கல்யாணம் எதற்காக?
அரை பக்க சிறுகதை
ச.இ.அ.
முகிலன் ஓர் ஆசிரியர். முற்போக்கு சிந்தனை உடையவர். கடின உழைப்பாளி. வீட்டிற்கு ஒரே பிள்ளை. இவர் ஆசிரியர் பணியில் நிரந்தரம் ஆனதும் இவர்களின் குடும்பம் சற்று உயர்ந்தது. பெற்றோர், பையனுக்கு வயதாகி விட்டது. திருமணம் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து பையனிடம் கூறினார். ‘நம்ம உறவுக்காரப் பொண்ணு, அவ பேங்கில வேலை செய்றா, பொறுத்தமா இருக்குமென நினைக்கிறோம். என்னப்பா சொல்ற?’ என்று அம்மா கேட்டாள். முதல்ல என்னுடைய கருத்தை சொல்றேன். என் திருமணம் சீர்திருத்த கலியாணமா, ஆடம்பரமில்லாம கோவில் முறைப்படி எளிமையா நடக்கனும். மேளதாளம், வரவேற்பெல்லாம் வேண்டாம். அத்தோடு ஐந்து ஏழை தம்பதிகளுக்கும் நம் செலவிலேயே அன்றைக்கு திருமணம் நடக்கனும், என்றான் முகிலன். பொண்ணு வீட்டில கேட்டு சொல்கிறேன் என்று சொன்ன தாய், சிலநாள்களில், ‘உன்னுடைய கருத்துக்கு பொண்ணு வீட்டில ஒத்துக்கலப்பா. சகல ஆடம்பரங்களுடன் திருமணம் நடந்தா சரிங்கராங்க’ என்றார்.
இடையில் முகிலன் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றான். கலெக்டர் வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. இப்போது பெண் வீட்டார் திருமணத்தை மாப்பிள்ளை விருப்பப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முன் வந்தனர். ‘அடுத்த மாதம் 15 ஆம் தேதி அனாதை பெண்ணுடன் திருமணம் நடக்கப் போகிறது என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள்’ என்றான் முகிலன். ஆடம்பரத்திற்காக கல்யாணம் அல்ல. குடும்பத்திற்காக தான் திருமணம் என்பதை புரிவதில்தான் திருமணத்தின் சிறப்பு என்றான் முகிலன்.
No comments:
Post a Comment