புது விடியலே வா
விடியலின் பிறப்பே வா!
மாட மாளிகை விடுத்து
மாட்டுத் தொழுவத்திலே பிறந்த
எளிமையின் பிறப்பிடம் நீ!
ஏழ்மையின் புகலிடம் கொண்டு
வாய்மையின் மைந்தனாய் வருகைதந்த
வசந்தத்தின் விடிவெள்ளி நீ!
தாழ்ச்சியில் தனித்துவம் கண்டு
தன்னிகரில்லா கன்னிகையின்
வயிற்றில் உதித்த மாபரன் நீ!
இறைநிலை விடுத்து மனிதராய் பிறந்து
இவ்வுலகின் பாவ இருளினை அகற்ற வந்த
விடுதலையின் ஆதவன் நீ
மனித மாண்புகள் மதிப்புற
சீடத்துவத்தை செயலாற்றிய
மாட்சிமை பொருந்திய செம்மறிக்குட்டி நீ!
மன்னிப்பு அகுடம் அளித்து
மறுவாழ்வு உண்டு என்றுரைத்த
மனுமகன் நீ!
தன்னையே வெறுமையாக்கி,
தன்னிகரில்லா சேவகனாகி
தன் குருதியையே அர்ப்பணமாக்கிய
அன்பின் அடையாளம் நீ!
எம்மையாள வந்த
விடியலின் பிறப்பே வா!
மண்ணாக இருக்கும் இருதயங்களை மனங்களாக்க வா!
குழந்தை வடிவிலே வந்த
விடியலே வா!
எம்மை புது விடியலாக்க வா!
விடியலின் பிறப்பே வா!
No comments:
Post a Comment