இயற்கை மூலிகை மருத்துவம்
. இராசரெத்தினம், ஆடுதுறை
மஞ்சள் காமாலை
பொதுவாக இந்நோய் ஏற்பட கல்லீரல், மண்ணீரல் குறைபாடே காரணமாகின்றது. உடலில் அதிக உஷ்ணம் உண்டாகி, உஷ்ணத்தை தாக்குபிடிக்க முடியாத நிலையில் கல்லீரல், மண்ணீரல் வெந்து விரிவடைந்து மந்தம் அடையும் நிலையே மஞ்சள் காமாலை.
இந்நோய் உள்ளவர்களின் சிறுநீர், கண், நாக்கு, உடல், நகம் இவைகள் யாவும் மஞ்சள் நிறத்தைப் பெற்றிருக்கும்.
உணவு மாவு பண்டங்களாய் இருப்போர்க்கு குடலின் உள் சுவற்றில் கழிவுகள் தேங்கி, கார்பனாகி அதன் காரணமாய் உடலின் அதிதீவிர உஷ்ணம் உண்டாகிறது. உஷ்ணத்தின் வீரியத்தால் செல்கள் அனைத்தும் வெந்து விரிவடைந்து அந்த நிலையே மஞ்சள் காமாலை.
அதிக உஷ்ணத்தால் பித்தம் மேலோங்கி இரத்தத்தில் கலந்து உடல் பகுதிகளில் சதை, தோல், கண், நாக்கு இவைகளில் நிலை கொண்டு நோய் வீரியம் அடைகின்றது.
வாயில் நீர் ஊர்தல், வாய் குமட்டல், உணவில் வெறுப்பு, உட்கொண்ட உணவு செரியாமை ஆகியவைகள் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.
இந்நோய் வருவதற்கு முன்பாகவே கண்ணில் வெள்ளை விழியும், முகம், கழுத்து, உடல் முதலியன மஞ்சளாய் இருக்கும்.
நோய் அதிகமாகும் போது நாக்கு, வாயின் மேல்பாகம், உதடு, சிறுநீர், நகம் இவைகள் மஞ்சள் நிறமாய் மாறும்.
நோய் மேலும் அதிகப்படுமாயின் மூக்கு, பற்களின் ஈறு, வாய் இவைகளிலிருந்து இரத்தம் கசியும். சிறுநீர் மஞ்சள் நிறமாய் இருக்கும். வியர்வை மஞ்சள் நிறமாய் இருக்கும்.
இந்நோய் தொடக்கத்தில் சரீரத்தில் வறட்சி ஏற்பட்டு நமச்சல் உண்டாகி தோல் பகுதிகள் சிறிது தடிப்புற்று காணப்படும். நாடி நடைகள் தளர்ந்து தூக்கம் இருக்காது.
இந்நோயை குணமாக்கிக் கொள்ள இயற்கையான எளிய வழி:
இந்நோய் கண்டவர்களுக்கு குடல் சுத்தம் செய்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பு இருந்து (குடிநீர் மட்டும் அருந்தி இருப்பது) பத்து நாட்கள் பழச்சாறுகள் மட்டும் அருந்தி இருந்து
(சாத்துக்குடி, திராட்சை, மாதுளை ஏதாவது ஒரு பழத்தை தோலுடன் 75 கிராம் அளவு அரைத்து 750 மி.லி குடிநீர் கலந்து வடிகட்டி 250 கிராம் தேன் சேர்த்து சிறுக சிறுக அருந்திக் கொண்டிருப்பது) பத்து நாட்கள் சமைக்காத பச்சைக் காய்கள், சாறு நிறைந்த பழங்கள் உண்டு இருந்தால் (சமையல் உணவுகளை தவிர்த்து) குணமாகும். இளநீரில் தேன் கலந்தும் கொடுக்கலாம்.
இதுபோல் இருக்கும் காலங்களில் செய்ய வேண்டிய பயிற்சிகள்:
1. நாள்தோறும் காலை, மாலை ஒருமணி நேரம் முதுகு தண்டு தொட்டிக் குளியல் செய்யவும்.
2. நாள்தோறும் முற்பகல் 11 மணி அளவில் கீழ்க்கண்ட குளியல் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை ஒருமணி நேரம் செய்து வரவும். புற்றுமண் குளியல், சந்தன மண் குளியல், மலர் குளியல், இளநீர் குளியல்.
