பணிவு என்னும் இனிய பாதை
மிக மோசமான வார்த்தை நான்
.
அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியாள மையம்
குருத்துவ வெள்ளி விழா காணும் இரண்டு குருக்களின் வாழ்வை உங்கள்முன் வைக்கிறேன். யாருக்கு பணிவு இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
குரு 1 :
என் குருத்துவ வாழ்வில் அர்த்தம் இல்லை. என் மக்கள் என்னை புரிந்து கொள்ளவுமில்லை. ஒவ்வொரு பங்கிலும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். அதற்கு பலக் காரணங்கள் உண்டு. இந்தப் பகுதி மக்கள் இப்படிதான் நடந்து கொள்வார்கள். என் பங்கில் எனக்கு உதவி செய்வதற்கு நம்பிக்கையான நபர்கள் இல்லை. எனக்கு முன்னால் இருந்த குருக்கள் தவறுகள் செய்ததால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே நிம்மதி இல்லை.
குரு 2 :
கடந்த 25 ஆண்டுகளாக நான் நிறைவான குருத்துவ வாழ்வு வாழ்ந்து வந்துள்ளேன். என்னை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். என் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். மக்கள் கேட்டபோதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். என் மக்கள் என்னை மதிக்கிறார்கள். அன்பு செய்கிறார்கள்.
இந்த இண்டு குருக்களிடையே யாரிடம் பணிவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என் கருத்துபடி இந்த இரண்டு குருக்களிடமும் பணிவு இல்லை. அவர்கள் சிந்தனையில், சொற்களில், செயல்பாடுகளில் “நான்”, “என்”, “என்னை”, “எனக்கு” போன்ற தன்னல வார்த்தைகள்தான் அதிகம் தென்படுகின்றன. குருத்துவ வாழ்வை பணிவாழ்வு என்று அழைக்கிறோம். ஏனென்றால் குருத்துவ வாழ்வு குருக்களை சார்ந்த வாழ்வு அல்ல. அது மக்களை சார்ந்த வாழ்வு. இந்த இரண்டு குருக்களிடத்திலும் அவர்களை சார்ந்த வாழ்வுதான் மிகுந்திருக்கிறதே தவிர மக்களை சார்ந்த வாழ்வு இல்லை.
சரிங்க, இந்த உலகத்தில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். “ஐ லவ் யு” என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இந்த உலகில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “உங்கள் கருத்து என்ன?” இந்த உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? “மிஸ் யு” என்று நினைக்கிறீர்கள். இதுதான் இல்லை. இந்த உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “தவறு செய்துவிட்டேன்”. இந்த உலகில் மிகச் சிறந்த வார்த்தை நாம். இந்த உலகில் மிக மோசமான வார்த்தை நான்.
அமெரிக்காவின் மொழி எது என்பதை தீர்மானிப்பதற்காக அமெரிக்க மக்கள் மன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. ஜெர்மானிய மொழியையும், ஆங்கில மொழியையும் வைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். இறுதிப் போட்டியில் ஆங்கில மொழியானது ஒரு ஓட்டில் ஜெர்மானிய மொழியை வென்றது. ஆங்கில மொழி இருப்பதால்தான் இன்று அமெரிக்கா முதல் நாடாக விளங்குகிறது. ஒவ்வொரு கரத்திற்கும் உள்ள மகத்தான வல்லமையைத்தான் இது காட்டுகிறது. நான் முடிவு எடுப்பதில் வல்லவன். என் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். நம்மில் பலர் வாழ்வில் 50% அதிகமாக தவறான தீர்ப்புகளையே எடுக்கிறோம் என்று அறிவியல் கூறுகிறது.
என் தனிப்பட்ட வாழ்வில்கூட என் தீர்ப்புகள் எவ்வளவு தூரம் தவறாக இருக்கிறது என்று எண்ணி வியந்திருக்கிறேன். ஒருமுறை என் கையில் இலேசாக அரிப்பு ஏற்பட்டது. அரிப்பிற்கான காரணங்கள் என்ன இருக்கலாம்? என்று வலைதளத்தில் தேடினேன். யயிலிலிd ளீழிஐஉer ஆகவும் இருக்கலாம் என்று வந்தது. அன்று இரவு முழுவதும் எனக்கு Blood Cancer வந்துவிட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஒரு நல்ல பங்குத்தந்தைக்கு சிறந்த அடையாளம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளகூடிய அமைப்புகளை ஏற்படுத்துவது. பங்குப் பேரவை, அன்பியங்கள் போன்ற பங்கேற்பு அமைப்புகள் பங்குத்தந்தையின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும், மக்களின் கருத்துக்களை பங்குத்தந்தை அறிந்துகொள்ளவும் சிறந்த வழிகளாகும். எனக்குத் தெரிந்த ஒரு அருள்தந்தை உண்டு. அவர் நல்லவர். மக்களுக்காக தன் சொந்த பணத்தை செலவழிக்க தயங்காதவர். ஆனால் மக்கள்; அவரின் சேவையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் எடுத்த முடிவுகளாகும். மக்களின் கருத்திற்கு அவர் மதிப்புக் கொடுக்கவில்லை. குடும்பத்தில், சமூகத்தில், நட்பில், ஊரில் உங்கள் கருத்து என்ன? என்று தினமும் ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். உங்கள் உறவுகள் சிறக்கும்.
என் கருத்து என்ன? என்று பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், உங்கள் கருத்து என்ன? என்று கேட்டு வாழ்ந்தால் வாழ்க்கைப் பயணத்தில் இனிமை கூடும்.
(தொடரும்)
No comments:
Post a Comment