Pages - Menu

Friday 2 March 2018

விவிலிய விடுகதைகள், உராமையர் 10 முதல் 16 அதிகாரங்கள் )

விவிலிய விடுகதைகள்
(அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
உராமையர் 10 முதல் 16 அதிகாரங்கள் )

கடவுளின் செயல்கள் கணக்கிட முடியாது
    அவரின் வழிகள் ஆராய முடியாது
    தோண்டித் தோண்டிப் பார்த்தாலும்
    ஆழம் காண முடியாது. அது என்ன?

2. ஊழியத்திற்காக ஊதியம் தேடுபவரா
      ஊழியம், ஊழியம் என்றே
      வயிற்றை நிரப்பிக் கொள்கின்றனர்
      இப்படிப்பட்டவர்கள் யார்?

3. எங்கள் இனம் அழிய
      நான் மட்டும் தப்பினேனே என்று
    பெருமையடித்த இவருக்கு
      இறைமொழி பதில் என்ன? யார்? யாது?

4. இரத்தம் சிந்த துணிந்தவர்கள்
      இரத்த சாட்சியாக விரும்பியவர்கள்
      பவுலடியாரைக் காப்பாற்ற எண்ணி
      தம்முயிரை இழக்க முன் வந்தவர்கள்.
      இவர்கள் யார்?

5. உதவி செய்யும் உத்தமி
      கெங்கிரேயாவின் ஊழியக்காரி
      மூன்றெழுத்துடைய திருத்தொண்டர். இவர்யார்?

6. அனுப்பப்பட்டதால் அறிவித்தார்கள்
      அறிவித்தவர்களுக்கு கிடைக்கும் சன்மானம் கூறும் வசனம் என்ன?

7. கீழ்ப்படியாமை என்னும் வீட்டுக்குள்ளே
      உட்படுத்தியவர்களுக்கு
      கடவுள் நான்கெழுத்தில் உணவு ஊட்டிய சோறு எது?

8. உன்மேல் மட்டுக்கு மீறிய மதிப்பு கொள்ளாதே!
      அது அமிர்தமும் நஞ்சாகும்
      அளவுக்கு மிஞ்சி எண்ணாதே!
      அதிக பெருமைக் கொள்ளாதே!
      அளவிற்கேற்ப மதிப்புக்கொள். எதை?

 9. அதிலே மகிழ்ச்சி எங்கே?
      இதிலே தளரா மனம் எங்கே?
    அதிலே நிலைத்திருங்கள் எதிலே?
    சொல்லுங்கள் பார்ப்போம்.

10. கருப்பு சட்டை வேண்டாம் ‡ அது இரவு
        வெள்ளை சட்டை வேண்டாம் ‡ இது பகல்
        மஞ்சள் சட்டை போதும்
        இதனையே எப்போதும் அணியுங்கள் எதனை?

 11. எதற்கும் வரி
      எங்கும் வரி
      நாடு கடலில் சிக்கித் தவிக்கிறது
        வட்டியில்லா ஒன்றுண்டு
        அது கடன் கொடுக்க ஆசை
        கடன் வாங்க ஆசையா? அது என்னக் கடன்?

 12. அவர்களின் கண்கள் ஒளி  இழக்கட்டும்
        அவர்களின் முதுகு கூன் விழுந்து இருக்கட்டும்
        ஆண்டவர்க்கு பிடித்தமான அரசன் கூறியது
          யார் இவர் ?

13. பவுலின் விருப்பமும் அது
      அவரின் சொந்த  இனமிது
      இதயத்தில் ஆழ்ந்துள்ளது
    அதற்காக வேண்டுதலும் உண்டு, எதற்காக?

14. களியாட்டமும் வேண்டாம்
      குடிவெறியும் வேண்டாம்
      கூடா ஒழுக்கமும் வேண்டாம்
      காம வெறியும் வேண்டாம்
    பின் எப்படி நடக்க பவுல் விரும்புகிறார்?

15. சொப்பன சுந்தரர்
      ஆசியாவில் முதல் கிறிஸ்தவர்
      கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றவர்
    வாழ்த்துப் பெற்றவர் இவர் யார்?

No comments:

Post a Comment

Ads Inside Post