கிறிஸ்து அரசர் பெருவிழா
21-11-2017
எசே 34:11-12,15-17, 1 கொரி 15: 20-26,28, மத் 25:31-46
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர்
பரிவிரக்கத்தின் பங்களானாய்...
வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி. அரசன் என்றவுடன் பெரியவர்களின் நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன்.
என்ன, இன்று அரண்மனையில் 8 புள்ளி கோலம்தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போடமாட்டார்களா? வீணாக என் வாளுக்கு இரையாகி விடப்போகிறார்கள் என்ற 23ம் புலிக்கேசியை குழந்தைகளின் நினைவுக்கு வரும்.
அரசர்களைப் பற்றி திரைப்படங்களிலும் கதைகளில் மட்டும் கண்டு கொண்டிருக்கிற நமக்கு ஏன் இயேசுவை அரசராக அறிமுகம் செய்கிறது திருச்சபை?
வரலாற்றுப் பின்னனி
முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். உலகம் அச்சுநாடுகள், நேச நாடுகள் என்று இரண்டாகப் பிளந்து அதிகாரப் போட்டி போட்டுக்கொண்டு மக்களை துன்புறுத்துக் கொண்டிருந்த நேரம். அம்மக்களுக்கு பணியாற்ற திருச்சபை Mgr.அம்புரோஸ்ராட்டி என்பவரை அனுப்புகிறது. பின் ஆயராக, கர்தினாலாக உயர்த்தப்படுகிறான். அப்பொழுது இருந்த திருச்சபையின் மறைவுக்குப் பிறகு, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.(திருத்தந்தை 11ம் பயஸ்). போரின் துயரத்தையும், அரசர்களின் அதிகார போக்கையும் கண்டு அனுபவித்தவர், 1925ம் ஆண்டு குவாஸ்பிரிமாஸ் என்கிற சுற்று மடலின் மூலம் கிறிஸ்துவை அரசாக அறிமுகம் செய்து, மற்ற அரசர்களுக்கெல்லாம் முன்னுதாரனமாக நிறுத்துகிறார். ஆனால் அத்தகு முன்பே மாவீரன் நெப்போலியன். இயேசுவை அரசராக ஏற்றுக் கொண்டான் என்பதை வரலாறு கூறுகிறது. வாட்டர்லூ போரில் தோற்று தீவில் தனிமை சிறையில் இருந்த போது அவன் எழுதியது.
அதிகாரம், மகிமை, புகழ் எல்லாம் வெறும் புகை. ஒரு காலத்தில் அலெக்ஸாண்டரை மகான் என்றேன். இப்பொழுது அவன் எலும்பு கூட கிடைக்கவில்லை. பிறகு என்னையே வீரன் என்றேன். ஆனால் அந்நிய நாட்டில், அரியணையோ, காவல் வீரர்களோ இன்றி தனி மரமாகி விட்டேன். ஆனால் 2000 ஆண்டுகளாய் மக்கள் மனதில் அரசராய் இருப்பவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. நானும் அலெக்ஸாண்டரும், ஆயுதத்தால் ஆட்சி செய்தோம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ அன்பினால் ஆட்சி செய்கிறார். ஆம் நெப்போலியன் சொன்னது போல் இயேசு அதிகாரத்தின் அரசல்ல. அன்பின் அரசு. இயேசுவின் அதிகாரத்தின் ஆட்சி இடத்தை சார்ந்தல்ல. இதயங்களைச் சார்ந்தது. பதவிக்கு முக்கியத்துவம் தருவதல்ல, பரிவுக்கே முக்கியத்துவம் தருவது. சிம்மாசனத்தை விரும்பியதல்ல. சிலுவை விரும்பி ளஏற்றது.
விவிலிய பின்னனி
இயேசு அரசர் என்பது கற்பனையாகக் கொடுக்கப்பட்ட தலைப்பு அல்ல. விவிலியத்தில் காணப்படும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. மத் 2:2 யூதர்களின் அரசராகப் போகிறவர் பிறந்திருக்காரமே? அவர் எங்கே? என்ற ஞானிகள் வார்த்தைகள் அவர் அரசர் என்று நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவு கூறும் (லூக் 23. 43) என்ற திருந்திய கள்வனின் கூற்று.
இதோ யூதர்களின் அரசன் (யோவா 19.19) என்ற மரண சாசனம் போன்றவைகள் சில விவிலிய சான்றுகள். இயேசு அரசர் என்றால் நாமெல்லாம் அவரது குடிமக்கள். இயேசுவின் அரசு இவ்வுலகை சார்ந்ததன்று (யோவா 18. 36) விண்ணுலகைச் சார்ந்தது. எனவே நம் எல்லோருக்கும் இரட்டை குடியுரிமை உண்டு.
ஒன்று, இவ்வுலகிலே பணியாற்ற வந்திருக்கிறோம். இங்கே திருச்சபை என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக தற்காலிக குடியுரிமை பெற்றுள்ளோம்.
அவரது அரசில் நிரந்தர குடியுரிமை பெறவேண்டுமானால் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அந்த கடமைகள் என்ன என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரிக்கின்றது.
1. பசியால் இருப்பவருக்கு உணவளிப்பது.
2. தாகமாயிருப்பவர்களுக்கு குடிக்கக் கொடுப்பது.
3. உடையில்லாதவர்களை உடுத்துவது.
4. அந்நியர்களை ஏற்றுக்கொள்ளுதல்.
5. நோயாளிகளை பார்த்தல்.
6. சிறையிலிருப்போரை சந்தித்தல்.
சுருக்கமாகச் சொன்னால், அரசனைப் போல மக்களும் வாழ அழைப்புக் கொடுக்கப்படுகிறது.
இயேசு இக்கடமைகளை நிறைவேற்றி நமக்கு சிறந்த முன்னுதாரனமான விளக்குகிறார்.
- பசியால் வாடியவர்களுக்கு அப்பம் பலுகச் செய்தார்.
- ஆன்மீகத் தாகத்தால் அலைந்தவர்களின் தாகத்தை தீர்க்க வாழ்வளிக்கும் தாகம் எடுக்காத தண்ணீர் தந்தவர். அந்நியர்களாக கருதப்பட்ட சமாரியர்களையும், கானானியர்களையும், பிற இனத்தாரையும் ஏற்றுக் கொண்டார். மனித மாண்பு என்னும் ஆடையை இழந்து நின்ற பாவிகள், விபச்சாரிகளை மனித மாண்பு என்னும் ஆடையால் உடுத்தினார். நோயுற்ற எத்தனையோ மக்களை குணமாக்கினார்.
ஆக, அவரை பிரதிபலிக்க அழைக்க ப்படுகிறோம். மனித நேயமிக்க இயேசுவை அரசராகக் கொண்டாடும் நாம், அதே மனித நேயத்தை, பரிவை வாழ்வாக்க அழைக்கப்படுகிறோம். அப்பொழுது அவரது அரசின் (நிரந்தர குடியுரிமை) நிச்சயம் நமக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment