Pages - Menu

Tuesday 4 July 2017

இரட்சணிய யாத்திரிகம் - திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பக்தி நெறியின் பங்கு தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப் புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ் பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன. தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி கவிஞரானார். இரட்சணியயாத்திரிக பக்திநெறி தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது, “உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால் சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்” (இரட்சணிய சரிதப் படலம் ‡2) எனக் குறித்துள்ளது இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

இரட்சணிய யாத்திரிகம்
- திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 

பக்தி நெறியின் பங்கு


தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப்   புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ்  பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில்,  நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன.
தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி  கவிஞரானார்.

இரட்சணியயாத்திரிக பக்திநெறி

தனி மனிதன்  மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்”  என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது,  

“உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற
அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்”

(இரட்சணிய சரிதப் படலம் -2) எனக் குறித்துள்ளது

இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Ads Inside Post