விவிலிய விடுகதைகள்
யோவான் நற்செய்தி அதிகாரம் 10 முதல் 21 முடிய
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
1. எட்டு நாள்களுக்கு பின் வந்தேன்
தீவிர வாதம் நீங்க
மூன்றெழுத்து சொல்லி வாழ்த்தினேன்.
நான் யார்? மூன்றெழுத்து என்ன?
2. சந்தேகத்திற்கு இவர் பெயரைக் குறிப்பிடுவர்
நம்பமாட்டேன் என்பார். பின்பே நம்பிடுவார்.
பரங்கி மலை வந்தவர். இவர் யார்?
3. வெளியே கிடந்தால் வெறுமை
மண்ணில் உறவாடினால் உரிமை
வெளியில் தலைக் காட்டுவதில் செழுமை
வளர்ந்தால் தருவது வளமை. நான் யார்?
4. ஓட்டமிது ஓட்டம்
அவசரமான ஓட்டம்
முந்திக்கொண்டவர் இளசு
பிந்திக் கொண்டவர் பழசு
இளசு வெளியே
பழசு உள்ளே. யார் இவர்கள்? எங்கே?
5. என் பெயர் மூன்றெழுத்து
கயபாவுக்கு மாமன்
மக்களுக்காக ஒருவர் இறப்பது நல்லது என்று
ஆலோசனை கூறினேன். நான் யார்?
6. கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் அது
ஏற்றுக்கொள்ளாதார்க்கு தீர்ப்பளிக்கும்
அது என்ன?
7. எல்லோரும் விரும்புவது ஐந்தெழுத்து
மவில் தொடங்கும்
சிறுவர்களிடம் எப்போதும் இருக்கும்
இதை யாரும் உங்களிடமிருந்து
நீக்கிவிட முடியாது என்று கூறியவர் யார்?
அது என்ன?
8. உண்ட வீட்டுக்கு
இரண்டகம் செய்தவன்
பண ஆசை பிடித்தவன்
என்னோடு உண்பவனே
என் மேல் பாய்ந்தவன்
என்ற மறைநூல் வாக்கு நிறைவேறும்
யார்? யாரை? யாரிடம்?
9. கருப்பாயும் இருப்பேன்
பச்சையாயும் இருப்பேன்
என்னை எல்லாரும் விரும்புபவர்
என்னை பெண்களின் கண்களுக்கு ஒப்பிடுவர்
கொடியில் தான் வளர்வேன்
என்னை உவமையாகப் பயன்படுத்தியவர்
யார்? நான் யார்?
10. எனது பெயர் மூன்றெழுத்தில் உள்ளது.
நானோ மூன்று முறை அழுதேன்
மூன்றாம் முறையாக அழுதபோது
அம்மா ஏன் அழுகிறீர் என்று
கேட்ட இவர்கள் யார்? அவர் யார்?
11. கெடுவான் கேடு நினைப்பவன் ‡ இவன்
கூடவே இருந்துக் குழிப்பறிப்பவன்
தான் வெட்டிய குழியுள் தானே வீழ்பவன்
அதை பெற்றதும் அவன் அவனுக்குள்
நுழைந்தான் யார்? யார்?
12. இரண்டெழுத்து உடையது. அது
பளப்பளப்பானது. பிடித்தது ஒருகை
வெட்டியது ஒரு காதை. யார்? யாரை?
13. கத்திப் போல் இருக்கும் வெட்டாது ‡ அது
கொண்டையிருக்கும், பூக்காது
ஹிநு சொல்லி மறுத்தும் அது முழக்கமிட்டது
அது எது? ஹிநு சொன்னவர் யார்?
14. வளர்த்தக் கிடா
மார்பில் பாய்ந்தார்போல் என்ற
பழமொழிக்கேற்ப யோவான் 13 ஆம்
அதிகாரத்தில் கண்டு பிடியும்?
15. இந்த மை வாயில் இருந்தால் நன்மை
பிலாத்து இயேசுவிடம் கேட்ட மை
அது என்ன மை?
No comments:
Post a Comment