மரியாளும் மகளிரும்
சகோ. விமலி FIHM. இதயா கல்லுVரி, குடந்தை
(அன்னை மரியாவிற்கு அற்பணிக்கப்பட்டுள்ள மே மாதத்தில் மாதாவின் சீரிய பண்புகளை விளக்குகிறார் சகோதரி)
காட்டிய தாய்அன் பையே ஊன்றிக் கொண்டும்
ஊட்டிய நல்லு ணர்வே ஒளிஎனப் போற்றிக் கொண்டும்
பூட்டிய துறவு வாழ்வே பொன்னென வாழ்த்திக் கொண்டும்
ஈட்டிய செல்வ மாக இயேசுவை எண்ணி வாழ்ந்தார் ‡ (மரியம்மை காவியம்)
அன்னை மரியாள்
மாபெரும் புரட்சிகளிலும், மகத்தான செயல்களிலும் மிகப்பெரிய அறிகுறிகளைத் தேடிக்கொண்டு, நம் கண்முண்னே இருக்கின்ற இறையன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மறந்து விடுகின்றோம். பாதுகாப்பற்ற பெண்கள் பாதுகாப்பாகிட, மாண்பிழந்த, பெண்கள் மதிப்பீடுகளாகிட, அறமிழந்த குடும்பங்கள் அறநெறியாகிட, இறையிழந்த மக்கள் நிறைவழியாகிட அன்னை மரியாள் தந்திட்டாள் தன்வாழ்வையே தரணிக்கு. மரபுகளை உடைத்து மனிதம் காத்திட தன்னை கையளித்தவர்களில் முதலிடம் பெற்றவள் அன்னை மரியா! மரபுகள் உடைபடும் போதுதான் மாற்றம் மண்ணில் பிறப்பெடுக்கும். மரபுத் தளைகளில் மரியாள் என்ற மலர் நசுங்கி விடாமல் இறைவன் தடுத்து நிறுத்தி உறுதிப்படுத்தினார்.
கல்வி தாயானது அன்றைய காலகட்டத்தில் யூத சமுதாயத்தில் நினைந்து பார்த்திட முடியாத மரபுகளை மீறிய புரட்சி செயல்! மக்கள் மீது ஈடுபாடு மிக்கவள் அன்னை மரியாள்(லூக் 1:47‡55). தேடிச் சென்று உதவும் நற்குணமும், இலக்கணமும் அன்னை மரியாளுக்குண்டு(லூக் 1:39). சிலுவைப் பாதையில் தாய் மகனைச் சந்திக்கிறாள் என்றாலும் மீட்புத் திட்டம் நிறைவேற தன் மகனை தொடர்ந்து கல்வாரி செல்ல அனுமதிக்கிறாள். ஆண்களெல்லாம் விட்டு ஓடிப் போன பின்னும் சிலுவையடியில் நிற்கிறாள். இயேசு, தன்னுயிர் பிரியும் இறுதி வேளையில் தாயிடம்தான் தன் இலட்சியக் கனவை ஒப்படைக்கிறார். அஞ்சி நடுங்கி இருட்டறையில் ஒளிந்திருந்த திருத்தூதர்களுக்கு அருகிலிருந்து தைரியம் தந்தவள் அன்னை மரியா (திப 1:74). அதனால்தான், இறைவனின் திட்டம் வழுவாமல் நிறைவேறியது.
மாமரி நிலவைப்போல் அழகுள்ளவள் (திபா 69) என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆம், நிலவு பூமியில் உள்ள மிகத் தாழ்ந்த படைப்புக்கும் ஒளியூட்டி பயனுறச் செய்வது போல, மரியாளும் தகுதியற்ற பாவிகளையும் இறைஒளியைப் பெறச் செய்து உதவுகிறார்கள். தாயின் அன்பு தெய்வீகத்துக்கு நம்மை இட்டு செல்லும் மகத்தான வழி. மாதா தினமும் அருங்செயல்கள் மூலம் புதுமைகள் செய்து நம்மை மகிழ்வுப்படுத்துகிறார். இந்த மாதம் அன்னை மரியாவின் அன்புச் செயல்களுக்கு நன்றி சொல்லும் மாதம். மரியின் உறவில், இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு வாழ்வில் தொடர்ந்து இனிதாய் பயணிப்போம். அதோடு இந்த மாதத்தில் இவ்வுலகில் மகளிருக்குரிய மரியாதையினை மனமகிழ்ச்சியோடு நோக்குவோம்.
அன்னை - மகளிர்
‘உங்கள் இலக்குக்கான எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், நம்பிக்கை இருந்தால், சிறுபடை கூட புரட்சிக்கு வித்திடும்.’ - பிடல் காஸ்ட்ரோ.
உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். உடலால் வாழும் ஆணை விட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
அன்று சமூகத்தில் வேரோட்டமான வாழ்வைக் கொண்டிருந்த உயிரோட்டமுள்ள எத்தனையோ பெண்களின் வரலாறு மறைக்கப்பட்டு, அனுபவங்கள் நிராகரிக்கப்பட்டு, சாதனைகள் புறம்பே தள்ளப்பட்டு, அவர்களின் இருப்பையேக் கண்டு கொள்ளாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் -
புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றார் பாரதியார்.
இன்று பெண்களின் வீரமும், விவேகமும், ஆற்றலும் அளவிட முடியாதவையாக உள்ளது என்பது உண்மை. ‘வாழ்வில் நிறைவு என்ற ஒன்று கிடையாது. நிறைவடைந்த மனங்கள் மட்டுமே உண்டு.’ வாழ்வில் தேக்க நிலை என்ற ஒன்று கிடையாது தேக்கமடைந்த மக்கள் மட்டுமே உண்டு. ‘வாழ்க்கை என்பது வேலியில்லாத் திறந்த வெளி, வாய்ப்புகள் கிடைக்கும்போது வேண்டியமட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று வாழ்பவர் பெண் மட்டுமே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.
Wind Shield Wiper இதைக் கண்டுபிடித்தவர் மேரி ஆண்டர்சன். இவர் பனி பெய்துக் கொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியைத் துடைத்தார். இதனை கவனித்த மேரி இதற்காக ஒர் உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார். அவ்வுபகரணத்தைப் பேருந்தின் உள்ளே இருந்து இயக்க முடியும். மக்கள் இதை வாகனங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
Colored Flare System
பல ஆங்கிலப் படங்களில் குகைகள், இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும். அதன் பெயர்தான் Colored Flare System. இதைக் கண்டுபிடித்தவர். னிழிrமிஜுழி ளீலிவிமிலிஐ இவர் 1847 இல் தனது 21 வது வயதில் விதவையாக்கப்பட்டார். ஆனால் விடுதலை போராளியாக போராடினார்.
நீரில் கார்பன் ‡ டை ‡ ஆக்ஸைடுடின் அளவை அறியும் கருவியைக் கண்டுபிடித்தவர், கார்பன் பெண்மணி என்று அழைக்கப்பட்ட சாரஹரி காட்ஜீக்கோ. கீது அன்னா ஜோஸ் இந்திய கூடைப்பந்தில் நட்சத்திர வீராங்கனை. இவ்வாறு இன்றைய அநேக பெண் சாதனையாளர்களைக் குறிப்பிடலாம். தன் உரிமையை நிராகரித்து, தன்னை நிர்க்கதியாய் விட்ட சமூகத்திற்காக தன்னைத் தருவதில் பெண்ணைவிட தாராளம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலைதனை உணர்தல் இன்றைய தேவையாகும்.
பயன்படுத்தப்படாத திறமை மங்கிப் போகிறது. பயன்படுத்தப்படாத ஆற்றல் குறைந்துவிடுகிறது. பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்து விடுகின்றன. பயன்படுத்தப்படாத நேரம் காணாமல் போய்விடுகிறது. பயன்படுத்தப்படாத அறிவு ஒரு சுமையாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவர்களாக பெண்களாகிய நாம், உயர்வதற்காக வீழ்கிறோம். ஒவ்வொரு முறையும் முன்பைவிட உயரே செல்கிறோம். இத்தாரகமந்திரத்தை தரணியில் வாழ் மகளிருக்கு உணர்த்திடுவோம்.
தனக்கான நியாயமான அனுமதி மறுக்கப்படும் போது போராடுபவர்களாகவும், அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர்களாகவும், உடலால், மனதால், பொருளாதாரத்தால் தங்களை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தவர்களாகவும், பிறரின் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் செவிசாய்க்காத நேர்மையாளர்களாக பெண்கள் திகழ்ந்து, வாழ்வில் ஒளிர்ந்து முன்னேற முழுமையாய் முன்வர முயல்வோம். மரியாளின் ஆன்மீக ஊற்றை உந்து சக்தியாகக் கொண்டு இன்றைய சமூக வாழ்வைத் தெளிவான, துடிப்பான சவாலாக்குவோம். அப்பொழுது மரியாளின் மாண்புலகில் மகளிர் மகத்துவம் பெற்றிடுவர்.
No comments:
Post a Comment