நேர் காணல்.
உத்தாணியில் ஒரு கல்வி இதயம்
அருள்பணி. ஏ.ஆர். சின்னப்பன் 72 அகவையில் நிற்பவர்கள். குடந்தை மறைமாவட்டத்தில், ஜெயங்கொண்டம், பாபநாசம், மாத்தூர், கும்பகோணம் ஆகியப் பங்குகளில் சிறப்பாக பணியாற்றியவர். குடந்தை மறைமாவட்ட முதன்மை குருவாகவும் ஏழு ஆண்டுகள் பணி செய்தவர். இப்போது தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி என்ற உட்கிராமத்தில் அனாதை பெண் பிள்ளைகளுக்கு இலவசமாக தங்குமிடத்தை தந்து, கல்வி கூடங்களுக்கு சென்று கல்விகற்க ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி படிப்பு (6 பேர்) மருத்துவ செவிலியர் படிப்பு (4) என்று இங்கிருந்து படித்து வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் பலர் அமர்ந்திருக்கின்றனர். ஜாதி, மதம் பாராது, தந்தை/ தாயை இழந்த பெண் பிள்ளைகளுக்கு வாழ்வு தந்திருக்கிறார். இதுவரை மொத்தம் 146 பெண்கள் இந்நிலையத்திலிருந்து வாழ்வு பெற்றிருக்கிறார்கள். அதோடு சிறிய மருத்துவமனை, முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இச்சாதனை பல எதிர்ப்புகள், சோதனைகள் நடுவில் தான் நடைமுறையாயிருக்கிறது.
இத்தகைய தெய்வீக எண்ணம் எப்படி உண்டானது என்று கேட்டபோது, மாத்தூர் பங்கு பணியின்போது தனிப்பட்ட ஓர் பணியினை உபயோகமான முறையில் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஒரு செப நேரத்தில் உதித்தது. அதை செயலாக்கினேன். உதவியாளர்களின் உதவியோடு 13 ஏக்கர் நிலம் வாங்கி இந்த கல்விநிலையத்தை துவங்கியிருக்கிறார்.
ஜெயங்கொண்டம் பங்கில் இருந்தபோது நரிகுறவர் குழந்தைகளுக்கு கல்விகற்கும் நிலையம் உருவாக்கி, பல குழந்தைகளின் கல்விகண்களைத் திறந்தார். தற்போது உடல்நிலை குன்றிய நிலையிலும், தற்போதைய நிலையும் இறைவனின் கொடை என்று நம்பிக்கையோடு நேர்மறையாக கூறுகிறார்.
தற்போதைய கிறிஸ்தவர்களின் மனநிலைகள் மாற வேண்டும். அருட்பணியாளர்களை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை தன் அனுபவத்தின் வெளிபாடாக கூறினார். நம் நாட்டு ஊழல் நிலைகளை எளிதாக ஒழிக்க முடியாது. மக்களின் மனம் மாறினால் தான் ஊழல் ஒழியும் என்ற கருத்தை முன்வைத்தார். சமூக வலைதளங்களால் நன்மையும் உண்டு, தீமைகளும் உண்டு. கவனமாக நாம் அலைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment