Pages - Menu

Tuesday 4 July 2017

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா 
(யோவான் 6:51-57)
18-06-2017
 அருட்பணி. டேவிட் ராஜேஸ்,
 குடந்தை. 
                      உணவு நமது வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று. கருவரை  முதல் கல்லறை வரை உள்ள பயணத்தை உணவு  தான் முடிவு செய்கிறது. பசியை யாரும் விரும்புவதில்லை. வியர்வை சிந்தி பாடுபடுவது அறை ஜான் வயிற்றுக்குத்தான் என்று சொல்வார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது கூட நம்முடைய உறவினருக்கும் நண்பருக்கும் விருந்து கொடுத்துதான் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். யோவான் 6 வது அதிகாரத்தில் 6:1‡5 உடல் உணவையும் 6:3-‡50 உள்ள உணவையும் பேசிய யோவான் நற்கருணை உணவு பந்தியும் இன்றைய  நற்செய்தியில் பேசப்படுகிறது. ஆனால்  யூதர்கள் இயேசுவின் சதையை உண்பதையும் இயேசுவின் இரத்தத்தை குடிப்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இயேசு (யோவான் 6:53) அழுத்தமாக மீண்டும் கூறுகின்றார். “என் சதையையும், இரத்தத்தையும் குடிப்பவர் நிலைவாழ்வு பெறுவர், மற்றும் என்னோடு இணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”. திருஉணவு  உறவின் பாலமாய் அமைகின்றது.
       
 நாம் அமர்ந்திருக்கின்ற கோயில் இது ஒரு கோயில் மட்டும் அல்ல இது ஓர் உணவு கூடம், ஆம் வியப்புற வேண்டாம். இயேசு சொல்வது இந்த செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர்கள் அனைவரும் பேறுபெற்றவர்கள் என்று சொல்லி நம்மை திருவிருந்துக்கு அழைக்கிறார்.

        பேராயர் ஃபுல்டன் சீன் (ய்ற்யிமிலிஐ மூ.றீஜுeeஐ) தன்னுடைய புத்தகம் “ ஸிஷ்க்ஷூe லிக்ஷூ ளீஜுrஷ்விமி” இல் இயேசு  எவ்வாறு நமக்கு வாழ்வளிக்கும் உணவு என்று விளக்குகிறார். இயேசு பிறந்த ஊர் பெத்லேகம்.  எபிரேய மொழியில் அதன் பொருள் “ க்ஷிலிற்விe லிக்ஷூ யreழிd” அதாவது, அப்பத்தின் வீடு என்பது பொருள். இயேசு ஏன் அந்த உணவு வீட்டில் பிறந்தார் என்றால் எல்லோருக்கும் உணவாகப் போகிறார் என்பதை சுட்டிக் காட்டவே என்கிறார்.

           இயேசு பிறந்தவுடன் அன்னை மரியா அவரை எதில் கிடத்தினார்? தீவனத் தொட்டியில் தானே! இது ஒரு நாள் இவர் உலகுக்கே உணவாக போகிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான்.
இயேசு மற்றவர்களோடு உணவருந்திய போது  போசன பிரியன் என்று சொன்னார்கள். ஆனால் இயேசு ஒவ்வொரு  விருந்திலும் இயேசுவின் உணர்வும், உறவும், செய்தியும் பரிமாறப்பட்டது. அங்கு ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டது.

கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி விருந்தினரை மகிழ்விக்கிறார். திருமண வீட்டின் மானத்தைக் காப்பாற்றுகின்றார்.  கப்பர் நாகூமில் 5 அப்பங்களையும்  2 மீன்களையும் பகிர்ந்து கொடுத்ததன் பொருளை விளக்குகின்றார் (யோவா 6). 
பரிசேயர் சீமோன் வீட்டில்  முன்னிலையி லும் தன் பாதங்களை கழுவியப் பெண்ணை மன்னித்து மன்னிப்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார். சக்கேயு வீட்டில் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்று சொல்லி பாவிக்கு மன்னிப்பு கொடுக்கிறார். இப்படி ஒவ்வொரு விருந்திலும் இயேசு ஒரு செய்தியைக் கூறி தன் உறவை பலப்படுத்து கிறார். ஆக உணவு வழியாக உறவு பரிமாறப் படுகின்றது.

இன்று இப்போது நம்மிடையே நற்கருணை வடிவிலே நம் உள்ளத்தில் வருகின்றார் தன் உடலையும், தன் இரத்தத்தையும் கொடுக்கின்றார். பல வேளைகளில் நாம் இந்த அப்பத்திலும் இரத்தத்திலும் எழுந்து வரும் இயேசுவை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

தூய தாமஸ் அக்குவினாஸ் நற்கருணை யைப் பற்றி பேசும் போது ஆயன் தன் மந்தைக்கு உணவளிப்பது போல கிறிஸ்து தன் சொந்த உடலையும், இரத்தத்தையும் தன் விசுவாசிகளுக்கு ஆன்ம உணவு வழங்குகிறார். தூய அகுஸ்தினார் கூறுவது திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது. நற்கருணை இறை சமூகத்தை உருவாக்குகிறது என்று கூறுகிறார். ஆகவே நற்கருணை மீது விசுவாசம் கொள்வோம். ஆண்டவர் என்றும் நம்மோடு இருப்பாராக. 

No comments:

Post a Comment

Ads Inside Post