Pages - Menu

Friday 3 November 2017

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில் 

பாடல் எண் - 13   - என் இனிய இளவேனிற் காலம்
- சலூசா
எண்சீர் ஆசிரிய விருத்தம்

பணியாத காமமுதிர் வேனிற் காலம்
பட்டாற்றா தழுங்கடகார் கால மாகிக்
கணியாத நரகச்ச முகுக்குங் கூதிர்க்
காலத்துண் ணடுங்கியபின் கால மும்போய்த்
தவ ஞானம் பூப்பவின வேனிற்கால
மணியாத திருக்காவலூரா ளன்னை
யடிக்கடிமைப் பட்டுற்ற கால மாலோ.

 ஆடி ஆவணி முதுவேனிர் காலம்.
 ஆடி அடங்கும் வாழ்க்கையிலே
 அடங்கா காமம் நிறைந்திடும் சோகம்
 காமம் வெகுளி மயக்கம் நீங்கி

பாவம் எண்ணி அழுது புலம்பி
சாபம் வருமென சங்கடப்பட்டு
கண்ணீர் சிந்தும் மழை உதிர் காலம்
ஆனி புரட்டாசி கார் காலம் - சேர்ந்து

ஐப்பசி கார்த்திகை கூதிர்க் காலம்
 அச்சம் கொண்டு நரக பயத்தால்
 அங்கம் கரைந்து மெல்லுடலாகி
 உள்ளம் நடுங்கும் குளிர் காலம் -போனபின்

மார்கழி தை முன் பனிக்காலம்
பாவம் குறையா பதற்ற காலம்.
மாசி பங்குனி பின் பனிக் காலம்
  நோயும் குறையா மிகு படு காலம் - கடந்து

காமமும் அழுகையும் மெலிவும் பிரிவும்
 நோய்களில் நடந்து காலத்தை கடந்து
 ஞானம் தோன்ற நடந்து வந்தேன்
 இளவேனிற் காலம் இனிது நோக்கி

ஞானம் நிறைந்தது ஞாலம் மகிழ்ந்தது
  காவலூர் அன்னை தாமரைத் திருவடி
  அடிமையாகி சேவடி புரிந்தேன்
அங்கமெல்லாம் பொங்கி மகிழ்ந்தேன்

அதுவே எனக்கு இளவேனிற் காலம்
 சித்திரை வைகாசி சீர்மிகு காலம்
 அடைக்கல அன்னை தேர் உலாக்காலம்.
       
கூதிர்காலம் - குளிர்காலம்.                                                         

No comments:

Post a Comment

Ads Inside Post