வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
முழுக்கவனமும் புதிய சிந்தனையும்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதன் பெயரை தெரியாதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு மரம் நட வேண்டும் என்றாலும் அல்லது மரத்தை பிடுங்க வேண்டும் என்றாலும் இந்த Machine இல்லாத இடமே இருக்காது. எவ்வளவு கோடி செலவு செய்து கட்டிடம் கட்டினாலும் இதன் பங்கு 1% ஆவது இருக்கும். என்ன Machine என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
Correct M. சொல்றீங்க. ஆமாங்க JCB Machine தான். எப்படி இந்தப் பெயர் வந்தது? Joseph Cyril Bamford என்ற பெயரை தான் சுருக்கமாக மூளீய என்று சொல்கிறோம். ஏன்னா இந்த Machine யைford கண்டுபிடித்தவரே அவர்தான். அதனால் அவர் பெயரையே வைச்சுட்டாங்க. Joseph Cyril Bamford இங்கிலாந்து நாட்டில் Uttoxeter என்ற இடத்தில் ஜீன் 21, 1916ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் நல்ல ஒரு கத்தோலிக்க குடும்பம், இவர் படித்தது Buisness Management . ஆனால் Engineering துறையில் அதிக ஆர்வம் இருந்தது. இவர் ஒரே நேரத்தில் JCB Machine யை கண்டு பிடிக்கவில்லை. சின்ன சின்ன கண்டுபிடிப்புகள் மூலமாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். 1944ல் Electric Welding யை கண்டு பிடித்தார். 1945ல் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் Uttpxeter என்ற இடத்தில் JCB நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நிறுவினார். 1951ல் அவர் தயாரித்து அனைத்து கருவிகளுக்கும் மஞ்சள் நிற வர்ணம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றினார். தற்போது கூட எல்லா JCB Machineம் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ஏன் மஞ்சள் நிறம்? மஞ்சள் நிறம் அனைவரின் கவனத்தையும் விரைவாக ஈர்க்கும் சக்தி கொண்டது. மனிதர்கள் தாங்கள் பார்க்கும் பொருட்களில் மஞ்சள் நிறப்பொருளைத்தான் முதலில் பார்ப்பார்கள். சிவப்பு நிறத்தை விட மஞ்சள் நிறத்தை ஒளி குறைவான இடத்திலும் நமது கண்கள் கண்டுபிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கும் மேலாக பாதுகாப்புத் தன்மைக்காகவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் கூட பள்ளி ஊர்திகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளதர்க்கும் இதுதான் காரணம். 1953 ஆம் ஆண்டு JCB யின் Logo உருவாக்கப்பட்டது. 1979இல் நம் இந்திய நாட்டில் JCB Company ஆரம்பிக்கப்பட்டது.
JCB நிறுவனம் 22 தயாரிப்பு நிறுவனங்களை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் நிறுவியிருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இதனுடைய உற்பத்தி கருவிகளை வியாபாரம் செய்கிறது. 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் தனது தலைமை அலுவலகத்தை செயல்படுத்தி 11,000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. 300 விதமான கருவிகளை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்க நாட்டு இராணுவத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. உலக அளவில் அரசு சார்ந்த நிறுவனம் JCB மட்டும்தான். இன்னும் ஒரு முக்கியமான விசயம். மூன்று தோண்டும் கருவிகளை ஒருவர் வாங்கினால் அதில் ஒன்று JCB நிறுவனத்தின் கருவியாக இருக்கும். அந்த அளவிற்கு இதன் தாக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. உலக அளவில் Construction Machine தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் Joseph Cyril Bamford மார்ச் 1, 2001 ம் ஆண்டில் 84 ஆம் வயதில் இயற்கை எய்தினார். தற்போது அதனுடைய தலைவராக அவரின் மகன் Antony Bomford சிறப்பாக செயல்படுகிறார். எப்படி இப்படிப்பட்ட சாதனையை செய்து இந்நிறுவனம் வெற்றி நடைபோடுகிறது என்று சிந்தித்து பார்த்தால் Joseph Cyril Bamford அவரின் மந்திர சொற்கள் தான் காரணமாக அமைகிறது. Focus on What you do best and be Innovative இவ்வார்த்தைகள் தான் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
‘எதை மிக நன்றாக செய்ய முடியுமோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி புதிய சிந்தனைகளோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’.Joseph Cyril Bamford வியாபாரம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருந்தாலும் பொறியியல் துறையில் மிக நன்றாக செயல்பட முடியும் என்று உணர்ந்து கவனத்தை செலுத்தினார். புதிதாக சிந்தித்து பல கருவிகளை உருவாக்கினார். JCB நிறுவனத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி வீரராக மாறினார். நம் வாழ்விலும் நாம் எதை மிக நன்றாக செய்யமுடியும் என்பதை கண்டுணர்ந்து அதில் கவனத்தை செலுத்தி புதிய சிந்தனைகளை புகுத்தினால் வெற்றி நம் வசப்படும். அப்போது உங்கள் பெயரையும் இந்த உலகம் வாசிக்கும். சரித்திரமும் அதை பதிவு செய்யும்! நீங்களும் வெற்றி வீரர்களாக வலம் வரலாம்!
“தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை” - புக்கன்ஸ்.
No comments:
Post a Comment