Pages - Menu

Tuesday 4 July 2017

அமெரிக்கக் கடிதம், சவரி-கெரி

அமெரிக்கக் கடிதம்
சவரி-கெரி

இங்கு மாணவர்களை பாடதிட்டங்களில் (Syllabus) இல்லாத புத்தகங்களையும் படிக்கத் துVண்டுகிறார்கள். முக்கியமாக  தொடக்கப் பள்ளிகளில் பாடத்தைத் தவிர குழந்தைகளுக்கேற்ற கதை புத்தகங்கள், அஷீவியல் புத்தகங்கள், வரலாறு புத்தகங்களை படிக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். எல்லா பள்ளிகளிலும் நுVலகங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்த நுVலகங்கள் அரிய புத்தகங்களை உள்ளடக்கியதோடு வலைத்தலம் பொருத்தப்பட்ட கணனிகளையும் கொண்டுள்ளன. இதனால் இங்குள்ள மாணவர்கள் நல்ல பொது அஷவோடு வளர்கிறார்கள். 
மேலும் மாணவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, படைப்பாற்றல் (Creativity)  கொண்ட  மாணவர்களாக உருவாக்குகிறார்கள். நிறைய அஷீவியல் செயல்முறைகளை செய்து கற்கும் கல்வி, எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதை உணர்த்துகிறார்கள். இங்குள்ள பள்ளி நிறுவனங்களில் பள்ளி முடிந்தவுடன் இயங்கும் நிறைய Club - கள் இருக்கின்றன. உதாரணமாக  (Science Olympiad) என்ற எல்லா பள்ளிகளிலும் புகழ் பெற்றது. இது பெற்றோர்கள் உதவியுடன் தனனார்வத் தொண்டர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. பள்ளிகளுக்கிடையே போட்டிகள் வைக்கிறார்கள். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரச்சனையை முன்வைத்து அதற்கு அஷீவியல் மூலமாக ஒரு கருவியை உருவாக்கலாம், அல்லது உங்கள் யோசனையை எழுத்து வடிவத்தில் சமர்பிக்கலாம். சிறந்த படைப்புக்கு பரிசளித்து ஊக்கவிக்கிறார்கள். 

இங்குள்ள கல்லுரிகள், மாணவர்கள் படிக்கும்போதே தொழில் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கல்லுரிகளில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்வற்கு வசதியாக தனி அறைகளையும், வரை பலகைகளையும், கணனி வசதிகளையும் செய்துக் கொடுக்கிறார்கள். மேலும் கல்லுரியில் முன்னாள் படித்து, இப்போது தொழிலதிபர்களாக உள்ளவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கு பணவசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதனால் நிறைய மாணவர்கள் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். 

நாமும் நல் கல்வியை மாணவர்களுக்களித்து இவ்வுலகை உயர்த்துவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post