விவிலிய விடுகதைகள்
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
நவம்பர் 2017, திருத்தூதர் பணிகள்1. யோப்பா நகர் சுந்தரி
பெண்மான் என்னும் நாயகி
தருமம் செய்வதில் பேருபகாரி
மரித்தும் உயிர்த்த தாரகை. யார் இவள்?
2. வானத்திலே பெருவிழா
வீட்டுக்குள்ளே ஒளிவிழா
மக்கள் மேலே தீ விழா
பற்பல மொழிகள் புகுவிழா
தத்தம் மொழி கேட்ட சிறப்பு விழா
அது எப்போது?
3. அரச ஆடை அணிந்தான்
அரங்கத்தில் உரை அளித்தான்
தர்ம அடிகள் வாங்கினான்
புழுது நாறி செத்தான்
இவன் யார்?
4. போடுங்கையா ஓட்டு
இருவர் தேர்வில் டவுட்டு
குலுக்கல் சீட்டு போட்டு
வெற்றிப் பெற்றவர் வரிட்டு
இவர் யார்?
5. ஆசை மிக ஆசை
பணத்தில் மிக்க ஆசை
அழிவு தந்த ஆசை
விழுந்து மடிந்தான் ‡ முன்னே
விழுந்து மடிந்தாள் ‡ பின்னே
இவர்கள் யார்?
6. காட்சி அருளப் பட்டவர்
தூதனை நேரில் கண்டவர்
உற்று நோக்கிப் பார்த்தவர்
மிகவே அச்சம் கொண்டவர்
செய்ய வேண்டியதைப் புரிந்தவர்
இவர் யார்?
7. உயரமான கோட்டை
ஏறமுடியா கோட்டை
கோட்டையை சுற்றி வேட்டை
வேட்டைக்கு நடுவிலே கூடை
கூடைக்குள் ஒரு முட்டை
அது யார்?
8. குதிரை மீது போராரு
சீற்றமாகப் போராறு
டக்கு டக்குனு போனாறு
வீடு வீடா நுழைஞ்சாறு
இழுத்து சிறையில் அடைச்சாரு
ஆட்டிப் படைச்ச அதிரடி வில்லன்
இவர் யாரு?
9. வானத்திலே ஒரு அண்ணன், தம்பி
ஒளி விழா வருமுன்னே
அண்ணன் உடம்பெல்லாம் கரியாகும்
தம்பி உடம்பெல்லாம் இரத்தகொதிப்பாகும்.
அது என்ன?
10. நான் இரண்டெழுத்து பெயர் கொண்டவள்
பணிப்பெண். திட்டவட்டமாய் பேசுபவள்
பேதுரு வருகைப் பற்றி சத்தமாக செய்தி
சொன்னேன். நான் யார் தெரியுமா?
11. பேறு பெற்ற பெயரு
துவக்கத் திருச்சபை வேரு
ஆணி வேரு அங்கப் பாரு
கிடைச்சது எட்டு எழுத்து ஜோரு
அது என்ன? எங்கே?
12. நான் ஒரு பரிசேயன்
திருச்சட்ட ஆசிரியன்
உச்ச நீதிமன்றத்தின்
உயர்ந்த இடத்தில் இருப்பவன்
கடவுளிடம் போராடாதீர் என்று
கண்டிப்பாய் தீர்ப்புக் கூறினேன்
எனது பெயர் என்ன?
13. இயேசுவைப் போல் பேசியவர்
ஏசியவனை மன்னித்தவர்
ஆகாயத்தை நோக்கியவர்
அதிசயக் காட்சிக் கண்டவர்
இயேசுவுக்காக உயிர் நீத்தவர்
இவர் யார்?
14. ஒரே ஒரு பிரசங்கம்
ஆயிரங்கள் மூன்று
ஆண்டவர்க்கு சொந்தமானவர்கள்
இது யாருடைய பிரசங்கம்?
15. ஜாலி ஜாலி தான்
பூஸ்ட்டு பூஸ்ட்டுத் தான்
ஜோரான சூப்பர் டேஸ்ட்டுத்தான்
தி.தூ.பணி ‡ 1ம் அதிகாரம் தான்
எட்டாம் வசனம்
என்ன சொல்லுதுத் தான்.
No comments:
Post a Comment