Pages - Menu

Wednesday, 5 April 2017

புனித வெள்ளி

 புனித வெள்ளி
  எசா 52 : 13 - 53:12;     எபி 4:14-18; 5:7-8;      யோவா 18: 1 -19 :42


                         துன்பங்கள் பயத்தைத் தரும்.  அது ஒருவரை நிலை குலையச் செய்யும் . ஆனால் இயேசு துணிவுடன் தன் துன்பங்களை சந்திக்கிறார். அவருக்கு கொடுமை செய்பவர்கள்தான் நிலை  குலைந்து போகின்றனர். ஷேக்ஸ்பியர் கூறுவார் . “எல்லா நற்பண்புகளின் மறுபெயர் துணிவு”  என்கின்றார். (Virtue is bold).  

முர்ரே  என்பவர், “துணிவுக்கு ஞானம்  உண்டு , வல்லமை உண்டு.  அது ஒரு மாந்திரிகம்  (Magic) ”  என்பார்.  பவுல் அடிகளார் , “தூய ஆவி அருளிய திருப்பணி மாட்சியுடையதாய் இருந்தது என்றும் , அதனால், நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்” என்கிறார் (2கொரி 3:12).  

யோவான்,  இயேசுவின் பாடுகளுக்கு முன்பாக மற்ற ஒத்தமைப்பு நற்செய்திகளில் காணப்படும்  கெஸ்தமணி தோட்ட நிகழ்ச்சியை முன் வைக்கவில்லை. இயேசு பிடிபடும் போது ,  “ தானே முன்சென்று  யாரைத் தேடுகிறீர்கள் ” என்று கேட்டு , “ நான்தான்” , என்று தன்னையே தருகிறார். தலைமை குரு இயேசுவின் பணியைப் பற்றி கேட்கும் போது ,   “ ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.  

நான் பேசியதை கேட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்”  என்று துணிவாகக் கூறுகிறார் (யோவா 18 : 19-20).  “தலைமை குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்”  என்று அறைந்தவனிடம்,   “சரியாக பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” (யோவா 18: 23)  என்று கேட்கிறார். பிலாத்து , இயேசுவை சிலுவையில் அறைய தனக்கு   அதிகாரம் உண்டு என்று கூறிய போது , மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது என்று துணிந்து பதில் கூறுகிறார் (யோ 19:11)   லூக்கா நற்செய்தியில் சிரேன் ஊரைச் சேர்ந்த , சிமியோனை இயேசுவின் சிலுவையைச் சுமக்கச்  செய்யும் செய்தியைப் பார்க்கிறோம்  (லூக் 23: 25 ‡ 26) . ஆனால் யோவான் ,  “இயேசு சிலுவையை தாமே சுமந்து கொண்டு,  மண்டை ஓடு  என்னுமிடத்தற்குச்  சென்றார்”  என்கிறார் (யோவா 19 : 17). 

ஒத்தமைப்பு நற்செய்திகளில் ,  இயேசு சிலுவையில் ,  “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” (மாற் 15 : 34;  மத் 27 : 46) என்று இயேசு கூறுகின்ற வார்த்தைகளைத் தருக்கின்றனர்.  ஆனால் யோவான் “தாகமாய் இருக்கிறது” என்று இயேசு கூறியது, மறைநூல் நிறைவேற என்றும் ,   “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி “ஆவியை கையளித்தார்” என்றும் விளக்குகிறார்  (யோவா 19: 28 ‡30). இவ்வாறு இயேசு தன்னையே துணிவுடன் பாடுகளுக்குக் கையளித்ததால் நீரும் = தூய ஆவி  (யோவா 7 : 37 ‡ 39)  இரத்தமும் = தியாகமும்  (1 யோவா 5; 6 -7 : 1:7) வெளிப்பட்டன. 
                                       
துன்பங்கள்  வாழ்வின் நியதி. அதனைக் கண்டு பயந்து ஒதுங்க தேவையில்லை.  

துன்பம்  தருவது பயம்.  பயம் தருவது தோல்வி .  ஆனால் துணிவுத்  தருவது வெற்றி.  

மேக்கில் என்பவர், “துன்பங்கள்,  வாழ்வின் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் ”  என்கிறார். 

ரூமி என்பவர்  “காயங்கள் வழியாகத்தான் வாழ்வின்  ஒளி உன்னில் நுழைகிறது” என்கிறார்.  

நாம் தாங்கும் துன்பங்கள்  நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும்  பெரும் பலன்களைத் தருகிறது.  

ஓர் ஆசிரியர்,  அவர்க்கு  கைநிறைய சம்பளம், வாழ்க்கை நன்கு ஓடியது. மற்றவர்களுக்கும் தாராளமாக உதவி செய்வார். அவரின் தங்கைக்கு   திருமணமாகவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு  உதவி செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் கடன் வாங்கி விட்டாள்.  அவள் ஒருமன பேதகம் போல செய்து விட்டாள் ,  இப்போது அப்பெண்ணின்  அண்ணன்  தங்கையின்  சுமையைத்  தாங்கி கொண்டு , தங்கைக்காகத்  துன்பங்களை தாங்குகிறார். அப்பெண்ணிற்கு வியாதிவந்து சாகும் நிலையில் தன் அண்ணனின்  கைகளைப்  பிடித்துக் கொண்டு ,  “எனக்கு வாழ்வு கொடுத்ததற்கு நன்றி அண்ணா”  என்று  சொல்லி  இறந்தாள்.

No comments:

Post a Comment

Ads Inside Post