‘பெண்களின் ‘என்னங்க’
என்பதற்கு பல அர்த்தங்கள்’
குளியல் அறையில் நின்று கொண்டு என்னங்க என்று அழைத்தால்:
சுவரில் பல்லி இருக்கிறது எனக்கு பயமாயிருக்கிறது என்று அர்த்தம்
.
உணவகத்தில் சாப்பிடும் போது என்னங்க என்று அழைத்தால்:
சாப்பிட்டது போதும், ரசீதை கொண்டு வரச்சொல்லி பணத்தைக் கட்டுங்கள் என்று அர்த்தம்.
கலியாண வீட்டில் என்னங்க என்று அழைத்தால்:
யாரோ தெரியாதவர் வந்திருக்கிறார் வாங்க அவரிடம்பேச வேண்டும் என்று அர்த்தம்.
துணிக்கடையில் என்னங்க என்று அழைத்தால்:
தேடிய சேலை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும்போது என்னங்க என்று அழைத்தால்:
வண்டியை நிறுத்துங்க பூ வாங்க வேண்டும் என்று அர்த்தம்.
மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னங்க என்று அழைத்தால்:
மருத்துவரிடம் நான் பேச வேண்டும் என்று அர்த்தம்.
வீட்டுக்கு வெளியே பார்த்து என்னங்க என்று அழைத்தால்:
யாரோ தெரியாதவர் வெளியே நிற்கிறார் என்று அர்த்தம்.
அலமாரியின் முன் நின்று கொண்டு என்னங்க என்று அழைத்தால்:
பணம் வேண்டும் என்று அர்த்தம்.
சாப்பாடு எடுத்து வைக்கும் போது என்னங்க என்று அழைத்தால்:
சாப்பிட வாங்க என்று அர்த்தம்.
சாப்பிடும் போது என்னங்க என்று அழைத்தால்:
சாப்பாடு சுவையாயிருக்கிறதா? என்று அர்த்தம்.
நடக்கும் போது என்னங்க என்று அழைத்தால்:
விரலைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.
கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு என்னங்க என்று அழைத்தால்:
போட்டிருக்கும் நகை ஒப்பனை நன்றாயிருக்கிறதா சொல்லுங்கள் என்று அர்த்தம்.
காலமெல்லாம் சொன்னவள் கடைசி மூச்சின்போது என்னங்க என்று அழைத்தால்:
என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அர்த்தம்.
என்னங்க என்ற வார்த்தை இல்லையயன்றால்
எல்லாமே முடிந்து விட்டது என்று அர்த்தம்.
No comments:
Post a Comment