பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
12 - 11 - 2017
சா ஞா 6: 12 - 16; 1 தெச 4: 13 - 18; மத் 25: 1 - 13;
தற்போது வாகனங்கள் பெருகி விட்டன. விரைவாக செல்வதற்காக உண்டான இவ்வாகனங்கள், நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகமாகி விட்டன. 22.6.2017 ஆங்கில இந்து நாளிதழில் வெளியான செய்தி. இந்தியாவில் இரயில் விபத்துக்கள் 55 - 60 வயத்துக்குட்பட்ட ஓட்டுனர்களின் கவனமின்மையால் நடந்துள்ளன. 74 சதவிகித விபத்துக்குள் இந்த கவனமின்மையால் நடந்துள்ளன. இன்னும் அதிர்ச்சியான செய்தி. இந்த விபத்துக்கள் பயணிகளின் இரயிலில் நடந்துள்ளன.
ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். நம் நற்செயல்கள்தான் இறைவன் முன் வெகுமதியைக் கொடுக்கும். மற்றவர்களின் நற்செயல்களால் நாம் பயனடைய முடியாது. பத்துகன்னியர் உவமை மேற்கண்ட கருத்çத்தான் தெரிவிக்கிறது. மத் 24:45-51 இல் தன் வீட்டு உடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரியை நியமித்த தலைவர், அவர் வரும் நேரத்தில் பணி செய்துக் கொண்டிருப்பவர் பாராட்டும், பதவி உயர்வும் பெறுகிறார் என்ற உவமையும், பத்துக் கன்னியர் உவமையும் ஒத்து செல்கிறது எனலாம். லூக் 12: 35-38 இல் திருமண விருந்திற்குச் சென்ற தலைவருக்காக விழித்திருந்து காத்திருக்கும் பணியாளர் உவமையும் பத்துக் கன்னியர் உவமை ஒத்ததாக காண முடியும்.
விழிப்பாயிருப்பதற்குமேல், ஆயத்தமாயிருக்க வேண்டும் என்ற கருத்து இங்கு, அழுத்தமாக கூறப்படுகிறது. முதல்வாசகத்தில் நாம் ஞானத்தைத் தேடினால், ஞானம் நம்மைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் உயிர்ப்பினைப் பற்றி விளக்குகிறார். உலக முடிவில், முன்பே இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர், பிறகு உயிரோடிருப்பவர் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவர் என்று விளக்குகிறார்.
சொகுசு தேடும் பண்பினால் சோம்பல் உண்டாகிறது. சோம்பலினால் விழிப்புணர்வு தளர்ந்துபோய் விடுகிறது. நம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தற்போதைய மத்திய அரசு போர்க் கொடி உயர்த்தியிருக்கிறது. ஆனால் அடிமட்ட அளவில் இந்த ஊழல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. எந்த அலுவலகத்திலும் காசை காட்டினால்தான் காரியம் நடக்கிறது.
ரேசன் கார்ட்டில் ஒருவரின் புகைப்படத்திற்குப் பதிலாக செருப்பு இடம் பெற்றிருக்கிறது. இன்னுமொரு ரேன் கார்டில் ஒரு நடிகையின் போட்டோ இடம் பெற்றிருக்கிறது. தயாரிக்க வேண்டிய அலுவலர்கள் சொற்ப சம்பளத்திற்கு ஆள்களை நியமித்து, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்ய கூறுவார்கள். சொற்ப ஊதியம் பெற்றவர் சோர்வான நிலையில் வேலை செய்வர். எனவேதான் இத்தகைய கேவலமான தவறுகள் நடைபெறுகின்றன.
ஆயத்தமாயிருந்தால் எதிர்பாராத நேரத்தில் வரும் இறைவனை சந்திக்கலாம். ஆயத்தமாயிருந்து கருமமே கண்ணாயினராக நாம் இருந்தால், வெற்றிகள் நம்மை தேடி வரும். கேரளாவிலிருந்து பீடம் செய்ய ஆள்கள் குடந்தை வந்திருந்தார்கள். குடந்தை பங்கு குரு சொன்னார். கேரளாகாரர்கள் வேலை செய்யும் போது பேசுவதேயில்லை. நம் ஆள்கள் ஊர்கதை உலகத்துக் கதைகளையயல்லாம் வேலை நேரத்தில்தான் பேசுவார்கள். பெரிய மருத்துவமனை அது. அங்கு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்த போது, அங்குள்ள செவிலியர் பிள்ளைகள் சிரித்து விளையாடிக் கொண்டு செய்தார்கள்.
நம் நாட்டிற்கு விழிப்புக் கலாச்சாரம் மிக அவசியம். விழிப்பின் வழியாகத்தான் உயர்ந்து நாம் நிற்க முடியும்.
No comments:
Post a Comment