Pages - Menu

Tuesday 4 July 2017

இதுக்கு என்ன சொல்றது? அருட்பணி. ச.இ, அருள்.சாமி

இதுக்கு என்ன சொல்றது?

 அருட்பணி. ச.இ,  அருள்.சாமி

கடன் தொல்லைகளுக்கு
நாம்தான் உடனாளிகள்.
‘ஏன் வீணாக கடன் வாங்க வேண்டும்?
விரலுக்கு ஏத்த வீக்கம் தானே?
விரலுக்கு ஏற்ற செலவு செய்தால்
கடன் வலையில் மாட்டிக் கொள்ள வழியில்லையே?’
இதெல்லாம் அறிவு பூர்வமான அறிவுரைகள், விளக்கங்கள்,  ஆனால்
நடைமுறையில் மனிதர் சந்திப்பது  என்ன?
கடன் குழியில் விழாமல் இருக்க முடியாது
என்பது தான் எதார்த்தம் ஆகிறது.
ஒரு விதவைப் பெண். ஒரே பையன்
பையனுக்கு கலியாணமாகிவிட்டது.
பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள்
விதவைப்பெண் ஒரு இலட்சம் ரூபாய்
கடனை தலையில் சுமக்கிறார்கள்.
அன்றாட கூலி, வேலையுமில்லை
கணவன் குடிகாரன், குடித்து விட்டு எல்லாவற்றையும்
அழித்துவிட்டு இறந்தான்.
மகனும் அப்பனுக்கு தப்பாமல் நடக்கிறான்.
குடி, அவன் குடியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
ஐந்து பைசா வட்டி
நூற்றுக்கு மாதத்திற்கு ஐந்து ரூபாய்.
அதாவது 60 சதவீகிதம்
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதத்திற்கு வட்டி ரூ 6000/‡
வங்கியில் அதிகம் போனால் 20 சதவிகிதம்
கூலிக்கு போய் வயிற்றிற்கு சாப்பிடவே போராட வேண்டியிருக்கிறது.
அது இருக்கட்டும், எதற்காக கடன் வாங்கினார்கள்?
மகனின் கலியாணத்திற்காகத்தான்,
அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்.
 எப்படி செலவு செய்யாமல் இருக்க முடியும்?
 சமுதாயம் விட்டு விடுமா?
 சமுதாயத்தின் வன்முறை தானே இது.
 உலகத்தோடு ஒத்து வாழ வேண்டுமே!
 கடன் வாங்கி கல்யாணம், வளைகாப்பு என்று
 விதவையான பெண்
 பையனுக்குக் குறையில்லாமல் செய்தாள்.
 வாழ்க்கையில் பகட்டுப் போர்வை போர்த்தியாகிவிட்டது.
 ஆனால் போர்வைக்குக்  கீழ்
 கடன் என்ற மூட்டைபூச்சிகள் கடித்துக் கொண்டுள்ளன.
 வாழ்வதா?, சாவதா? தெரியவில்லை
 என்று கண்ணீர் விடுகிறாள்.
 கடன்காரன் ஒவ்வொருநாளும் பிச்செடுக்கிறான்.
 தாங்க முடியவில்லை என்ன செய்வது?
இதுக்கு என்ன சொல்றது?
  

No comments:

Post a Comment

Ads Inside Post