ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
- அருட்பணி. .ச. இ. அருள்சாமி,
எசா 60 : 1 - 6; எபே 3 : 2 - 3, 5 - 6 மத் 2 : 1 - 12
சென்னையைச் சேர்ந்த திரு. குழந்தைசாமி அவர்கள், ‘காந்திய அமைதி அமைப்பு’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவர் பொறியல் படித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் பல்சமய உரையாடல், உலக அமைதிக்காக பொது பிராத்தனை கூட்டங்கள் நடத்தி, பல வன்முறைகள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று பிராத்தனை கூட்டங்களினால் அமைதி கண்டுவருகிறார். காந்திஅடிகள் எல்லா சமய கருத்துக்களை ஏற்று மக்களை ஒன்றிணைத்தார் என்று உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்.
இன்று ஆண்டவரின் திருகாட்சி விழாவைக் கொண்டாடகிறோம். இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிற இயேசுவின் பிறப்பு அமைந்திருக்கிறது என்பதுதான் இவ்விழாவின் கருத்து. மத்தேயு நற்செய்தியில் மட்டும்தான் கிழக்கிலிருந்து ஞானிகள் இயேசுவைக் காணவரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். ஞானிகள் என்பதை, அவர்கள் அரசர்கள் என்ற பாரம்பரியம் திபா 72 : 10; எசா 49 : 7 ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் உண்டானது. அவர்கள் அளித்த மூன்று காணிக்கைகளை வைத்து, அவர்கள் மூவர் என்ற பாரம்பரியம் ஏற்பட்டது. அவர்களின் பெயர்களைக் கூட குறிப்பிட்டார்கள். கஸ்பார், பல்த்தசார், மெல்கியோர் ஆகிய மூவரில் கஸ்பார் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் கண்டனர்.
ஞானிகள் ஒரு தேடலில் அங்கு வருகிறார்கள். யூதரின் அரசர் பிறந்திருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். நட்சத்திரம் ஒன்று அற்புதமாக வழிநடத்துகிறது. ஏரோது தந்திரமாக, ‘அவரை போய் பாருங்கள், வந்து என்னிடம் கூறுங்கள்’ என்கிறான். அவனின் தந்திர திட்டத்திலிருந்தும் தப்பிக்கிறார்கள். இறுதியில் தேடியதை கண்டடைகிறார்கள். நல்முத்துக்களைத் தேடிய வணிகரைப் போல (மத் 13 : 45 ‡ 46), ஞானிகள் இயேசுவை தாய் மரியா வைத்திருப்பதைக் காண்கிறார்கள். தங்களின் காணிக்கைப் பரிசுகளையும் தருகிறார்கள். (பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம்). மூன்று பொருள்களும் அடையாளமாக விளங்கின என்று பிறகு விளக்கம் கூறிய பாரம்பரியம் உண்டானது. ஞானிகள் பரிசுகள் தருவதும், திருபாடலின் பின்னனியை பெற்றிருக்கிறது (திபா 72 : 10 ‡ 11). பொன் இயேசுவின் தலைமை (அரசர்)யையும், சாம்பிராணி இயேசுவின் இறைத்தன்மையையும், வெள்ளை போளம் இயேசுவின் பாடுகளின் பயனையும் வெளிப்படுத்தின என்று துவக்கத்திருச்சபையினர் பொருள் கண்டனர்.
வாழ்க்கை ஒரு தேடல், ஒரு பயணம். புதிய உண்கைளை, நன்மைகளை இந்த தேடலில் கண்டுக் கொள்ளலாம். உயிரற்ற பொருள்களை தேடுவதில் தான் மக்களின் மனம்அலைபாய்கிறது. வாழ்வின் உண்மைகளை தேடிக்காண்கிறபோது வாழ்வின் பொருளையும் நிறைவையும் காணலாம்.
அன்மையில் வாட்ஸ் அப்பில் பார்த்த கவிதை :
வாழ்க்கை என்பது
‡ ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்.
‡ ஒரு கடமை நிறைவேற்றுங்கள்
‡ ஒரு இலட்சியம் சாதியுங்கள்
‡ ஒரு சோகம் தாங்கிக் கொள்ளுங்கள்
‡ ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள்
‡ ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்
No comments:
Post a Comment