உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்
தொகுப்பு : ம. இராசரெத்தினம், ஆடுதுறை
2. நெய், இனிப்பு பண்டம், கேக், பிஸ்கட், பிரட், சாக்லெட், எண்ணெய் பண்டங்கள் , மசாலா உப்பு போன்றவற்றை தவிர்க்கவும், முடியாவிட்டால் குறைக்கவும்.
3. முந்திரி, பாதாம், பிஸ்தா, பருப்பு வகைகள், நிலக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி இவைகளை குறைக்க அல்லது தவிர்ப்ப நல்லது.
4. மோர் அல்லது தயிர் கூடாது.
5. ஒரு வேளை மட்டும் அரிசி உணவு, மற்ற வேளைக்கு புஞ்செய் தானியங்களை சேர்க்க.
6. காலை உணவு பலகாரங்கள் அல்ல, பழ ஆகாரமே சிறந்தது. பச்சை காய்கறிகள், சாலட் சாப்பிடலாம்.
7. காலை, மாலை சிற்றுண்டிகள் கூடாது.
8. நாக்கை கட்டுப்படுத்துங்கள்.
9. இரவு 7 மணிக்குமேல் உண்ணாதீர்கள். இரவு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்து உறங்க செல்லுங்கள். தூக்கம் வரவில்லையானால் படுக்காதீர்கள்.
10. பகலில் தூங்கவே கூடாது. தூங்கினால் எடை கூடும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மட்டும் பகலில் தூங்கலாம்.
11. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அளவோடு சாப்பிடுங்கள்.
12. உடல் பருமனைக் குறைக்கும் உணவுகள், வாழைத்தண்டு, கீரைத்தண்டு உணவில் அடிக்கடி சேர்க்கவும். வெதுவெதுப்பான நீரில் தேன்விட்டு சாப்பிடுங்கள். கோழிக்கீரை பருப்புடன் சமைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.
13. உணவுக்கு ஏற்ற உழைப்பு கட்டாயம் தேவை.
14. காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் உபயோகிக்கவும்.
15. இரவில் படுக்க போகும்முன் திரிபாலா முன் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.
16. வாரம் இருமுறை கசப்பு உணவு சாப்பிடவும்.
17. காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கொஞ்சம் உலர்ந்த திராட்சை சாப்பிடலாம்.
18. உணவில் ஒருநாள் மட்டும் தேவைப்பட்டால் புலால் உணவு. நோயாளிகள் கட்டாயமாக மாமிச உணவு உண்ணக்கூடாது.
20. முட்டை உணவில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். பிராய்லர் கோழி முட்டை சாப்பிடுவது நல்லதல்ல.
21. விதையில்லாத பழங்களை சாப்பிடக்கூடாது. அதில் உயிர் ஆற்றல் இருக்காது.
22. துவர்ப்பு உணவு தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.
23. அமிலத்தன்மையுள்ள உணவுகளை சேர்க்காமல் இருப்பது மிக மிக நல்லது.
24. மாவு பண்டங்கள் சேர்க்காமல் இருப்பது நல்லது. மாவு நோயைத் தரும். மலச்சிக்கல் உண்டாக்கும்.
25. உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவும். தொந்தி குறைய பெல்ட் போடவும்.
26. யோகாசனம் உடல் பருமனுக்கு ஏற்றது. உடல் பருமனைக் குறைக்கும் முறை மூலம் உழைப்பாளிகளும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
27. தினமும் சாப்பிடும் முன் வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கும்.
28. தினமும் அதிகாலை நடந்து, செல்வது நல்லது. “நடை நோய்க்குத் தடை”.
29. தேன் + பூசணிச் சாறு + எலுமிச்சை பழச்சாறு சாப்பிடலாம்.
No comments:
Post a Comment