புற்றுமண் தயாரிக்கும் முறை:
கரையான் புற்று மண்ணைக் கொண்டு வந்து, அதனை இடித்து சலித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது.
சந்தன மண் தயாரிக்கும் முறை:
புற்றுமண், சுங்காமண், உவர்மண் மூன்றையும் சமமாக எடுத்து இடித்து சலித்து கல், குப்பை நீக்கி பத்து சதவிகிதம் சந்தனத் தூள் கலந்தால் சந்தனமண் தயார்.
மலர் குளியல்:
ரோஸ் கலரில் உள்ள ரோஜாப்பூ, தாழம்பூ, மகிழம்பூ, ஆவாரம் பூ சம அளவாக எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிப்பது.
இளநீர் குளியல்:
இளநீர் தேவையான அளவு எடுத்து 25 கிராம் சந்தனத் தூள் கலந்து உடல் முழுவதும் பூசிக் குளிப்பது.
3.நாள்தோறும் காலை, மாலை எளிய மூச்சுப் பயிற்சி அல்லது பிராணயாமம் செய்து வரவும்.
4. குழப்பமான எண்ணங்களைத் தவிர்த்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்.
மூலிகைகளைப் பயன்படுத்தும் முறை:
* சங்கன் வேர்பட்டையை எடுத்து வந்து இஞ்சிச் சாற்றுடன் அரைத்து சாறு எடுத்து நான்கு பங்கு குடிநீர் கலந்து ஒரு பங்கு தேன் சேர்த்து ( 50மி.லி சங்கன் வேர் + இஞ்சிச் சாறுக்கு 200 மி.லி குடிநீர் 50 மி.லி தேன் சேர்க்க) மூன்று மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு 4 வேளையாக மூன்று நாளைக்கு கொடுக்க குணமாகும்.
* குடல் சுத்தம் செய்த பின் பப்பாளிபழம் மட்டும் உணவாக உண்டு வர குணமாகும்.
* கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, தும்பை இலை, வில்வ இலை, சங்கன் இலை, ஏதாவது ஒரு மூலிகையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சூடு ஏறாமல் அரைத்து 500 மி.லி குடிநீரில் கலந்து வடிக்கட்டி, அதிகாலை குடல் சுத்தம் செய்த பின் அருந்தி வர குணமாகும்.
* கீழாநெல்லியையும்மஞ்சள் கரிசலாங்
கண்ணியையும் சம அளவாக எடுத்து இடித்து சாறு எடுத்து தேவையான தேன் கலந்து காலை, மாலை 100 மி.லி அளவு அருந்தி வர குணமாகும்.
*மஞ்சள் கரிசலாங்கண்ணி தூள், மருதம் பட்டைத்தூள் சம அளவாக சேர்த்து இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும்.
*சோற்றுக் கற்றாழை மேல் பகுதியில் அமைந்திருக்கும் தோல், முள் நீக்கி, உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து, நன்கு கழுவி கசப்பு நீக்கி அரைத்து, தண்ணீரில் பெருக்கி தேவையான அளவு தேன் சேர்த்து, கவனமாக (தொண்டையில் மூக்குத் துவராத்தில் அடைத்துக் கொள்ளும்) அருந்தி வர குணமாகும்.
*நன்னாரி வேர்த்தூள் ஒரு சிட்டிகை தேனில் குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும். அதிகம் உண்ணக் கூடாது.
*மஞ்சள் கரிசலாங்கண்ணி 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம், பொன்னாங்கண்ணி 50 கிராம், நெல்லிக்காய் 100 கிராம், நல்லெண்ணெய் 750 மி.லி, ஆமணக்கு எண்ணெய் 250 மி.லி அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்கு சூரிய ஒளியில் வைத்திருந்து, வடிகட்டி வாரம் ஒருமுறை தேய்த்து குளித்து வர குணாகும்.
*மருதாணியை அரைத்து கை, கால் நகக் கண்களிலும், உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் பற்று போட்டு வர,
* எலும்பு நரம்புகள் வலிமை பெறும்.
* நகக் கண்களில் தோன்றும் வெடிப்பு குணமாகும்.
* சொத்தை நகம் விழுந்து நல்ல நகம் முளைக்கும்.
* உள் உறுப்புகள் பலம் பெறும்.
* கண்கள் தெளிவடையும்.
* மூளை புத்துணர்வு பெறும்.
* மூட்டு வலி, முழங்கால் வலிகள் மறையும்.
No comments:
Post a Comment