
தெளிவுப்படுத்தியக் கட்டளை ‡ இது
எத்தனை கட்டளை. ‘பு’வில் முடிவில்
அது என்ன?
12. இம்மனிதன் பிறவாதிருந்தால்
அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்
யார் இவன்? கூறியது யார்?
13. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன்
பணப் பேய் கண்களை மறைத்தது
பாசங்குடன் பாசமாக முத்தமிட்டவன்
ரபி என்று அழைத்தவன். யார் இவன்?
14. வயல் வெளியிலிருந்து வந்தவர்
அலெக்ஸாந்தர், ரூபுவின் தந்தையிவர்
மூன்றெழுத்து உடைய சீமான்
இயேசுவுக்காக கட்டாயப்படுத்தினர்
இவர் யார்?
15. தைலம் நறுமணத் தைலம்
விலைமிக்கத் தைலம், கலப்பற்றத் தைலம்
ஒரிஜனல் தைலம். இதன் முழுமையான
பெயர் என்ன?
No comments:
Post a Comment