வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்
இன்றைய தமிழில்
அருட்பணி. சலுசா
பாடல் எண் : 49திருப்பாத மலரழகு
பொன்னி நதி பூரித்து விளையாடி ஒலி எழுப்பி
எண்ணிலா சோலைகள் எங்கும் நிறைந்திருக்கும்.
தன்னிகரில்லா சோழவள நாட்டுச்
சென்னி சூடும் சிறப்பு மலர் ஆத்தி.
ஆத்தி மலர்கள் அழகோடு சரம் தொடுக்கும்
அகில மரங்கள் நறுமணப் புகை எழுப்பும்
நிழல் தரு காவலூர் திறமுடன் சேர்ந்து
குளிர் தரு அருட்காவல் குவலயம் தந்தனள்.
தன்வினைத் தானறிந்து தன் குற்றம் நீங்கிட
வெண்மதி வலிய வந்து வான் அரசி தாங்கினள்.
இளைய நிலா ஏந்துகின்ற ஈடிலாத் திருவடிகள்
நிலையில்லா பாவி நான்தலை தாங்கத் தாராயோ.
ஒளிபொழி திருவடி தரிசனம் கண்டாலே
இருளில்லா பெறுவாழ்வு நிறையின்பம் கிடைத்திடுமே.
பாரில் விளக்கேற்றி பகலாக்கிய பாவையே
நேரில் விண்ணகத்தை கொண்டு வந்த செல்வியே.
உன் பாதமலர் அழகு வான்வீட்டின் பேரழகு
அன்னை அடைக்கலமே அளித்திடுவாய் அம் மகிழ்ச்சி.
வஞ்சிப்பா
சீர்விளங்கிய செல்வியாய்ப்
பார்விளக்கிய பாவையே
தென்காவிரி திரண்டொலிப்ப
மன்காவிரி மலர்கமழப்
பூந்தாதகி மலர்கமழப்
பூந்ததாகி புடைநிழற்றத்
தீந்தாதகில் சினைகுளிர்ப்ப
வருட்காவலூ ரமைந்தளிப்பத்
திருக்காவலூர்ச் சேர்ந்தனளே
சேர்ந்தபின்
நானே பூண்பழி நைய வெண்மதி
தானே பூணபதந் தான்றா ராளோ
திருவடி யயாளிவுளந் தெளிவுறக் கண்டாற்
கருவடி யிருளறக் கண்டு
மருவடி மலரடி வான்கதி யந்தமே.
No comments:
Post a Comment