Pages - Menu

Friday 3 November 2017

இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

 இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

வாழ்வினைப் பற்றிய பயம்தான் சாவின் பயத்திற்கு அழைத்துச் செல்கிறது. வாழ்வினை முழுமையாக வாழ்பவர்கள்  எந்நேரத்திலும் சாவினை சந்திக்க  தயாராயிருக்கிறார்கள்.   மார்க் டுவைன்

இறப்பு ஒரு இழப்புத்தான். ஆனால் உயிர்வாழும்போது உன்னில் இருப்பது இறப்பினைக் கண்டால் அதுதான் பெரிய இழப்பு
 - நார்மன் கசின்ஸ்     

தன் வாழ்வில் ஏதாவது ஒன்றிற்காக உயிரைக் கொடுத்து அதனை சாதிக்க முன் வராதவர் வாழ தகுதியற்றவர்.  மார்டின் லூதர் கிங்.

கோழைகள் பலமுறை சாதிக்கிறார்கள் வீரர்கள் ஒருமுறைதான் சாதிக்கிறார்   வில்லியம் ஷேக்ஸ்பியர்.

உடல்நலம் இல்லா நிலை இறப்பின்
முன்வடிவம்  - புத்தர்.

இறப்பு என்பது ஒளியை அனைப்பதல்ல மாறாக அது விளக்கையே அகற்றுவதாகும். ஏனென்றால் அங்கு சூரிய உதயம் உண்டாகி விட்டது. -ரவிந்தரநாத் தாகூர்.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

எப்போது நம் இறப்பினை நினைக்கிறோமோ அப்போதுதான்  நம் வாழ்வு மலர்கிறது.   - மோன்டோ கொமரி கிளிப்ட்

செல்வம் வளர வளர சாவின் பயமும் வளர்கிறது.  - ஏர்னஸ்ட் யஹமிங்லே.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   -  ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

அன்பும், சாவும் என்னும் இரண்டு இறக்கைகள் தான் ஒருவரை  விண்ணகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
 -  மைக்கேல் ஆஞ்சலோ.



No comments:

Post a Comment

Ads Inside Post