Pages - Menu

Monday, 17 April 2017

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்   
                                                                                                                                                                  - சவரி - கெரி
                 
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்காவில் தவக்காலம், கிறிஸ்து உயிர்ப்பு விழா கொண்டாட்டம் பற்றி  பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். தவக்காலத்தில் இங்குள்ள மக்கள் நோன்பிருந்து நிறைய தர்ம செயல்கள்  செய்கிறார்கள். மீனை தவிர மற்ற எல்லா மாமிசங்களையும் சாப்பிடாமல் தவிர்கிறார்கள். வெள்ளி கிழமைகளில் மாலை நேரத்தில் சிலுவைப்பாதை  செபித்து, சமூகமாக கஞ்சியையும், மீன் வருவலையும் (Fishfry) சாப்பிடுகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்கர் இத்தவக்காலத்தில் பிற சமயத்தையைச் சார்ந்தவர், பிற  கிறிஸ்துவ  சபைகளில் உள்ளவர்கள் ஆகியோரை கத்தோலிக்க திருச்சபைக்கு அழைத்து வரும் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த 40 நாள்களும் மறைக் கல்வியைக் கற்பித்து, கிறிஸ்து  உயிர்ப்பு திருநாள் அன்று  திருமுழுக்கு தந்து கத்தோலிக்க  மறைக்கு அழைத்து வருகிறார்கள். நான் செல்லும் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து  உயிர்ப்பு திருநாளன்று சுமார் 25 முதல் 30 பேர் கத்தோலிக்க திருச்சபையில் சேருக்கிறார்கள்.
                இப்பணியில் என்னை மிகவும் கவர்ந்தது, உணவு வங்கி (Food Bank) . உணவு வங்கி  என்பது விவசாயிகள். உணவு அங்காடிகள் ( Food Stores) உழவர் சந்தை ( Farmer Market) இவர்களுடன் இணைந்து  பெரும்பாலும்  தன்னார்வு தொண்டர்களால் ( Volunteer)  இது இயக்கப்படுகிறது. உணவு வங்கிக்கு  விவசாயிகள், உணவு அங்காடிகள் (Food Stores) , உழவர் சந்தைகள்  ஆகியவை உணவு பொருட்களை இலவசமாக கொடுக்கிறார்கள். அதை எடுத்து வந்து தரம்  பிரித்து தேவைபடுவர்களுக்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் உணவு பொருட்கள் கெட்டு விடும். எனவே உணவு பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், அதை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் நிறைய தன்னார்வு தொண்டர்கள்  (Volunteer) இதில் ஈடுபடுகிறார்கள்.  உதவி தேவைப்படுவோர்களின்  தேவையை இங்குள்ள ஆலயங்களிலிருந்தும், தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, அவர்களின் முகவரி, அவர்களின்  வீட்டிற்கு செல்ல வேண்டிய வழிகள்  ஆகியவற்றில் தயாராக வைத்திருக்கிறார்கள். உணவு பொருள் வந்தவுடன் அதை பிரித்து, கட்டி (Pack) தேவைப்படுவர்களுக்கு உடனடியாக கொண்டு சேர்கிறார்கள்.  இந்த  தவக்காலத்தில்  இங்குள்ள மக்கள்  இது  போன்ற அமைப்புகளுக்கு தங்களின் நேரத்தையும், உதவியையும் அளிக்கிறார்கள்.

                  நாமும் இந்த கிறிஸ்து  உயிர்ப்பு  நாளில் பிறருக்கு தொண்டு செய்து  இறைவனின் கருணையையும், அன்பையும் பெறுவோம்.
     
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
 பாரை  உயர்த்திட வேண்டும்.                                                                                                             - பாரதியார்.  

No comments:

Post a Comment

Ads Inside Post