Pages - Menu

Friday, 28 April 2017

மாதாவின் நேசம்

மாதாவின் நேசம்

அருட்பணி.ச.இ. அருள்சாமி

 திருத்தலங்களுக்கு மக்கள் வந்து வேண்டுதல் செய்வது, நன்றி சொல்வது, நம் மனதை உருக்கும் காட்சியாகும். முடியயடுப்பது அல்லது மொட்டையடிப்பது என்பது அவமானச் செயல். எதிரிகளை மொட்டையடிக்கும் வழக்கம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1குறி 19:4). 

எனக்குசிறுவயதாயிருக்கும் போது எழுநீர் என்ற வியாதி இருந்தது.இந்த  வியாதியால் திடிரென்று முச்சடைத்து, கைகால் வலிப்பு வந்தது போல் இழுக்கும். அப்பொழுதெல்லாம் சரியான  மருத்துவம் இல்லை. என் அம்மா வேளாங்கன்னி மாதாவிடம் நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டு ஜெபித்தார்கள்.  எனது நோய் குணமானால் மும்மொட்டை அடித்து நன்றி செலுத்துகின்றேன் என்று, மும்மொட்டை என்றால் தாய், தந்தை , பிள்ளை முவரும் முடியயடுத்து கொள்ளுதல், எனக்கு முற்றிலும் நீங்கியது. 

எனக்கு19 வயது  நடந்த போது என் அன்னை எனக்கு நினைவூட்டி, நேர்த்திகடனை நிறைவு செய்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 35 வயதுள்ள பெண். என் அன்னை  தன் பிள்ளைக்காக  மொட்டை அடித்துக் கொண்டார்கள் என்றால், மாதாவின் கருணையை எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. திருத்தலங்களில் முடியயடுப்பது, முழங்காலில் சென்று செபிப்பது போன்ற நேர்த்தி செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையை சுமந்து நிற்கும்.

            மாதா, நம் செபங்களை ஆண்டவர் முன்பாக, நம் சார்பாக வைக்கிறாள். இதுதான் இறையியல் விளக்கம். நம் தேவைகளுக்காகத்தான் மாதாவை நோக்கி ஜெபிக்கிறோம். ஆனால் மரியாவின் முதல் செபம், மரியா எலிசபெத்தை சந்தித்து பாடிய புகழ் பாடல், நன்றி  செபம். இந்த புகழ்ச்சி செபத்தில் நம்மை கலந்துக் கொள்ளத்தான் மரியன்னை நம்மை அழைக்கிறார்கள். இந்த புகழ்ச்சி, நன்றி செபம் கடவுளின் பிள்ளைகளின் நாவிலிருந்து அகலக் கூடாது என்கிறார் இரேனியுஸ் என்ற அறிஞர். 

               மரியன்னை இயேசுவின் முழுமையான முதல் சீடர். எனவே அவர் நமக்கு முன்னோடி.

               குடந்தை மறைமாவட்டத்தில் 3 முக்கிய மாதா திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 பூண்டி திருத்தலம்,  இறையடியார் லூர்து சேவியர் அவர்களின் பெரும் முயற்சியால், அவரது புனித வாழ்வினால், மாதாவின் உதவிகள் வழிந்து வரும் தலமாக விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.

17ஆம் நூற்றாண்டில், வீராமமுனிவர், ஏலாக்குறிச்சி என்ற உள்ளாந்திர கிராமத்தில், தஞ்சை மன்னரால், கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை தங்க செய்து அவர்களை பாதுபாத்தார்.மரியன்னை¼, கிறிஸ்தவ மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அடைக்கலமாக விளங்குபவர் என்று மக்கள் அறிய செய்தார். இங்கும்  ஏராளமான மக்கள் சென்று அடைக்கல அன்னையின் உதவியைப் பெற்று  வருகிறார்கள்.

 17ஆம் நூற்றாண்டிலிருந்து ( 1674) பல பெயர் பெற்ற மறைப்பணியாளர்கள், வீரமாமுனிவர், அருளானந்தர் போன்றவர்கள் பணி செய்த இடம் வடுகர்பேட்டை. இங்கு ஆரோக்கிய மாதா திருத்தலம் வளர்ந்து வருகிறது. 
             
தூய மரிய வியானி அருளப்பர் கூறுவார், மரியன்னைக்கு உலக முடிவுரை ஓய்வென்பதில்லை. ஏனென்றால் எப்போதும் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலை உள்ளவளாய் இருக்கிறார். 

மரியாவின் வழி  செல்லாது. இயேசுவின் பணியாளராய் விளங்க முடியாது என்கிறார், ஆயர் தேகோன்சஸ் மாசற்ற மரியன்னை இறைவனின் இதயத்திற்கு உகந்த அரசியாக விளங்குகிறார். எனவே அவளின் பரிந்துரையுடன் செய்கின்ற செபம் எல்லையில்லா வல்லமையுள்ளது. என்கிறார் தூய மாக்ஸ்மில்லியன் கோல்பே. 
தமிழகம் வரட்சியால் காய்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வருகிற ஆண்டில் பருவமழை சீராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வான் பொழியும் நீரை தகுந்த முறையில் சேமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும. குளங்களை துர்ர்எடுத்தல், துVர்க்கப்பட்ட குளங்களை மீட்டெடுத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளை இணைத்தல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் பல விதமான முறையில் கடந்த 45 நாட்களாக போராடி வருகிறார்கள். ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா என்பதைப் போன்று அரசு தன் முகத்தை திருப்பிக்கொண்டிருக்கிறது. 

சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. பணம. பட்டுவாடாக் காரணமாக இது செய்யப்பட்டிருக்கிறது. கொடுக்கும் போது வாங்கினால் என்ன என்ற தவறான எண்ண போக்கு நம் மக்களிடையே உள்ளது. இது மாற வேண்டும். பணம் வாங்குதல் ஊழலடின் முதலெழுத்து. நேர்மை என்ற நேர்க்கோடுதான் உயர்வின் சிறந்த வழி. 
                

No comments:

Post a Comment

Ads Inside Post