தமிழகத்தில் வீசும் வெற்றிடம்
கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி
2016 டிசம்பரில் தொடங்கிய குழப்பத்திலிருந்து தமிழ்நாடு இன்று வரை மீண்டு வரமுடியவில்லை. பிரேக்கிங் நீயூஸ்களால் வீயூP யூழிமிe உயர்த்திக் கொண்டிருந்த தொலைக்காட்சி சேனல்கள் சற்று அமைதியாக இருந்தாலும் ஆர்.கே நகர் தேர்தல் தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுவிட்டது.
‘பணம் ஆறாக ஓடுகிறது’ என்று ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொலைக்காட்சி, வாட்ஸ்அப், பேஸ் புக், இருபது ரூபாய் நோட்டு விளையாடுகிறது என்று அலரினாலும் ஜம்மென்று தேர்தல் வெற்றியுடன் முடிந்தது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வெட்கக் கேடானது. துணை ராணுவம், தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வெளிப்படையாக பணம் வென்றது என்று எல்லோரும் பேசுவது வெட்கத்துக்குரிய செயல் இல்லையா? தமிழ்நாடு, வெட்கி தலைக்குனிய வேண்டும் . தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது தேசிய அளவில் தமிழ்நாட்டுக்கு ஒரு தலை குணிவு இல்லையா? பணத்தால், வென்றவர்கள் தர்மம் நியாயம் பற்றி பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போன்று இல்லையா? வீரந்தமிழன், தன்மானத் தமிழன் தரம் தாழ்ந்து விட்டானா? வறுமையிலும் கையேந்த வைத்தது யார்? திரும்ப வாங்கினால் என்ன தவறு? என்பது எந்த விதத்தில் நியாயம்?
வறுமையை சுட்டிக்காட்டி விலை பேசுவதும், வாங்குவதும் குற்றமில்லையா? ஜனநாயகத்தில் பணம் எப்படி விளையாடியது? லஞ்சம் தமிழகத்தில் தலைவிடுத்தாடுகிறது என்பது உண்மை என்றாலும், ஆட்சியையே பணயம் வைக்கும் லஞ்சம், சமுதாயத்தை எங்கோ கொண்டு நிறுத்திவிடும். மனிதம் மரித்து போகும். வாழ்வியல் வகையற்றுபோகும். வந்தாரை வாழ வைத்த தமிழகம் இன்று வாழ்வுரிமை தேடி அலைகிறது.
தமிழகம் இவ்வளவு கேவலமான நிலைக்கு போனதற்கு காரணம் 2016 டிசம்பர் 5 இல் ஏற்பட்ட பேரிழப்புதான் காரணம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டை தன் கண் அசைப்பில் வைத்திருந்த அந்த ஆளுமை மறைந்தபின் ஏற்பட்ட வெற்றிடம் ‘தலைக்குத் தலை நாட்டாமையாக ஆடவைத்திருக்கிறது’ என்று கருத்து பரவலாக வைரஸ்சாக பரப்பப்படுகிறது.
இரும்பு கரம் கொண்டு எல்லோரையும் அடக்கி ஆண்ட அந்த இரும்பு மனுசி வெற்றியாளர்களை உருவாக்கவில்லçயா? நெஞ்சுரம் கொண்ட வீரப்பெண். தன்னைப்போலவே நெஞ்சுரமிக்கவர்களாக அவரது அரசியல் பெண் வாரிசுகளை உருவாக்கவில்லையா? அவரை சுற்றியுள்ள மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் கோழைகளா? தலைவியின் ஆளுமையும் வீரமும், அரசியல் லவாகமும் அவர்களிடம் இல்லையா? இல்லை அவர்கள் அப்படி வளர்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அடக்கி வைக்கப்பட்டவர்களா?
அரசியல் வெற்றிடம் என்பது ஒரு மாயை. ஓர் ஆளுமை மறைந்தால் மற்றொரு ஆளுமை நிரப்பும். அதை நாம் இனங்கண்டு கொள்ளாமல் இருப்பது நமது தவறு. கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இரு பெரும் ஆளுமைகள். இன்றைய அரசியல் களத்தில் ஒருவர் மறைந்துவிட்டார். மற்றொருவர் செயலிழந்து இருக்கிறார் என்றாலும், அவரது வாரிசு ஆளுமை இல்லாதவர் என்று சொல்ல முடியாதே. ஜெயலலிதாவுக்கு வாரிசு அவரது தொண்டர்கள். ஒன்னரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கும் அவரது கட்சி ஆளுமைமிக்கது. கட்சியிடையே பிளவும், சண்டையும் ஏற்பட்டாலும் மற்ற கட்சிக்கு தாவாத தொண்டர்களை கொண்ட கட்சி. அது இரு பெரும் திராவிட கட்சிகளும் தொண்டர்கள் வியத்தில் பலம் பொருந்தியது. இது எப்படி மறைந்து போகும்?. காவிக்கு எப்போதும் வழிவகுக்காது.
ஜெயலலிதாவுக்கு முன்பு எம்.ஜி.ஆரை ஆளுமையாக கொண்டாடிய தொண்டர்கள் பிற்காலத்தில் ஜெயலலிதாவை ஆளுமையாக ஏற்றுக்கொள்ள வில்லையா? அண்ணாவுக்கு பின் கலைஞரை ஏற்றுக்கொள்ளவில்லையா? தமிழ்நாடு எப்போதும் திராவிடத்தன்மையை கொண்டது. திராவிட கட்சிகளால் இப்போது தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழிவு தமிழ் மக்களைத்தானே சாரும்.
ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அந்த அரசியல் அமைப்பில் இருந்த பலகீனங்கள் இப்போது வெளிப்படுகிறது. பலகீனங்களையும், அரசியலமைப்பின் கோளாறுகளையும் வெல்பவர்களே ஆளுவார்கள். ஆளப்போகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் !!!
No comments:
Post a Comment